search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு அரங்கம்"

    • ஒரு வார காலத்திற்குள் பணியை முடிக்க திட்டம்
    • ஏராளமான பொதுமக்கள் வாக்கிங் செல்வதற்கும் இந்த மைதானத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த விளை யாட்டு அரங்கங்களில் அண்ணா விளையாட்டு அரங்கமும் ஒன்றாகும். 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த விளையாட்டு அரங்கத்தை பராமரிக்க நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 8 கேலரிகள் உள்ளன. மாவட்ட அள விலான கைப்பந்து போட்டி, கபடி போட்டி மற்றும் மின்னொளி விளை யாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. காலை, மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் வாக்கிங் செல்வதற்கும் இந்த மைதானத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    ராணுவத்தில் சேர விரும்பும் ஏராளமான இளைஞர்கள், மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்து ஓட்ட பயிற்சி உள்ளிட்ட பயிற்சி களை மேற்கொண்டு வருகி றார்கள். இந்த மைதானத்தில் உள்ள கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் உள்ளது. இதை பராமரிக்க வேண்டும் என்பது அனை வரின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதை யடுத்து இந்த மைதானத்தை சீரமைக்க ஏற்கனவே விளையாட்டு துறை சார்பில் ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கேலரிகள் பராமரிக் கப்பட்டது.

    மேலும் இங்குள்ள அறைகள் உட்பட அனைத்தையும் பராமரிக்க ரூ.1கோடியே 40 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப் பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில் 50 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்த மைதானத்தில் போதிய மின்விளக்கு வசதிகளும் இல்லாமல் இருந்து வந்தது. இரவு நேரங்களில் மாநில அளவிலான, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படும் போது தற்காலிகமாக மின் விளக்குகள் அமைக்கப் படும்.

    நிரந்தரமாக மின்விளக்கு அமைக்க முன்னாள் எம்.பி விஜயகுமார் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தார். அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது 4 உயர் கோபுர மின் விளக்கு கள் அமைக்க டெண்டர் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. விளையாட்டரங்கத்தில் நான்கு புறங்களிலும் இந்த உயர் கோபுரம் மின் விளக்கு அமைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த மின் விளக்குகள் அமைப்பதற்கு தேவையான உபகரணங்கள் ஏற்கனவே வெளியிடங்களில் இருந்து அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கொண்டு இறக்கி வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அந்த பணியை தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    ஒரு வார காலத்திற்குள் இந்த பணியை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 4 உயர் கோபுர மின் விளக்கு கள் அமைக்கும் பொழுது இரவை பகலாக்கும் வகை யில் மின் விளக்குகள் அமையும். மாநில அள விலான மாவட்ட அளவி லான போட்டிகள் நடத்தப்ப டும் போது இது பய னுள்ளதாக இருக்கும் என்று விளையாட்டு வீரர்கள் கருதுகிறார்கள்.

    மின்விளக்கு வசதி மட்டுமின்றி மற்ற அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விளை யாட்டு அலுவலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. அண்ணா விளை யாட்டு அரங்கத்தை ஒட்டி யுள்ள நீச்சல் குளம் கடந்த சில நாட்களாக போதிய பராமரிப்பு இன்றி காணப்பட்டது. தற்பொழுது சீரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் நீச்சல்குளம் காட்சியளிக்கிறது. நீச்சல் குளத்திற்கு வரும் பாதையும் சீரமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் 35-க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சி பெற்று வருகி றார்கள்.

    நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் பராமரிப்பு பணிகள் ஒருபுறம் இருக்க சட்டமன்ற தொகுதி வாரியாக சிறு விளையாட்டு மைதானங்களை அமைப்ப தற்கு தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குமரி மாவட் டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மைதா னங்கள் அமைப்ப தற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பத்மநாபபுரம் தொகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மைதா னங்கள் அமைக்கப்படும் போது விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    • 7 ஏக்கர் பரப்பளவில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க இடத்தை தேர்வு செய்தும் விரைவில் பணிகளை தொடங்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.
    • சிறப்பாக விளையாட்டு அரங்கம் செயல்பட முழு ஒத்துழைப்பை பஞ்சாயத்து மூலம் கொடுப்போம் என்றார்.

    காங்கயம் :

