வாகனம் மோதி ராணுவ வீரர் பலி

மதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ராணுவ வீரர் பலியானார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வாகனம் மோதி ராணுவ வீரர் பலி
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நீரேத்தான் நடுத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 68) முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவருக்கு விக்ராந்த் என்ற மகன் உள்ளார். அவரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி ஓட்டலில் டிபன் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறி சென்றார். பழைய நீதிமன்றம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை வாடிப்பட்டி அரசு மருத்துவமனை க்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன்‌ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com