search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளம்பர பலகை"

    • பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகள் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று அமைக்க வேண்டும்.
    • சட்டவிதிகளின்படி சமர்ப்பிக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆணையாளரால் உரிமம் வழங்கப்படும்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் சட்டவிதிகளின்படி 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் எச்சரித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகளின் சட்டத்தின்படி விளம்பர பலகைள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகள் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று அமைக்க வேண்டும். சட்டவிதிகளின்படி சமர்ப்பிக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆணையாளரால் உரிமம் வழங்கப்படும். இதுநாள் வரையிலும் அனுமதி பெறாமல் விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகள் வைத்துள்ளோர் 3 நாட்களுக்குள் உரிய பாதுகாப்புடன் தாங்களாகவே விளம்பர பதாகைகள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டிகளை அகற்றிக்கொள்ள வேண்டும். தவறினால் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் 1998 பிரிவு 117-ன்படி மாநகராட்சி மூலம் அகற்றப்படுவதுடன் உரிய செலவுத்தொகை உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். மேலும் சட்டப்பிரிவு 117-யு-பிரிவின்படி குற்ற வழக்கு தொடரப்பட்டு 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

    • விளம்பர பலகைகளை வைப்பதற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • சென்னை மாநகராட்சி வருவாய் ஈட்டும் வகையில் விளம்பர பலகைகளை வைப்பதற்கு விரைவில் அனுமதி அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விளம்பர பலகைகள் சரிந்து விழுந்து பல விபத்துகள் இதற்கு முன்பு நடை பெற்றுள்ளன. இதையடுத்து விளம்பர பலகைகளை வைப்பதற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னை மாநகராட்சி வருவாய் ஈட்டும் வகையில் விளம்பர பலகைகளை வைப்பதற்கு விரைவில் அனுமதி அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2022 ஐ இன்னும் சில தினங்களில் செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சட்டம் நடை முறைக்கு வந்து பொது இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டால் அது சிங்கார சென்னையின் அழகை கெடுக்கும் என்றும் சிங்கார சென்னையின் சிறப்பையே சீரழித்துவிடும் என்றும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த விளம்பர பலகைகள் அமைக்க அனுமதி அளிக்கும் செயல்பாடு மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் எண்ணத்தில் அமல்படுத்தப்பட இருப்பதாகவும், பாதுகாப்பான வகையிலேயே அது செயல்படுத்தப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த அனுமதிக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாகவே குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது விளம்பர பலகைகளை வைப்பதன் மூலம் மக்கள் மத்தியில் அது விழுந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்படுவது அதிகரித்துவிடும் என்றனர். தெருவுக்கு தெரு பெயர் பலகைகளை வைத்து விடுவார்கள் என்றும் அவர்கள் ஆதங்கப்பட்டனர்.

    இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, விளம்பர பலகைகளை வைப்பதற்கு அனுமதி அளிப்பது என்பது தவறான முடிவாகும். இது வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி விபத்துகள் ஏற்பட வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    • விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • 10-ந் தேதி முதல் அனுமதியற்ற பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள் அகற்றப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், அனைத்து வணிக மற்றும் வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக, உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள், விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    எனவே அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் வைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளையும் வருகிற 9-ந் தேதிக்குள் தாங்களாகவே அகற்றிட வேண்டும். இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலமாக வருகிற 10-ந் தேதி முதல் அனுமதியற்ற பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    • பலகைகளை அகற்ற முடியாமல் மாநகராட்சி தடுமாறி வருகின்றனர்.
    • மீண்டும் இரவோடு, இரவாக விளம்பர பலகைகளை வைத்து விடுகின்றனர்.

    கோவை -

    சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு அறிவுறத்தல்களை மீறி கோவை நகர் பகுதிகளில் அனுமதியற்ற விளம்பர பலகைகள் அடிக்கடி வைக்கப்பட்டு வருகின்றன.

    மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் இதனை பார்த்து அகற்றினாலும், மீண்டும் இரவோடு, இரவாக விளம்பர பலகைகளை வைத்து விடுகின்றனர்.

    இதுபேன்ற விளம்பர பலகைளை அகற்றி னாலும், மீண்டும் வைக்காமல் இருக்க இரும்பு கம்பிகளையும் வெட்டி அகற்ற நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டிருந்தார்.ஆனால் மாநகராட்சி யால் பிளாக் லிஸ்டில் வைக்கப்பட்ட ஒரு நிறுவனம் கோவையில் உள்ள பஸ் நிறுத்தங்களில் தங்களது விளம்பர பலகைகளை வைத்து வருகிறது.

    இந்த பலகைகளை அகற்ற முடியாமல் மாநகராட்சி தடுமாறி வருகின்றனர்.

    இந்த நிலையில் டவுன்ஹால் மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு அருகேயே என்.எச்.ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜின் மாடியில் இருபுறங்க ளிலும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், கோர்ட்டு அறிவுறு த்தல்களை மீறி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.

    இந்த தகவல் மாநகராட்சி கமிஷனர்(பொ)ஷர்மிளா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அவர் விளம்பர பலகைகளை அகற்றவும், அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.

    மாநகராட்சி மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் பாபு தலைமையில் சென்ற அதிகாரிகள் குழுவினர் கள ஆய்வு செய்து, அந்த லாட்ஜூக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். விளம்பர பலகை மற்றும் இரும்பு கம்பிகளை அகற்றாவிட்டால், லாட்ஜூக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.

    ×