search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருள் பறிமுதல்"

    • லாரியில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
    • போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பகுதியில் நேற்றிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோகனூர் சாலை கொண்டிசெட்டிபட்டியில் சென்ற லாரியை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    இதில் லாரியில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போதை பொருட்களுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த டிரைவர் கார்த்திக் (29) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெங்களூருவில் இருந்து ராமநாதபுரத்திற்கு 29 மூட்டைகளில் 400 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த போலீசார் இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர். 

    • இந்திய பயணியின் பையில் இருந்து 1496 கிராம் எடையுள்ள வெள்ளைப் பொடியை கண்டெடுத்தனர்.
    • உகாண்டா நாட்டு பெண் ஒருவரையும் அதிகாரிகள் பொறி வைத்து பிடித்து, கைது செய்துள்ளனர்.

    மும்பை:

    அடிஸ் அபாபாவிலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். வழக்கமான அந்த சோதனையின் போது ஒரு இந்திய பயணியின் பையில் இருந்து 1496 கிராம் எடையுள்ள வெள்ளைப் பொடியை கண்டெடுத்தனர். பரிசோதனையில் இது கொக்கைன் போதைப்பொருள் என தெரிய வந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட இந்த கொக்கைனின் மதிப்பு ரூ.15 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

    இதனையடுத்து அந்த பயணியையும், அவரிடமிருந்து அந்த போதைப்பொருளை பெற்றுச்செல்ல நாவி மும்பை பகுதியின் வாஷி பகுதிக்கு வந்த உகாண்டா நாட்டு பெண் ஒருவரையும் அதிகாரிகள் பொறி வைத்து பிடித்து, கைது செய்துள்ளனர்.

    • போதைப் பொருளை அதிகாரிகளுக்கு காட்டிக் கொடுத்த நாய்.
    • போதை பவுடர் கடத்தலில் ஈடுபட்ட உகாண்டா நாட்டு பெண் கைது,

    வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்கள் மூலம் வரும் பயணிகளிடம் சுங்கத்துறை மற்றும் போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 18ந் தேதி எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த உகாண்டா நாடு பெண் பயணி வைத்திருந்த பொருட்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். 

    அப்போது மோப்ப நாய் ஓரியோ, பெட்டி ஒன்றில் மறைத்து வைத்திருந்த போதை பொருளை அதிகாரிகளுக்கு காட்டிக் கொடுத்தது. இதையடுத்து அந்த பெட்டியை பிரித்து சோதனையிட்ட அதிகாரிகள் அதில் இருந்து 1,542 கிராம் எடையுள்ள மெத்தகுலோன் மற்றும் 644 கிராம் ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.அதன் மதிப்பு ரூ.5.35 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து போதை பவுடரை கடத்தியதாக உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புதுவைக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • கண்டெய்னர் லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தில் 8 டன் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் சமீப காலமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சென்னை ஆந்திரா-ஒடிசா மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டு புதுவையில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்று வருகிறார்கள். போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக ஒரு சிலரை கைது செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் 2 கண்டெய்னர் லாரி மற்றும் 2 இருசக்கர வாகனத்தில் புதுவைக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதைதொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவைக்கு கண்டெய்னர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

    கண்டெய்னர் லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தில் 8 டன் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடியாகும். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாகிஸ்தானில் இருந்து கடத்தி வந்த 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட்டது.
    • ஹெராயினும், படகையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடலோர காவல்படை மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு படகை தடுத்து சோதனை செய்தனர்.

    அப்போது அதில் 50 கிலோ ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் படகில் இருந்த 6 பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த படகு பாகிஸ்தானை சேர்ந்த அல்சாகர் படகு என்பதும் அங்கிருந்து ஹெராயினை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 50 கிலோ ஹெராயினும், படகையும் பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த ஊழியர்களையும் விசாரணைக்காக ஜாகாவ் துறைமுகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.360 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வாலிபர் கைது
    • ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா சிக்கியது

    ஆரணி:

    ஆரணி அருகே களம்பூர் பகுதியில் குட்கா ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டன.

    இதன் எதிரொலியால் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் களம்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் தலைமையில் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது களம்பூர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் குட்கா போன்ற போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு வரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • 9.5 கிலோ கோகேன் போதைப்பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
    • போதைப் பொருள் கடத்திய பயணியிடம் அதிகாரிகள் விசாரணை.

    சென்னை:

    போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இந்நிலையில், எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு வந்த இக்பால் பாஷா என்ற பயணியிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது, அவரிடம் இருந்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ 590 கிராம் எடையுள்ள கோகேன் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இக்பால் பாஷா கைது செய்யப்பட்டுள்ளார்.

    போதை பொருள் கடத்தல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

    • 1,218 கிலோ கோகேன் போதைப்பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
    • போதைப் பொருள் கடத்திய பெண் பயணியிடம் அதிகாரிகள் விசாரணை.

    போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு வந்த வெனிசுலா நாட்டை சேர்ந்த ப்ரான்சிஸ் ஜோரெல் டோரஸ் என்ற பெண் பயணியிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது, அவரது கைப்பையில், 11.75 கோடி ரூபாய் மதிப்பிலான 1.218 கிலோ எடையுள்ள கோகேன் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பெண் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

    போதை பொருள் கடத்தல் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் கே.ஆர். உதய்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    ×