என் மலர்

  செய்திகள்

  கோயம்பேட்டில் வேலூர் மாணவர்கள் 2 பேர் மீட்பு
  X

  கோயம்பேட்டில் வேலூர் மாணவர்கள் 2 பேர் மீட்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றித் திரிந்த வேலூர் மாணவர்கள் 2 பேர் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
  போரூர்:

  கோயம்பேடு மார்கெட்டில் நேற்று மாலை சப்- இன்ஸ்பெக்டர் குமாரசாமி, போலீஸ்காரர் சுந்தரமூர்த்தி ஆகியோர் ரோந்து பணியில் ஈடு பட்டனர்.

  அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த பால சுப்பிரமணி (வயது 16), சரவணன் (17) என்பதும் அங்குள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருவதும் தெரிந்தது.

  கடந்த மாதம் 31-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோயம்பேடு பகுதிக்கு வந்து பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர்.

  மாணவர்கள் மாயம் குறித்து வாலாஜாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் இருவரும் கோயம்பேடு மார்கெட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

  மாணவர்கள் போலீசாரிடம் கூறும்போது, ‘வீட்டில் தங்களை பெற்றோர் சரியாக கவனிக்கவில்லை. செலவுக்கு பணம் தருவதில்லை என்று பெற்றோர் மீது குற்றம் சாட்டினர்.

  மீட்கப்பட்ட 2 மாணவர்களையும் கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் நேற்று இரவு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தார்.
  Next Story
  ×