search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் ஆசிய கோப்பை"

    • இந்திய அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா அரை சதமடித்தனர்.
    • ஐக்கிய அரபு அமீரக அணியை 104 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

    சில்ஹெட்:

    மகளிர் ஆசிய கோப்பை தொடர் வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய மகளிர் அணி முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் மலேசியா அணிகளை வீழ்த்தியது.

    இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 178 ரன்களை குவித்தது. பொறுப்புடன் ஆடிய தீப்தி ஷர்மா அரைசதம் அடித்தார். அவர் 49 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 64 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், 45 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்களை குவித்தார்.

    இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐக்கிய அரபு அமீரக அணி களமிறங்கியது. 20 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுக்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதனால் இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. ஆட்ட நாயகியாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

    • ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
    • இதில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 7-ம் தேதி மோதுகின்றன.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது. அந்நாட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.

    இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான மகளிர் கிரிக்கெட் டி20 போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, ஆசிய மகளிர் டி20 போட்டி வரும் அக்டோபர் 1-ம் தேதி தொடங்க உள்ளது.

    அக்டோபர் 1-ம் தேதி - இந்தியா, இலங்கை

    அக்டோபர் 3-ம் தேதி - இந்தியா, மலேசியா

    அக்டோபர் 4-ம் தேதி - இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம்

    முக்கிய போட்டியான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 7-ம் தேதி மோதுகிறது.

    அக்டோபர் 8-ம் தேதி - இந்தியா, வங்காளதேசம்

    அக்டோபர் 10-ம் தேதி - இந்தியா, தாய்லாந்து

    அக்டோபர் 13-ம் தேதி - முதல் மற்றும் இரண்டாவது அரையிறுதி

    அக்டோபர் 15-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

    ×