search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் மீட்பு"

    • நேற்று வியாழக்கிழமை காலை பள்ளிக்கு செல்வதாக சென்றவர்கள் பள்ளிக்கு செல்லாமல் சுற்றி உள்ளனர்.
    • இருவரை அழைத்து விசாரித்த பொழுது அவர்கள் இருவரும் தருமபுரியில் மாயமான பள்ளி மாணவர்கள் 2 பேர் என்பது தெரியவந்தது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்ட நகர எல்லைக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன், இதே பகுதியை சேர்ந்த வயது 12 சிறுவன். நண்பர்களான இருவரும் தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை காலை பள்ளிக்கு செல்வதாக சென்றவர்கள் பள்ளிக்கு செல்லாமல் சுற்றி உள்ளனர். மாலையில் மாணவர்கள் இருவரும் வீட்டிற்கு வராத நிலையில் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்த போது பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

    இது குறித்து மாணவர்களின் பெற்றோர் தருமபுரி நகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். பள்ளி மாணவர்கள் மாயமானது குறித்து தருமபுரி நகர காவல் துறை சார்பில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் உத்திரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் சென்றாய பெருமாள், பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலைய அருகில் பணியில் இருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த பள்ளி மாணவர்கள் இருவரை அழைத்து விசாரித்த பொழுது அவர்கள் இருவரும் தருமபுரியில் மாயமான பள்ளி மாணவர்கள் 2 பேர் என்பது தெரியவந்தது.

    இது குறித்து பென்னாகரம் காவல் நிலையம் சார்பில் தருமபுரி நகர காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தருமபுரி நகர போலீசார் பள்ளி மாணவர்களின் பெற்றோருடன் பென்னாகரம் வந்தனர்.

    அவர்களிடம் பள்ளி மாணவர்கள் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். முன்னதாக பள்ளி மாணவர்களின் பெற்றோர் வரும் வரை காவல் உதவி ஆய்வாளர்கள் சென்றாய பெருமாள், சிங்காரம் ஆகியோர் பள்ளி மாணவ ர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • மாணவர்கள் வீட்டிற்கு வராததால் அவர்களது பெற்றோர் நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர்.
    • இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையிலான போலீசார் மாணவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள மைக்கேல்பாளையம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் விவாஷ் (12). அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் பரத்பாண்டி (12), ஜங்கால்பட்டியை சேர்ந்த ராஜா மகன் சக்திவேல் (10). இதில் விவாஷ் மற்றும் பரத்பாண்டி ஆகிய 2 பேரும் மைக்கேல்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    சக்திவேல் அதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் 3 பேரும் தினந்தோறும் பள்ளிக்கு ஒன்றாக சென்று மாலையில் ஒன்றாக திரும்புவது வழக்கம். அதன்படி நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மாலை வீடு திரும்பவில்லை. அவர்களது பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இரவு 11 மணிவரை மாணவர்கள் வீட்டிற்கு வராததால் இதுகுறித்து அவர்களது பெற்றோர் நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையிலான போலீசார் மாணவர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேட்டுப்பட்டி, நிலக்கோட்டை, கொடைரோடு சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்களிலும் தேடினர். தற்போது பழனிக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வதால் அவர்களுடன் சென்று விட்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி தேடினர்.

    இந்நிலையில் இரவில் மேட்டுப்பட்டி சமுதாயக்கூடத்தில் தூங்கிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அவர்களை மீட்டு விசாரித்தனர். கடந்த மாதம் சின்னாளபட்டியில் 2 பள்ளி மாணவர்களை பைக்கில் வந்த வாலிபர் கடத்தி செல்ல முயன்றார். அப்போது பொதுமக்கள் அவரை துரத்திப்பிடிக்க முயன்றனர். இதனால் மாணவர்களை கொடைரோடு டோல்கேட் முன்பு இறக்கிவிட்டு அவர் தப்பி ஓடிவிட்டார். அதே போல் இந்த மாணவர்களையும் யாரேனும் கடத்திச் செல்ல முயன்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கச்சூரில் உள்ள காப்பகத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
    • இரவில் எங்கு செல்வது என்று தெரியாமல் பஸ் நிலையத்தில் நின்றபோது போலீசாரிடம் சிக்கினர்.

    திருவள்ளூர்:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கச்சூரில் தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அங்கிருந்த 2 மாணவர்கள் திடீரென மாயமானார்கள். அவர்களை அங்குள்ள ஊழியர்கள் தேடி வந்தனர்.

