search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரபேல் போர் விமானம் ஒப்பந்தம்"

    பெங்களூரில் எச்.ஏ.எல். தொழிலாளர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசவிருந்த கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அக்கூட்டத்தை வேறொரு இடத்திற்கு மாற்றி காங்கிரசார் ஏற்பாடு செய்துள்ளனர். #Congress #RahulGandhi
    பெங்களூர்:

    பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டி வருகிறார். பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு அந்த விமானத்தை தயாரிக்கும் ஒப்பந்தத்தை கொடுக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பி வருகிறார்.

    இது தொடர்பாக நாளை (சனிக்கிழமை) அவர் பெங்களூரில் எச்.ஏ.எல். தொழிலாளர்கள் மத்தியில் பேச திட்டமிட்டு இருந்தார். ஆனால் எல்.ஏ.எல். நிறுவனம் கடைசி நிமிடத்தில் அதற்கு அனுமதி மறுத்து விட்டது. இதையடுத்து ராகுல்காந்தி பங்கேற்கும் கூட்டத்தை மின்ஸ்க் சதுக்கம் பகுதிக்கு மாற்றி காங்கிரசார் ஏற்பாடு செய்துள்ளனர். #Congress #RahulGandhi
    மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் பிரான்ஸ் செல்கிறார். பாரீசில் 12 மற்றும் 13-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #BJP #NirmalaSitharaman #RafaleDeal
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டின் டிசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க 2016-ம் ஆண்டு மோடி அரசு ஒப்பந்தம் செய்தது. அதில் ஊழல் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

    இந்த நிலையில் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கு அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனத்தை இந்திய அரசு தான் சிபாரிசு செய்தது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே கூறினார். இதனால் இப்பிரச்சனையில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

    ஹோலண்டேயின் கருத்தை மத்திய அரசும், பிரான்ஸ் அரசும் மறுத்துள்ளன. இதுகுறித்து டசால்ட் நிறுவனமும், ரிலையன்சும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதில் எங்களது தலையீடு எதுவும் இல்லை என இரு நாடுகளும் மறுத்துள்ளன.

    இந்த நிலையில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் (அக்டோபர்) பிரான்ஸ் செல்கிறார். பாரீசில் 12 மற்றும் 13-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    பிரான்ஸ் நாட்டின் ராணுவ மந்திரி புளோரன்ஸ் பார்லியை சந்தித்து பேசுகிறார். அப்போது மேற்கு ஆசியா மற்றும் இந்தோ- பசிபிக் கூட்டு ராணுவ பயிற்சியை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது.


    பாரீசில் தங்கியிருக்கும் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரனை சந்திக்கிறார். அங்கிருந்து ஆசியான்நாடுகளின் ராணுவ மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் செல்கிறார்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரான்ஸ் அதிபர் மேக்ரன் இந்தியா வந்தார். அவரை தொடர்ந்து அக்டோபரில் ராணுவ மந்திரி பார்லியும் இந்தியா வருகை தந்தார். அப்போது பிரான்சில் ராணுவ மந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. எனவே தான் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #BJP #NirmalaSitharaman #RafaleDeal
    ரபேல் போர் விமானத்தின் விலையை மூன்று மடங்கு உயர்த்தியது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். #RafaelDeal #Chidambaram #PMModi
    கொல்கத்தா:

    பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பல கோடி ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆனால் இதில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

    இந்நிலையில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:



    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகள் ஏன் தவிர்க்கப்பட்டன? ஒப்பந்த பேச்சுவார்த்தை குழு மற்றும் விலை பேச்சுவார்த்தை குழு ஆகியவை ஏன் இருளில் மறைக்கப்பட்டன? பாதுகாப்பு பற்றிய அமைச்சரவை குழுவும் நம்பிக்கைக்கு உரிய ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ரபேல் போர் விமானம் ஒன்றை 526 கோடி ரூபாய் அளவில் வாங்கியது.  பாஜக தலைமையிலான கூட்டணி அரசு ரபேல் போர் விமானம் ஒன்றை 1,670 கோடி ரூபாய் அளவில் வாங்கியுள்ளது.  இந்த எண்ணிக்கை சரியெனில், போர் விமானம் ஒன்றின் விலை 3 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது ஏன் என்பது குறித்து பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். #RafaelDeal #Chidambaram #PMModi
    ×