search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் மாயம்"

    • சாலையில் வந்த போது திடீரென சையது நூர் ஜமால் மாயமானார்.
    • போலீசார் மாயமான சையது நூர் ஜமாலின் புகைப்படத்தை வாட்ஸ் அப் குழுக்களில் அனுப்பி விசாரித்து வந்தனர்.

    பெரம்பூர்:

    மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சையது நூர்ஜமால்(56). இவர் கடந்த 14-ந்தேதி மருத்துவ சிகிச்சைக்காக குடும்பத்துடன் சென்னை வந்து இருந்தார். சென்ட்ரலில் ஆட்டோ ஏறுவதற்காக வால்டாக்ஸ் சாலையில் வந்த போது திடீரென சையது நூர் ஜமால் மாயமானார். அவரை குடும்பத்தினர் தேடிவந்தனர்.

    இதுதொடர்பாக பூக்கடை போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான சையது நூர் ஜமாலின் புகைப்படத்தை வாட்ஸ் அப் குழுக்களில் அனுப்பி விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 15-ந்தேதி புளியந்தோப்பு பகுதியில் சாலையோரம் முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை பேசின்பாலம் தலைமைக் காவலர் சரத்குமார் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அவர் மயக்க நிலையில் இருந்ததால் அவரை பற்றி மேலும் விவரம் தெரியாமல் இருந்தது.

    சரத்குமார்

    சரத்குமார்


    இதற்கிடையே போலீசாரின் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்ட மாயமான சையது நூர் ஜமால் புகைப்படத்தை பார்த்ததும் போலீஸ்காரர் சரத்குமார், அவர் தன்னால் புளியந்தோப்பில் சாலையோரம் மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர் என்பது தெரிந்தது.

    இதுகுறித்து பூக்கடை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சையது நூர் ஜமாலை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    சரியான நேரத்தில் மாயமான சையது நூர் ஜமாலை அவரது குடும்பத்தினருடன் ஒப்படைக்க உதவிய போலீஸ்காரர் சரத்குமாரை உயர்அ திகாரிகள் பாராட்டினர்.

    • சங்கர் 6.30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார்.
    • கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சங்கரை தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சா லையில் கண்ட மங்க லம் போலீஸ் நிலையம் அருகில் வசித்து வந்தவர் சங்கர் (வயது 56.) இவர் கடந்த 2 -ந் தேதி காலை 6.30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது குடும்பத்தினர் புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சங்கரை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வேலைக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு வெளியே சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • வழக்குபதிவு செய்து போலீசார் முதியவரை தேடி வருகின்றனர்

    பெரியகுளம்:

    பெரியகுளம் ஏ.புது க்கோட்டை அருகே உள்ள ஆரோக்கியமாதா நகரை சேர்ந்தவர் அல்போன்ஸ். கூலிவேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 ஆண்பிள்ளைகள், ஒரு பெண்பிள்ளை உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு வெளியே சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    அக்கம்பக்கம் விசாரித்தும் தகவல் கிடைக்காததால் அவரது மனைவி அமலோ ற்பவம் பெரியகுளம் போலீ ஸ்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து போலீ சார் முதியவரை தேடி வருகின்றனர்

    • பழனிசாமி சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றார்.
    • இதையடுத்து அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    பெருந்துறை:

    பெருந்துறை ஈரோடு ரோடு சென்னிவலசு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (30). இவர் அதே பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நந்த குமாரின் அப்பா, அம்மா, மற்றும் தாத்தா பழனிச்சாமி (75) ஆகியோரும் குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு பழனிசாமியின் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து பழனிச்சாமி கொரோனா சமயத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்பட்டு வந்தார்.

    இதனால் பழனிசாமி அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று தொடர்ந்து வீட்டில் இருந்து வருகிறார். இதனால் பழனிச் சாமி மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இநத நிலையில் பழனிசாமி சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றார்.

    ஆனால் நீண்ட நேரமாகியும் மீண்டும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து நந்தகுமார் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பழனி ச்சாமியை தேடி வருகிறார்.

    • கடலூர் அருகே வீட்டை விட்டு சென்ற முதியவர் மாயமானார்.
    • அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் செல்வராஜை பல்வேறு இடங்களில் தேடினர்.

    கடலூர்:

    கடலூர் அருகே மணப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். (வயது 54) இவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடுதிரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிந்து செல்வராஜ் என்ன ஆனார் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×