search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ வீரர் பலி"

    • ராஜபாளையம் அருகே தடுப்பு சுவரில் மோதி ராணுவ வீரர் பலியானார்.
    • தீபாவளி பண்டிகைக்காக தனது 2-வது மனைவி வீட்டிற்கு சென்றிருந்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் காளிமுத்து (வயது37), முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ரோஷி என்ற சூர்யபிரபா. இவர் வ.உ.சி. நகரில் குடியிருந்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக ராஜபாளையம் அருகே உள்ள செந்தட்டியாபுரத்தில் உள்ள தனது 2-வது மனைவி குருலட்சுமி வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு பண்டிகையை முடித்து விட்டு தனது முதல் மனைவியை பார்ப்பதற்காக காரில் புறப்பட்டார். அவர் ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் வந்தபோது திடீரென சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் படுகாயமடைந்த காளி முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது சகோதரி பரமேஸ்வரி ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
    • ஒரு வீரர் உயிரிழந்து உள்ளார். அவருடைய உடல் மீட்கப்பட்டு உள்ளது.

    லடாக்:

    லடாக் யூனியன் பிரதேசத்தின் மவுண்ட் குன் பகுதியில் இந்திய ராணுவத்தின் 40 வீரர்கள் அடங்கிய குழுவினர் வழக்கம்போல் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    அப்படி அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில், ராணுவ வீரர்கள் 4 பேர் சிக்கி கொண்டனர். அவர்களில் ஒரு வீரர் உயிரிழந்து உள்ளார். அவருடைய உடல் மீட்கப்பட்டு உள்ளது.

    3 வீரர்களை காணவில்லை. எனினும், கடுமையான வானிலை மற்றும் பனிக்குவியலுக்கு இடையே, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாருதி இகோ கார் சென்றுள்ளது.
    • ராணுவ வீரர் ரவிச்சந்திரன்(வயது47) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

     கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருரப்பள்ளி அருகே மேலுமலை தனியார் நர்சிங் கல்லூரி எதிரில், ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாருதி இகோ கார் சென்றுள்ளது. அப்போது முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரி திடீரென வலது பக்கத்தில் திரும்பி யதால் கட்டுப்பாட்டை இழந்த கார், கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. காரின் பின்னால் வந்த லாரியும் காரில் மோதியது.

    இதில், காரில் பயணித்த வேலூர் மாவட்டம், பொய்கையை சேர்ந்த ராணுவ வீரர் ரவிச்சந்திரன்(வயது47) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    தகவலறிந்து விரைந்து சென்ற குருபரப்பள்ளி போலீசார் சடலத்தை மீட்டனர்.

    அதேபகுதியில் விபத்து நடந்த, அடுத்த சில நிமிடத்தில் ஓசூர் - கிருஷ்ண கிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 3 லாரி, 6 கார்கள் அடுத்த டுத்து ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், 7 பேர் காயம டைந்தனர்.

    விரைந்து சென்ற குருபரப்பள்ளி போலீசார், இடிபாடுகளில் சிக்கிய வர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்து, வாகனங்களை அப்புறப்படுத்தினர்.தேசிய நெடுஞ்சாலையில் அடுத்த டுத்து வாகனங்கள் மோதிய விபத்தால் சுமார், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போக்குவரத்து சீரான நிலையில், கிருஷ்ணகிரி டோல்கேட்டிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    • அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வேகமாக வந்து அரவிந்த்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வடமலைபட்டியைச் சேர்ந்தவர் சிவன். இவரது மகன் அரவிந்த்குமார் (வயது25). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் வீரராக பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் அரவிந்த்குமார் ஒருமாத விடுமுறை எடுத்து நேற்று சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது நேற்று இரவு உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் தொகரப்பள்ளிக்கு சென்றார். அப்போது அவர் தொகரப்பள்ளி அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வேகமாக வந்து அரவிந்த்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அரவிந்த்குமார் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் அங்கு விரைந்து வந்து அரவிந்த்குமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம்குறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து அரவிந்த்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணுவத்தில் இருந்து சில மாதங்கள் கழித்து ஒரு மாத விடுமுறையை குடும்பத்தினருடன் கழிப்பதற்காக வந்த ராணுவ வீரர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்டுத்தியுள்ளது.

    • அருளானந்த் தனது மகள் கண் முன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • படுகாயமடைந்த அருளானந்தின் மகளை பொதுமக்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புலியடிதம்மம் பகுதியை சேர்ந்தவர் அருளானந்த் (வயது45), இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இவரது மகள் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை அருளானந்த் தனது மகளை கல்லூரிக்கு அழைத்து சென்றார். அவர்கள் மோட்டார் சைக்கிளில் கோபாலபுரம் அருகே வளைவில் வந்தபோது தேவகோட்டையில் இருந்து காளையார் கோவில் நோக்கி சென்ற காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் படுகாயமடைந்த அருளானந்த் தனது மகள் கண் முன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த அருளானந்தின் மகளை பொதுமக்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் திருவே கம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான அருளானந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டி வந்த ரஹ்மத்துல்லாக் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகள் கண்முன்பு தந்தை விபத்தில் பலியான சம்பவம் தேவகோட்டை பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • பால் வாங்குவதற்கு சென்றபோது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி நாயுடு வட்டம் ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 65), முன்னாள் ராணுவ வீரர்.

    இவர் நேற்று காலை பைக்கில் வீட்டில் இருந்து பொன் னேரி கூட்ரோடு சாலையில் பால் வாங்குவதற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார்.

    பொன்னேரி கூட்ரோடு சாலையில் வாணியம்பாடி பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.

    இதில் வேணுகோபால் படு காயம் அடைந்தார். அவரை அங்கிருந்த பொதுமக்கள் சிகிச் சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது சம்பந்தமாக அவரது மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • மதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ராணுவ வீரர் பலியானார்.
    • இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நீரேத்தான் நடுத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 68) முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இவருக்கு விக்ராந்த் என்ற மகன் உள்ளார். அவரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி ஓட்டலில் டிபன் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறி சென்றார். பழைய நீதிமன்றம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை வாடிப்பட்டி அரசு மருத்துவமனை க்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன்‌ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×