    தமிழகத்தில் விரைவில் 10 சட்டமன்ற தொகுதியில் அரசின் பொது நல புதிய திட்டங்களில் ஒன்றான சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் காங்கயம் சட்டமன்ற ெதாகுதிக்குட்பட்ட சிவன்மலை ஊராட்சி எல்லையான கல்லேரி ரோட்டில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க அதற்கான இடத்தை தேர்வு செய்தும் விரைவில் பணிகளை தொடங்கவும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து திருப்பூர் கலெக்டர் வினீத் இடத்ைத நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது காங்கயம் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் மகேஷ்குமார் தலைமையில் சிவன்மலை பஞ்சாயத்து தலைவர் துரைசாமி, துைண தலைவர் சண்முகம், காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், படியூர் பஞ்சாயத்து தலைவர் ஜீவிதா சண்முக சுந்தரம், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் பாலசுப்பிரமணியம், சிவன்மலை கிளை தி.மு.க. செயலாளர் சிவகுமார் முன்னிலையில் கலெக்டருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சிவன்மலை பஞ்சாயத்து செயலாளர் காளியம்மாள் நன்றி கூறினார். இது பற்றி சிவன்மலை பஞ்சாயத்து தலைவர் கே.கே.துரைசாமி கூறும் போது, தமிழகத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் தொடங்கப்படும் தமிழக அரசின் சிறு விளையாட்டு அரங்கம் எங்களது காங்கயம் தொகுதியில் அதுவும் குறிப்பாக நமது சிவன்மலை பஞ்சாயத்து எல்லையில் அமைய உள்ளதை வரவேற்கிறோம். இளைஞர்கள், இளம்பெண்களின் உடல், மனநலம் மற்றும் எதிர்கால நலன் கருதி சிறப்பாக விளையாட்டு அரங்கம் செயல்பட நாங்கள் முழு ஒத்துழைப்பை எங்களது பஞ்சாயத்து மூலம் கொடுப்போம் என்றார். 

    • மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு
    • நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீசார் ரோந்து

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நாளை நடக்கிறது.

    விழாவில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடும் அவர், நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். குடியரசு தின விழாவில் 500 பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி களும் நடக்கிறது.

    இதையடுத்து போலீ சாரின் அணிவகுப்பு ஒத்தி கை நிகழ்ச்சி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்தது. இதில் போலீசார், தீயணைப்பு படையினர், என்.சி.சி. மாணவர் படை யினர் கலந்து கொண்ட னர். இதையடுத்து அண்ணா விளையாட்டு அரங்கம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    விழா நடைபெறும் மைதானத்தில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அண்ணா விளை யாட்டு அரங்க வாசலில் மெட்டல் டிடெக்டர் வாசல் அமைக்கப்பட்டு உள்ளது. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குடியரசு தினத்தை ஒட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தரவின் பேரில் பாதுகாப்பு பணி யில் 1200 போலீசார் ஈடு படுத்தப்பட்டு உள்ளனர்.

    நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிசனங்களுக் குட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்றிரவு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. லாட்ஜ்களில் சந்தேகப்படும் படியான நபர்கள் தங்கி யுள்ளார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு உள்ள வருகை பதிவேட்டை யும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதிகளில் உள்ள லாட்ஜிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. மாவட்ட எல்லை பகுதி களில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட்டு வரு கிறது. அஞ்சு கிராமம், ஆரல்வாய்மொழி, களியக் காவிளை சோதனை சாவடி யில் போலீசார் கண் காணிப்பு பணியை மேற் கொண்டனர்.

    கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். கடலோர காவல் படை போலீசாரும் கண் காணிப்பு பணியை மேற் கொண்டு வருகிறார்கள். சந்தேகப்படும் படியாக யாராவது சுற்றி திரிகிறார் களா? என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலை மையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் உடை மைகளை போலீசார் சோதனை செய்து வருகிறார் கள். நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து வெளி யூர்களுக்கு அனுப்ப வைக்கப்பட்டிருந்த பார்சல் களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை மேற்கொண்டனர்.

    ரெயில் தண்டவாளங்களி லும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது. கன்னியா குமரி, நாங்கு நேரி, வள்ளியூர், இரணியல், குழித்துறை ரெயில் நிலையத்திலும் கூடுதல் போலீசார் பாது காப்பு பணிக்கு நியமிக்கப் பட்டுள்ளனர். நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திலும் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டு உள்ளது ரெயில்வே பாலங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களி லும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இறகுபந்து உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
    • இதன் திறப்பு விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் ஒக்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இறகுபந்து உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

    இதை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

    இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாகவும், அவர்களின் உடல்நலத்தை பேணிக்காக்கும் வகையிலும் விளையாட்டு அடிப்படையாக அமைகிறது. அந்த விளையாட்டை கிராம பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பெறுவதற்கு ஏதுவாக அரசுடன் இணை ந்தும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ஒக்கூர் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசு நிதி ரூ.13.56 லட்சமும், பங்களிப்பு நிதியாக ரூ.13.50 லட்சமும் என மொத்தம் ரூ.27.06 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இறகுபந்து உள்விளையாட்டு அரங்கம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கிராம மக்களுக்கு பயனுள்ள வகையிலும், அருகிலுள்ள கிராமப்புறப்பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு பயனுள்ள வகையிலும், உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

    இதுபோன்று கிராமப்புற பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அரசுடன் இணைந்து, மக்கள் பணியாற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சேக்கப்ப செட்டியார், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வானதி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் மகேஸ்வாி கண்ணன். ஒக்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூமா அருணாசலம், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், வட்டாட்சியர் தங்கமணி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்ப பலர் கலந்து கொண்டனர்.

    ×