search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெலாரஸ்"

    • மாஸ்கோவில் நடைபெறும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்
    • ரஷியாவை தொடர்ந்து பெலாரஸ் செல்கிறார்

    சீனாவின் பாதுகாப்புத்துறை மந்திரி லி ஷாங்ஃபு இன்று முதல் ஆகஸ்ட் 19-ந்தேதி வரை ஆறு நாட்கள் ரஷியா மற்றும் பெலாரஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த தகவலை சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வு கியான் தெரிவித்துள்ளார்.

    ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கெய் ஷோய்கு, பெலாரஸ் பாதுகாப்பு மந்திரி விக்டர் கிரெனின் ஆகியோரின் அழைப்பை ஏற்று இந்த பயணம் மேற்கொள்கிறார்.

    முதலில் ரஷியா செல்லும் அவர், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற இருக்கும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து பெலாரஸ் செல்கிறார்.

    உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுக்கு பெலாரஸ் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, உதவி வருகிறது. ஆனால், சீனா மறைமுகமாக ஆதரவு கொடுப்பதுடன், ஆயுதங்கள் வழங்குவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன்- ரஷியா போரில் பெலாரஸ் ரஷியாவுக்கு உதவு செய்து வருகிறது
    • பெலாரஸ் அண்டை நாடுகளான போலந்து லிதுவேனியா பாதுகாப்பை அதிகரித்துள்ளது

    உக்ரைன்- ரஷியா இடையே 17 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. ரஷியாவுக்கு அண்டை நாடான பெலாரஸ் ஆதரவாக உள்ளது. அதேவேளையில் லிதுவேனியா, போலந்து நாடுகள் நேட்டோ படையில் உள்ளது. இதனால் எல்லையில் லிதுவேனியா மற்றும் போலந்து நாடுகள் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

    கடந்த ஜூன் மாதம் வாக்னர் குழு திடீரென ரஷிய ராணுவதிற்கு எதிராக கலகம் செய்து, ஆயுத கிளர்ச்சி ஏற்படுத்த முயற்சித்தது. ஆனால், பெலாரஸ் அதிபர் மத்தியஸ்தராக செயல்பட்டு, கலகம் இரண்டு நாட்களுக்குள் முடிவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தார்.

    வாக்னர் குழு பெலாரஸ் செல்வது, ரஷியா அவர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளாது என ஒப்பந்தும் செய்யப்பட்டது. இதனால் வாக்னர் படையைச் சேர்ந்தவர்கள் பெலாரஸ் வந்துள்ளனர். இதனால் லிதுவேனியா, போலந்து நாடுகள் மேலும் பாதுகாப்பை எல்லையில் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் இரு நாடுகள் எல்லையில் பெலாரஸ் ராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதனால் மேலும் தங்களது பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

    இரண்டு நாடுகளுக்கும் இடையில் ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள கலினிங்ராட் பிராந்தியத்தில் ஆத்திரமுட்டும் செயலில் ரஷியா மற்றும் பெலாரஸ் ஈடுபட்டு வருவதாக லிதுவேனியா, போலந்து தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம் பெலாரஸ் ஹெலிகாப்டர்கள் இரண்டு தங்கள் எல்லைக்குள் அத்துமீறி பறந்ததாக போலந்து குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் பெலாரஸ் அதை மறுத்துள்ளது.

    லிதுவேனியா, போலந்து எல்லையில் அருகே உள்ள கிரோட்னோ மாகாணத்தில் பெலாரஸ் ராணுவப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

    போலந்து லிதுவேனியா எல்லையை இணைக்கும் 96 கி.மீட்டர் நீளம் கொண்ட எல்லைப் பகுதி சுவால்கி என அழைக்கப்படுகிறது. இந்த பகுதி ரஷியா கட்டுப்பாட்டில் இருக்கும் கலினிங்ராட் பிராந்தியத்திற்கும் பெலாரஸ் எல்லைக்கும் இடையிலான பகுதி.

