என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் கன்சோல்கள் உலகம் முழுக்க பிரபலமாக உள்ளன.
    • சோனி கடைசியாக அறிமுகம் செய்த பிளே ஸ்டேஷன் 5 விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றது.

    சோனி நிறுவனம் முற்றிலும் புதிய பிளே ஸ்டேஷன் 5 மாடலை உருவாக்கும் பணிகளில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட பிளே ஸ்டேஷன் 5 தற்போது புது வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது மாடல் பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ பெயரில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் புதிய பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ அறிமுகம் செய்ய சோனி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ அறிமுகமாகும் என கூறப்படுகிறது. எனினும், இதுவரை சோனி நிறுவனம் புதிய பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ வெளியீடு பற்றி எந்த தகவலையும் வழங்கவில்லை.

    2020 இறுதியில் சோனி பிளே ஸ்டேஷன் 5 அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் ப்ரோ வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன. சோனி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை கன்சோல் பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ தான் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் சோனி நிறுவனம் பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது.

    டாப் எண்ட் மாடல் என்பதால் புதிய பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ மாடலில் மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். அதன்படி புது கன்சோலில் AMD நிறுவனத்தின் புதிய APU சிப்செட், டிசைனில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்படும் என தெரிகிறது. மேலும் இதன் தெர்மல் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தில் மிக முக்கிய மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    அந்த வகையில் புது பிளே ஸ்டேஷன் 5 ப்ரோ மாடலில் வாட்டர் கூலிங் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய பிளே ஸ்டேஷன் 5 மாடல்களில் கூலிங் ஃபெயிலிங் மற்றும் லிக்விட் மெட்டல் லீக் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதால், இதன் மேம்பட்ட வெர்ஷனில் வாட்டர் கூல்டு முறைக்கு மாற சோனி முடிவு செய்திருக்கலாம்.

    • டெக்னோ நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் IPX2 ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி உள்ளது.

    டெக்னோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 2023 மாடலில் 6.56 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே, 120Hz ச் சாம்ப்லிங் ரேட், மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

    டெக்னோ ஸ்பார்க் கோ 2023 அம்சங்கள்:

    6.56 இன்ச் 1612x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே, 480 நிட்ஸ் பிரைட்னஸ்

    2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர்

    3 ஜிபி ரேம்

    32 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஹைஒஎஸ் 12

    டூயல் சிம் ஸ்லாட்

    13MP பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ்

    AI லென்ஸ்

    5MP செல்ஃபி கேமரா

    டூயல் மைக்ரோ ஸ்லிட் ஃபிலாஷ் லைட்

    பின்புறம் கைரேகை சென்சார்

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 2023 எண்ட்லெஸ் பிளாக், உயுனி புளூ மற்றும் நெபுளா பர்பில் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • ஆப்பிள் நிறுவனம் சர்வதேச சந்தையில் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளராக இருக்கிறது.
    • கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ஆப்பிள் தனது புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.

    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் இருந்து ஒரே மாதத்தில் ஒரு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்த முதல் நிறுவனம் எனும் பெருமையை பெற்று இருக்கிறது. மத்திய அரசின் "மேக்-இன்-இந்தியா" திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரூ. 8 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான ஐபோன்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் இருந்து ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்வதில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இது குறித்த அரசு தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் முன்னணி மொபைல் போன் ஏற்றுமதியாளராக சாம்சங்கை முந்தி இருக்கிறது.

    ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் போன்ற மாடல்களை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் ஃபாக்ஸ்கான் ஹான் ஹாய், பெகட்ரான் மற்றும் விஸ்ட்ரன் போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களின் ஆலைகளை தமிழ் நாடு மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் இயக்கி வருகின்றன. இவற்றுக்கு மத்திய அரசின் ஸ்மார்ட்போன் ப்ரோடக்ஷன்-லின்க்டு-இன்செண்டிவ் (PLI) திட்டத்தின் கீழ் உள்ளன. இந்த திட்டம் ஏப்ரல் 2020 வாக்கில் அறிவிக்கப்பட்டது.

    மத்திய அரசின் PLI திட்டமானது இந்தியாவை ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதன உதிரிபாகங்களின் உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தில் பங்கேற்க உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி , ஏற்றுமதி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக தகவல்களை வழங்க வேண்டும்.

