லடாக்: பனி சரிவில் சிக்கி இந்திய ராணுவ வீரர் பலி

பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு உள்ளது.ஒரு வீரர் உயிரிழந்து உள்ளார். அவருடைய உடல் மீட்கப்பட்டு உள்ளது.
லடாக்: பனி சரிவில் சிக்கி இந்திய ராணுவ வீரர் பலி
Published on

லடாக்:

லடாக் யூனியன் பிரதேசத்தின் மவுண்ட் குன் பகுதியில் இந்திய ராணுவத்தின் 40 வீரர்கள் அடங்கிய குழுவினர் வழக்கம்போல் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

அப்படி அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில், ராணுவ வீரர்கள் 4 பேர் சிக்கி கொண்டனர். அவர்களில் ஒரு வீரர் உயிரிழந்து உள்ளார். அவருடைய உடல் மீட்கப்பட்டு உள்ளது.

3 வீரர்களை காணவில்லை. எனினும், கடுமையான வானிலை மற்றும் பனிக்குவியலுக்கு இடையே, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com