    இந்த பகுதிதான் நேட்டோவுக்கும், ரஷியாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட முக்கிய புள்ளியாக இருக்கிறது. ரஷியா இந்தப் பகுதியை ஆக்கிரமித்தால் லிதுவேனியா, லித்வியா, எஸ்டோனியா போன்ற நேட்டோ உதவி நாடுகளில் இருந்து போலந்து தனியாக பிரிக்கப்பட்டு விடும். இது ரஷியாவுக்கு ஆதாயமாக இருக்கும் என ராணுவ நடவடிக்கை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பால்டிக் கடலில் உள் கலினிங்ராட் பிராந்தியத்திற்கும் ரஷியாவிற்கும் இடையில் நிலப்பரப்பு தொடர்பு கிடையாது.

    • உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்துவதற்கு ஆஸ்திரேலியா எதிர்ப்பு
    • ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டின் முக்கிய அதிகாரிகளுக்கு தடைவிதிப்பு

    சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த வருடம் பிப்ரவரி 24 அன்று, ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து போரிட்ட உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் உதவி வருகின்றன. இந்த உதவிகளின் ஒரு பகுதியாக அவை ரஷியா மீது விரிவான பொருளாதார தடைகளை உருவாக்கி, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

    500 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் இந்நிலையில், ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டை சேர்ந்த 10 பேருக்கும், ரஷியாவின் 35 நிறுவனங்களுக்கும் ஆஸ்திரேலியா தடைவிதித்துள்ளது.

    இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ரஷியாவின் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி துறைகளில் உள்ள 35 நிறுவனங்கள் மீதும், ரஷியாவின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் பெலாரஸின் மூத்த ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் மீதும் தடை ஆஸ்திரேலியா தடை விதிக்கிறது.

    ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இது கொண்டு வரப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ரஷிய முதல் துணை பிரதமர் ஆண்ட்ரே பெலோசோவ் மற்றும் துணை பிரதமர் டிமிட்ரி செர்னிஷென்கோ மற்றும் பெலாரஸ் நாட்டை சேர்ந்த சில மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக இந்த கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    தவிர, முக்கிய ரஷிய பாதுகாப்பு நிறுவனங்களும், அந்நாட்டின் மிக பெரிய ராணுவ ஹெலிகாப்டர் உற்பத்தி செய்யும் நிறுவனம் மற்றும் அதன் தலைவர் ஆகியோரும் இந்த தடைகள் பட்டியலில் அடங்குவர். இப்புதிய கட்டுப்பாடுகள், அணுசக்தி நிறுவனங்கள் மற்றும் ஆர்க்டிக் வளங்களை பிரித்தெடுப்பதில் ஈடுபட்டுள்ள ரஷிய நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரஷியாவின் இந்த நடவடிக்கையானது உள்நாட்டின் ஸ்திரமின்மையை நோக்கிய நகர்வு என உக்ரைன் கருத்து
    • பெலாரஸ் அரசு, ரஷிய படைகளை தனது நாட்டில் இருந்து உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடங்க அனுமதி அளித்தது

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. உக்ரைன் முக்கிய பகுதிகளை கைப்பற்றி ரஷியா, தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்துகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. நட்பு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவம் சண்டையிட்டு வருவதால் போர் நீடிக்கிறது.

    இந்நிலையில் ரஷிய அதிபர் புதின், நட்பு நாடான பெலாரசில் முக்கியமான அணு ஆயுதங்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நானும் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவும் ஒப்புக்கொண்டோம் என்றும் புதின் தெரிவித்தார்.

    இதையடுத்து, பெலாரசை அணு ஆயுதப் பணயக் கைதியாக ரஷியா வைத்திருப்பதாக உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் டேனிலோவ் குற்றம்சாட்டி உள்ளார். ரஷியாவின் இந்த நடவடிக்கையானது உள்நாட்டின் ஸ்திரமின்மையை நோக்கிய ஒரு நகர்வு என்றும், புதினின் அறிவிப்பு பெலாரஸ் மக்களிடையே ரஷியா மீதான எதிர்மறையான கருத்தை அதிகரிக்கச் செய்யும் என்றும் அவர் கூறினார்.

    2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பெலாரஸ் அரசு, ரஷிய படைகளை தனது நாட்டில் இருந்து உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடங்க அனுமதி அளித்தது குறிப்பிடத்தகக்து. 

    ×