    மூன்று ஒப்பந்த உற்பத்தியாளர்கள் தவிர, மேலும் சிறு இந்திய நிறுவனங்களும் இந்தியாவில் இருந்து ஐபோன்களை ஏற்றுமதி செய்து வருகின்றன. 2022-23 நிதியாண்டில் இந்தியா 9 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய ஆண்டில் இருந்த 5.8 பில்லியன் டாலர்களை விட அதிகம் ஆகும். 

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகமாக இருக்கும் நிலையில், அதன் விவரங்கள் வெளியாகி வருகின்றன.
    • ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒன்பிளஸ் நிறுவனம் கீபோர்டு ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 7 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒன்பிளஸ் கீபோர்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய ஒன்பிளஸ் கீபோர்டு புகைப்படமும் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி இந்த கீபோர்டு மெக்கானிக்கல் டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஒன்பிளஸ் வலைதளத்தில் உள்ள பிரத்யேக மைக்ரோசைட்-இல் இந்த சாதனம் டெஸ்டிங் நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்படும் நிலையில், மார்ச் மாத வாக்கில் உற்பத்திக்கு வரும் என தெரிகிறது.

    இந்திய வெளியீட்டை தொடர்ந்து ஒன்பிளஸ் கீபோர்டு மாடல் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் கீபோர்டு வைட் நிற டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது. புகைப்படங்களின் படி ஒன்பிளஸ் கீபோர்டு ஃபன்ஷன், பேக்ஸ்பேஸ், டெலிட், பேஜ் அப் மற்றும் பேஜ் டவுன் பட்டன்களுடன், ரெட் நிற பட்டன் ஒன்றும் இடம்பெற்று இருக்கிறது.

    இந்த கீபோர்டு "டபுள் காஸ்கெட்-மவுண்ட் செய்யப்பட்ட டிசைன்" கொண்டிருக்கும் என்றும் பிரத்யேக லேவுட் மற்றும் ப்ரோஃபைல் கொண்டிருக்கும் என ஒன்பிளஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் கீபோர்டு மேக், லினக்ஸ் மற்றும் விண்டோஸ் என இருவித சாதனங்களுடனும் சீராக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஒன்பிளஸ் கீபோர்டு மேம்பட்ட, கஸ்டமைஸ் செய்யப்பட்ட அம்சங்கள், ஒபன்-சோர்ஸ் ஃபர்ம்வேர் கொண்டிருக்கிறது. இத்துடன் இந்த கீபோர்டு RGB லைட்டிங் வசதி கொண்டுள்ளது.

    Photo Courtesy: 91Mobiles

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீடு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.
    • புதிய சீரிசில் கேலக்ஸி S23, S23 பிளஸ் மற்றும் S23 அல்ட்ரா மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S23 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஆண்டிற்கான முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புது ஸ்மார்ட்போன்களின் டீசரை சாம்சங் வெளியிட்டு வருகிறது.

    தற்போது சாம்சங் வெளியிட்டு இருக்கும் புதிய யூடியூப் ஷாட்ஸ் வீடியோவில், புது கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் ஸ்பேஸ் ஜூம் மற்றும் நைட் மோட் வசதிகளை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் சாம்சங் நிறுவனம் ஸ்பேஸ் ஜூம் அம்சத்தை வழங்க இருக்கிறது. இத்துடன் நைட் மோட் புகைப்படம் மற்றும் வீடியோ படமாக்கும் அனுபவத்தை சாம்சங் புது கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் வழங்குகிறது.

    சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    புதிய சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் QHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி வழங்கப்படும் என தெரிகிறது.

    புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, 12MP இரண்டாவது கேமரா மற்றும் டெலிபோட்டோ சென்சார்கள் வழங்கப்படுகிறது. கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என்றும் அதிகபட்சம் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜஜிங் வசதி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    புது ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை ஒட்டி இவற்றை வாங்க முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி 1 ஆம் தேதி நள்ளிரவு இந்திய நேரப்படி 11.30 மணிக்கு துவங்க இருக்கிறது. 

    • இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
    • இன்ஃபினிக்ஸ் நோட் 12 சீரிசில் - நோட் 12 5ஜி, நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் 4ஜி வேரியண்ட்கள் கிடைக்கின்றன.

