

ராஜபாளையம்
ராஜபாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் காளிமுத்து (வயது37), முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ரோஷி என்ற சூர்யபிரபா. இவர் வ.உ.சி. நகரில் குடியிருந்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக ராஜபாளையம் அருகே உள்ள செந்தட்டியாபுரத்தில் உள்ள தனது 2-வது மனைவி குருலட்சுமி வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு பண்டிகையை முடித்து விட்டு தனது முதல் மனைவியை பார்ப்பதற்காக காரில் புறப்பட்டார். அவர் ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் வந்தபோது திடீரென சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் படுகாயமடைந்த காளி முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது சகோதரி பரமேஸ்வரி ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.