search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருப்ப ஓய்வு"

    • போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தனது பணிகாலம் முடிவதற்கு 6 மாதத்திற்கு முன்பே விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 மாதங்கள் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மோகன்ராஜ் கடந்த3.1.2023-ந் தேதி பொறுப்பேற்றார். இவர் ஓய்வு பெற கூடிய காலம் 31.5.2024-ந் தேதி ஆகும்.

    ஆனால் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தார். அதன்படி கடந்த 3 மாதத்திற்கு முன்பு விருப்ப ஓய்வு பெறுவதற்கான மனுவை தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவாலுக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு விருப்ப ஓய்வு பெற அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு நேற்று மாலை 7 மணி அளவில் விருப்ப ஓய்வு பெறுவதற்கான கடிதம் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் மைக் மூலமாக தொடர்பு கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் தன்னுடன் சிறப்பான முறையில்பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தனது பணிகாலம் முடிவதற்கு 6 மாதத்திற்கு முன்பே விருப்ப ஓய்வு பெற் றுள்ளார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 மாதங்கள் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விருப்ப ஓய்வு பெற்றதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங் சாய்க்கு கூடுதலாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 57 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகளும், 59 வயதில் விருப்ப ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.
    • விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

    அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58 ஆக இருந்தபோது அரசு ஊழியர் ஒருவர் 54 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதில் விருப்ப ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக 5 ஆண்டு பணியாற்றியதாக 'வெயிட்டேஜ்' கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் 54-க்கு பதிலாக 56 வயது மற்றும் அதற்கு கீழ் வயதில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றால் அவருக்கு 4 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் அவர் பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.

    அதேபோல் 57 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகளும், 59 வயதில் விருப்ப ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×