    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக டீசர் வெளியிட்டு இருந்தது. அந்த வகையில், இன்ஃபினிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஜனவரி 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. ப்ளிப்கார்ட் வலைதளத்தில் புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதில் புது ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது. ஏற்கனவே இன்ஃபினிக்ஸ் நோட் 12 சீரிசில் - நோட் 12 5ஜி, நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் 4ஜி வேரியண்ட்கள் உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் இன்ஃபினிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்பஓன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ப்ளிப்கார்ட் தளத்தில் உள்ள தகவல்களின் படி இதன் இந்திய வேரியண்ட் சர்வதேச வெர்ஷனில் உள்ள அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் டூயல் டோன் டிசைன், பேக் பேனலின் ஒருபுறம் கிளாஸ் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள பேனலில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் செவ்வக கேமரா மாட்யுல் நேராக பொருத்தப்பட்டு இருக்கிறது. இதில் 50MP பிரைமரி கேமரா, டெப்த் லென்ஸ், ஏஐ யூனிட் உள்ளது.

    இத்துடன் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், வாட்டர் டிராப் நாட்ச், வைடுவைன் L1 சான்று, 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 8MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், 4 ஜிபி ரேம், 3 ஜிபி விர்ச்சுவல் ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த XOS 12 வழங்கப்பட்டுள்ளது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஐபோன் 14 மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 14-க்கு தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் ஐபோன் 14 மாடல் இந்திய சந்தையில் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ. 79 ஆயிரத்து 900 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 தற்போது ரூ. 73 ஆயிரத்து 999 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஹெச்டிஎப்சி வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 4 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் ஐபோன் 14 விலை ரூ. 69 ஆயிரத்து 999 என மாறி விடும். இது ஐபோன் 14 மாடலின் பேஸ் வேரியண்ட் (128ஜிபி) விலை ஆகும். இதுதவிர ஐபோன் 14 மாடல் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மேலும் இரண்டு விதமான மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ஐபோன் 14 அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 2532x1170 பிக்சல் ரெசல்யூஷன், ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP ட்ரூடெப்த் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏராளமான கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 14 மாடலில் கிராஷ் டிடெக்ஷன் மற்றும் எமர்ஜன்சி SOS அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. செயற்கைக்கோள் உதவியுடன் இயங்கும் இந்த அம்சம் முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள கிராஷ் டிடெக்ஷன் விபத்துக்களை அறிந்து கொண்டு தானாக அவசர உதவி எண்களை அழைத்துவிடும். புது ஐபோன் வாங்க நினைப்போர் இந்த சமயத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடல் மிட்நைட், பர்ப்பில், ஸ்டார்லைட், பிராடக்ட் ரெட் மற்றும் புளூ போன்ற நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    • இன்ஸ்டாகிராம் தளத்தில் வழங்கப்படும் புது அம்சம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்கிறது.
    • இந்த அம்சம் முதற்கட்டமாக அமெரிக்கா, பிரிட்டன், ஐயர்லாந்து, கனடா என தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது.

    மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் "Quiet Mode" பெயரில் புது அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பயனர்கள் தளத்தில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க உதவுகிறது. செயல்படுத்தும் பட்சத்தில், Quiet Mode அம்சம் நோட்டிஃபிகேஷன்களை மியூட் செய்து, டைரக்ட் மெசேஜ்களுக்கு தானாக பதில் அளிக்கிறது.

    புதிய இன்ஸ்டாகிராம் அம்சம் தற்போது அமெரிக்கா, பிரிட்டன், ஐயர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என உலகின் சில நாடுகளில் மட்டும் முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. இந்தியா உள்பட மற்ற நாடுகளில் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் இளைஞர்கள் கோரிக்கையை அடுத்து வழங்கப்பட்டுள்ளது.

    இந்த Quiet Mode மோட் பயனர்கள் கஸ்டமைஸ் செய்ய முடியும். ஷெட்யுல் செய்ததும், இந்த அம்சம் நோட்டிஃபிகேஷன்களை விரைவாக காண்பிக்கிறது. அனைவரும் Quiet Mode அம்சத்தை பயன்படுத்தலாம், எனினும், இளைஞர்கள் இதனை பயன்படுத்த பரிந்துரை வழங்குவோம் என இன்ஸ்டாகிராம் தெரிவித்து இருக்கிறது.