    இதற்கிடையே திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் மற்றொருவர் பூந்தமல்லி அருகே தண்டலம் பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவன் என்பது தெரியவந்தது.

    அவர்கள் கச்சூர் பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்கி படித்து வந்ததும், அங்கு இருக்க பிடிக்காததால் ஓட்டம் பிடித்து இருந்ததும் தெரிந்தது.

    திருவள்ளூர் வந்த அவர்கள் காலை முதல் திருவள்ளூர் ரெயில் நிலையம், வீரராகவர் கோவில் மற்றும் சிவன் கோவில்களில் சுற்றித்திரிந்து உள்ளனர். இரவில் எங்கு செல்வது என்று தெரியாமல் பஸ் நிலையத்தில் நின்றபோது போலீசாரிடம் சிக்கினர்.

    2 மாணவர்களையும் தலைமை காவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் விசாரித்தனர். பின்னர் இதுகுறித்து காப்பக நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    • கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் ராட்சத அலை 3 மாணவர்களையும் கடலுக்குள் இழுத்து சென்றது.
    • குதிரை சவாரியில் ஈடுபடும் தேசிங்கு என்பவர் உடனே கடலில் நீந்தி சென்று தத்தளித்து கொண்டிருந்த 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 7 பேர் சக மாணவர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மாமல்லபுரம் கடற்ரைக்கு சென்றனர். கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் அவர்களில் 4 பேர் கடலில் இறங்கி குளித்தனர். கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் ராட்சத அலை 3 மாணவர்களையும் கடலுக்குள் இழுத்து சென்றது. 100 மீட்டர் தூரத்திற்கு கடலில் இழுத்து செல்லப்பட்ட அவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடினர். இதை பார்த்த சக மாணவர்கள் கூச்சலிட்டனர்.

    அங்கு குதிரை சவாரியில் ஈடுபடும் தேசிங்கு (32) என்பவர் உடனே கடலில் நீந்தி சென்று தத்தளித்து கொண்டிருந்த 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதை பார்த்த அவரது நண்பர்களான கடற்கரை பகுதி புகைப்பட கலைஞர்கள் தினேஷ், மோகன் ஆகியோர் கடலில் நீந்தி சென்று தேசிங்குக்கு உதவியாக 3 மாணவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    மயங்கிய நிலையில் இருந்த அவர்கள் சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பினர். பின்னர் கடற்கரைக்கு வந்த மாமல்லபுரம் தீயணைப்பு துறை அலுவலர் சண்முகம், மூத்த தீயணைப்பு வீரர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு துறையினர் கடலில் சிக்கி உயிருக்கு போராடிய மணவர்களை காப்பாற்றிய தேசிங்கு மற்றும் அவரது நண்பர்களின் மனித நேயத்தை பாராட்டினர். மீட்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்த வசந்த் (22), செங்கல்பட்டு மாவட்டம், வையாவூரை சேர்ந்த அஜய் (24), சாலவாக்கத்தை சேர்ந்த ராகுல் (26) ஆகியோரை தீயணைப்பு துறையினரும், போலீசாரும் எச்சரித்து அனுப்பினர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றித் திரிந்த வேலூர் மாணவர்கள் 2 பேர் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
    போரூர்:

    கோயம்பேடு மார்கெட்டில் நேற்று மாலை சப்- இன்ஸ்பெக்டர் குமாரசாமி, போலீஸ்காரர் சுந்தரமூர்த்தி ஆகியோர் ரோந்து பணியில் ஈடு பட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த பால சுப்பிரமணி (வயது 16), சரவணன் (17) என்பதும் அங்குள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருவதும் தெரிந்தது.

    கடந்த மாதம் 31-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோயம்பேடு பகுதிக்கு வந்து பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர்.

    மாணவர்கள் மாயம் குறித்து வாலாஜாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் இருவரும் கோயம்பேடு மார்கெட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

    மாணவர்கள் போலீசாரிடம் கூறும்போது, ‘வீட்டில் தங்களை பெற்றோர் சரியாக கவனிக்கவில்லை. செலவுக்கு பணம் தருவதில்லை என்று பெற்றோர் மீது குற்றம் சாட்டினர்.

    மீட்கப்பட்ட 2 மாணவர்களையும் கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் நேற்று இரவு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தார்.
    ×