என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண்டமங்கலத்தில் முதியவர் மாயம்
- சங்கர் 6.30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார்.
- கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சங்கரை தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:
புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சா லையில் கண்ட மங்க லம் போலீஸ் நிலையம் அருகில் வசித்து வந்தவர் சங்கர் (வயது 56.) இவர் கடந்த 2 -ந் தேதி காலை 6.30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது குடும்பத்தினர் புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சங்கரை தேடி வருகின்றனர்.
Next Story






