search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் உடல்"

    • கோம்பைகாடு பகுதியில் சுமார் 38 வயது மதிக்கத்தக்க வாலிபர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • இங்கு சுற்றுலா வரும் நபரை தாக்கி கொலை செய்த சம்பவமும், காரில் அழைத்து வந்து கொலை செய்துவிட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை தள்ளி சென்ற சம்பவங்களும் நடந்துள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அடுத்துள்ள வில்பட்டி பழைய சாராயகடை பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்பட்டதால் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மாயமான நபர்களின் விபரங்களை சேகரித்து விசாரித்தனர். ஆனால் எந்த நபரும் மாயமாகவில்லை என தெரியவந்ததால் சுற்றுலா பயணி யாரேனும் இறந்தாரா என்று விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோம்பைகாடு பகுதியில் சுமார் 38 வயது மதிக்கத்தக்க வாலிபர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த 2 நபர்கள் குறித்தும் எந்த விபரமும் தெரியவில்லை.

    கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக இருந்துவரும் நிலையில் பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இங்கு சுற்றுலா வரும் நபரை தாக்கி கொலை செய்த சம்பவமும், காரில் அழைத்து வந்து கொலை செய்துவிட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை தள்ளி சென்ற சம்பவங்களும் நடந்துள்ளது. பலமாதங்கள் கழித்துதான் இதுபோன்ற சம்பவங்கள் வெளியில் வரும்.

    அதுபோல் ஒரேவா ரத்தில் 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் யார்? கொலை செய்யப்பட்டார்களா? அல்லது இயற்கையாக இறந்தார்களா என்று தெரியவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர். இறந்தவர்கள் விபரத்தை போலீசார் உரிய விசாரணை நடத்தி கண்டறியவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நேற்று மாலை தட்டப்பாறை ரோட்டில் கருக் ஊரணி அருகில் உள்ள காற்றாலை சாலையில் சதீஷ் பிணமாக கிடந்துள்ளார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீசின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள கம்பவுண்ட் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 38). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

    சதீசுக்கு மது பழக்கம் இருந்ததாகவும், இதன் காரணமாக அவரது மனைவி, குழந்தைகளும் அவரை பிரிந்து தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை தட்டப்பாறை ரோட்டில் கருக் ஊரணி அருகில் உள்ள காற்றாலை சாலையில் சதீஷ் பிணமாக கிடந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீசின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் உயிரிழந்த சதீஷின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

    • பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் வெளிச்செம்மண்டலம் பகுதியில் உள்ள முட்புதரில் வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டி இறந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டனர். இதில் பண்ருட்டி எரிப்பாளையம் சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 20) இவர் புதுச்சேரி மேட்டுப்பாளையம் குத்து விளக்கு செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று கடலூருக்கு வருவதாக கூறிவிட்டு வந்தவர் மீண்டும் வீட்டிற்கு செல்லவில்லை. ஆனால் இன்று காலை தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • ரயில்வே டிராக்கில் இளம் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
    • ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூரை அடுத்த குடிதாங்கி சாவடியில் உள்ள ரயில்வே டிராக்கில் இளம் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் ரயில்வே போலீசாருக்கு தகவல் அனுப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இறந்தவர் யார்? ரயில்வே டிராக்கினை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரயில்வே டிராக்கில் இறந்து கிடந்தவர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த சேகர் (வயது 26) என்பது தெரியவந்துள்ளது.

    • 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரெயிலில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பிணமாக கிடந்தவர் உடல் அழுகி உருக்குலைந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காகங்கரை- சாமல்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரெயிலில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்தவர் உடல் அழுகி உருக்குலைந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்த நிலையில் காணப்பட்டார். அவரை பற்றி தெரிந்தவர்கள் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் சொல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×