    இதுதவிர இன்ஸ்டாகிராம் செயலியில் பேரண்டல் சூப்பர்விஷன் டூல்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இவை பயனர்கள் தளத்தில் பார்க்கும் தரவுகளை அதிகளவில் கண்ட்ரோல் செய்ய உதவும். பரிந்துரைகளில் துவங்கி, பயனர்கள் இனி தங்களுக்கு விருப்பமில்லாத தரவுகளை மறைத்து வைக்க செய்யலாம். இந்த வசதி explore feed மட்டுமின்றி ரீல்ஸ், சர்ச் உள்ளிட்டவைகளிலும் இயங்குகிறது.

    பரிந்துரைக்கப்படும் பதிவுகளின் கமெண்ட்ஸ் மற்றும் டைரக்ட் மெசேஜ்களில் குறிப்பிட்ட வார்த்தைகளை மறைக்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான வசதியை பிரைவசி செட்டிங்ஸ்-இல் உள்ள Hidden Words பகுதியில் இயக்க முடியும்.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஹோம்பாட் மினி மற்றும் ஐமேக் மாடல்களின் விலை மாற்றப்பட்டு இருக்கிறது.
    • இரு சாதனங்களின் புதிய விலை விவரங்கள் ஏற்கனவே ஆப்பிள் வலைதளத்தில் அமலுக்கு வந்து விட்டன.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் இரண்டாம் தலைமுறை ஹோம்பாட் மாடலை அறிமுகம் செய்தது. இத்துடன் மேக்புக் ப்ரோ மற்றும் புது மேக் மினி மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் ஏற்கனவே விற்பனை செய்து வரும் ஹோம்பாட் மினி மற்றும் 24 இன்ச் ஐமேக் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. மேலும் உயர்த்தப்பட்ட புது விலை விவரங்கள் ஏற்கனவே ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மாற்றப்பட்டு வட்டது. எனினும், ஆப்பிள் விற்பனையாளர்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் இன்னமும் பழைய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆப்பிள் ஹோம்பாட் மினி 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் உண்மை விலை ரூ. 9 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது இதன் விலை ரூ. 1000 உயர்த்தப்பட்டு ரூ. 10 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது. ஹோம்பாட் மினி மாடலில் S5 மற்றும் U1 சிப்செட்களுடன் நான்கு மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    24-இன்ச் ஐமேக் மாடல் 2021 ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 8 ஜிபி / 16 ஜிபி ரேம் ஆப்ஷன்களில், 8-கோர் சிபியு, 7-கோர் ஜிபியு மற்றும் 8-கோர் சிபியு + 8 கோர் ஜிபியு ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஐமேக் மாடலின் அனைத்து வெர்ஷன்களின் விலையும் ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    விலை உயர்வின் படி பேஸ் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது.

    • விவோ நிறுவனத்தின் புது ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 9200 சிப்செட் கொண்டிருக்கிறது.
    • விவோ X90 மற்றும் X90 ப்ரோ மாடல்கள் விவோ மற்றும் செய்ஸ் ஆப்டிக் பிராண்டிங் கொண்டிருக்கிறது.

    விவோ X90 மற்றும் X90 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 3 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இரு ஸ்மார்ட்போன்களும் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் விவோ X90 ப்ரோ பிளஸ் மாடலும் இடம்பெற்று இருக்கிறது.

    டிப்ஸ்டர் பரஸ் குக்லானி விவோ X90 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரிடெயில் பாக்ஸ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த ஸ்மார்ட்போன் எளிமையான டிசைன் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் ரிடெயில் பாக்ஸ்-இல் விவோ X90 ப்ரோ பிராண்டிங், செய்ஸ் ஆப்டிக்ஸ் வழங்கப்படுகிறது. இது செவ்வக வடிவம் கொண்டிருப்பதோடு, சார்ஜிங் அடாப்டர் வழங்கப்படுகிறது.

    விவோ X90 மற்றும் விவோ X90 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் பிப்ரவரி 3 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் முன்பதிவு ஜனவரி 27 ஆம் தேதி துவங்கும் என்றும் கூறப்படுகிறது. சீன சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன் அம்சங்கள் ஏற்கனவே அம்பலமாகி விட்டன.

    விவோ X90, X90 ப்ரோ அம்சங்கள்:

    விவோ X90 மாடலில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 2800x1260 பிக்சல் 120Hz ரிப்ரெஷ் ரேட், பன்ச் ஹோல் கட் அவுட், HDR10+, மீடியாடெக் டிமென்சிட்டி 9200 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி UFS 4.0 மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒரிஜின் ஒஎஸ் 3 வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க விவோ X90 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP போர்டிரெயிட் கேமரா, 12MP அல்ட்ரா வைடு சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 4810 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் 5ஜி, 4ஜி, எல்டிஇ, டூயல் பேண்ட் வைபை 6, ப்ளூடூத் 5.2 மற்றும் யுஎஸ்பி டைப் சி வழங்கப்படுகிறது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சத்தமின்றி இரண்டு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • இரண்டு புது சலுகைகளும் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகின்றன.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 899 மற்றும் ரூ. 349 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இரு புதிய ஜியோ சலுகைகளும் மைஜியோ செயலி, ஜியோ வலைதளம் மற்றும் இதர மூன்றாம் தரப்பு வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு உள்ளன.

    புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஜியோ சலுகைகளில் அதிகபட்சம் 90 நாட்களுக்கான வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்புகள், 2.5 ஜிபி டேட்டா மற்றும் இதர பலன்கள் வழங்கப்படுகின்றன. ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349 சலுகை தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இதில் வேலிடிட்டி காலம் முழுக்க 75 ஜிபி டேட்டா கிடைக்கும்.

    இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் உள்ளிட்டவைகளுக்கான சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதுதவிர அறிமுக சலுகையாக 5ஜி டேட்டாவும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 899 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங்,தினமும் 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

    இந்த சலுகையிலும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் சந்தா வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 349 சலுகை போன்றே ரூ. 899 சலுகையிலும் ஜியோ அறிமுக சலுகை பொருந்தும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை நாடு முழுக்க 100 நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை வழங்கி இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிட ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.

    • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
    • புது கேலக்ஸி ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வெளியீட்டுக்கு முன் புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி ஏராளமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் கேலக்ஸி S23 சீரிஸ் ஆஸ்திரேலிய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது.

    தற்போது அமெரிக்க விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. வெரிசான் தரவுகளில் இருந்து புதிய விலை விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி சாம்சங் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ்-க்கு பழைய விலையையே நிர்ணயம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவிற்கும் இதே நிலையை பின்பற்ற சாம்சங் முடிவு செய்திருக்கும் என தெரிகிறது.

    விலை விவரங்கள்:

    சாம்சங் கேலக்ஸி S23 பேஸ் வேரியண்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 64 ஆயிரத்து 950 என துவங்கும் என கூறப்படுகிறது. இதன் 256 ஜிபி விலை விவரங்கள் மர்மமாகவே உள்ளது. கேலக்ஸி S23 பிளஸ் 8 ஜிபி ரேம் விலை 999 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 81 ஆயிரத்து 134 என துவங்கும் என தெரிகிறது. கேலக்ஸி S23 பிளஸ் மாடலின் பேஸ் வேரியண்ட் 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    வழக்கமாக சாம்சங் நிறுவனம் தனது புதிய மாடல்களின் விலையை அதன் முந்தைய வெர்ஷனை விட ரூ. 3 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி S22 சீரிஸ் துவக்க விலை ரூ. 72 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில், விலையை மாற்ற வேண்டாம் என சாம்சங் முடிவு செய்யும் பட்சத்தில் கேலக்ஸி S23 துவக்க விலை ரூ. 72 ஆயிரத்து 999 என்றே நிர்ணயம் செய்யப்படும்.

    அம்சங்களை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி S23 மாடலில் அதிகபட்சம் 1750 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட AMOLED இன்ஃபினிட்டி O ஃபிளாட் ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் அனைத்து சந்தைகளிலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இதன் முன்புறம் 12MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் மாடல்களில் முறையே 3900 எம்ஏஹெச் மற்றும் 4700 எம்ஏஹெச் பேட்டரிகள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 2000 எம்ஏஹெச் பேட்டரி பூஸ்ட் வழங்கப்படுகிறது.

    ×