search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு மந்திரி"

    • இந்தியாவை மிகப் பெரிய ராணுவ சக்தியாக உலகம் அங்கீகரித்துள்ளது.
    • நாட்டின் எல்லைகளை துணிச்சலுடன் ராணுவ வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

    கேரள மாநிலம் சிவகிரி மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது:

    தற்சார்பு என்பது இந்திய கலாச்சாரத்தில் ஒருங்கிணைந்த பகுதி. தற்சார்பு தொடர்பான தகவல்களை நாராயண குரு பரப்பினார். தற்போது அந்தப் பணியை சிவகிரி மடமும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. நாராயண குரு, பழங்கால கலாச்சாரம் மற்றும் நவீனத்திற்கு இடையே சமநிலையைப் பராமரித்தார். இது தற்போதும் நாட்டுக்கு பொருத்தமாக உள்ளது. 


    கல்வி, தூய்மை போன்ற விஷயங்களில் பொதுமக்கள் மத்தியில் நாராயண குரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது அவரது தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டுகிறது. இந்த விஷயங்களில் அரசும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சமத்துவம், விடுதலை மற்றும் சகோதரத்துவம் ஆகியவை மேற்கத்திய தத்துவம் என கருதப்படுகிறது.

    உண்மையில் இவை பழங்கால இந்திய இலக்கியங்கள் மற்றும் பாரம்பரியத்தில் காணப்படுகிறது. வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை, ராமாயணம் உள்ளிட்டவற்றில் சமத்துவம் மற்றும் ஒற்றுமை குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

    மத்திய அரசு தற்சார்பு கொள்கையை ஊக்குவிப்பதன் காரணமாகவே ராணுவ பலம் அதிகரித்து வருகிறது. இந்தியாவை மிகப் பெரிய ராணுவ சக்தியாக உலகம் அங்கீகரித்துள்ளது.உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தற்போது திகழ்கிறது. நாட்டின் எல்லைகளை துணிச்சலுடனும் தைரியத்துடனும் ராணுவ வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஐ.என்.எஸ். மொர்முகோவ் போர்க்கப்பல் கடற்படையில் இணைந்தது.
    • இந்த கப்பலில் உள்ள உபகரணங்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை.

    மும்பைக் கடற்படைத் தளத்தில் இன்று மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐ.என்.எஸ். மொர்முகோவ் என்ற போர்க்கப்பல், இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இதன் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள 2-வது போர் கப்பல் என்ற பெருமையை அது பெற்றது. 


    விழாவில் பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளதாவது: இந்தக் கப்பல் இந்தியக் கடற்படையின் திறன்களை மேம்படுத்துவதுடன், கடல் பாதுகாப்பை உறுதி செய்யும். தொழில்நுட்ப ரீதியிலான அதிநவீன ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் வல்லமை கொண்டது.  இதில் இடம்பெற்றுள்ள 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட உபகரணங்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை. இந்திய ராணுவம் தற்சார்பு நிலையை அடைவதற்கு இது உதாரணம். 


    இந்தியக் கடற்படை, கடல்சார் பாதுகாப்பைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், சமூக, பொருளாதார வளர்ச்சியிலும் பங்காற்றுகிறது. இந்திய கடல் பிராந்தியத்தைப் பாதுகாப்பதே, இந்தியக் கடற்படையின் முக்கிய இலக்கு. இந்திய பொருளாதார வளர்ச்சி கடல் மார்க்கமாக அதிகரிக்கும் வர்த்தகத்தைச் சார்ந்தே இருக்கிறது.

    எல்லைப்பகுதிகளையும், கடலோரப் பகுதிகளையும் பாதுகாக்கும் ஆயுதப்படையினர், தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடியப் பங்களிப்பின் மூலம், இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ள நாடு தயாராக இருக்கிறது. ராணுவத்தில் பெரும்பாலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைக் கொண்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • தேசியப் பாதுகாப்புக்கே மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.
    • ராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மும்பையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது:

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் மற்றும் ஆயுதங்கள் மூலம், நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாக்க ஏதுவாக இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல்படையும் தயாராகி வருகிறது. தேசியப் பாதுகாப்புக்கே மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையைப் பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா இயக்கம் மூலம் உரிய நேரத்தில் ராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராணுவ தளவாட இறக்குமதியைக் குறைக்கும் வகையில், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

    ராணுவ கப்பல் கட்டும் தளங்கள் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் தளங்களாக மாறியிருக்கின்றன. கடந்த 2021-2022ம் ஆண்டு ரூ.8,925 கோடியாக இருந்த கப்பல் கட்டும் தளங்களின் உற்பத்தி , நடப்பு ஆண்டில் ரூ.81,777 கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய கப்பல்கட்டும் தளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தரமான பணிகளை நட்பு நாடுகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கொடிநாள் நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக உதவி செய்ய வேண்டும்.
    • ஓய்வு பெறும் இளம் ராணுவ வீரர்களுக்கு தனியார் நிறுவனங்கள் உதவ வேண்டும்.

    மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை சார்பில் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்காக, http://www.affdf.gov.in/என்ற புதிய இணையதளத்தை அறிமுகம் செய்தார். அப்போது அவர்  தெரிவித்துள்ளதாவது:

    சுதந்திரம் முதல், போர்களில் வெற்றி பெறுவது, எல்லைகளில் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்வதிலும் நமது வீரர்கள் ஏராளமானோர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். பலர் உடல் ஊனமுற்றனர். எனவே நமது வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவளிப்பது நமது தலையாய கடமை. எல்லைகளில் எப்போதும் விழிப்புடன் இருக்கும் நமது துணிச்சலான ராணுவ வீரர்களால் தான், அச்சமின்றி நாம் நமது இல்லங்களில் நிம்மதியாக உறங்க முடிகிறது.

    நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவ வீரர்களின் நலனில் அக்கறை கொள்வது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, அது அனைவரின் கடமை. தேச பாதுகாப்பு வலுவாக இல்லாமல், எந்த ஒரு நாட்டிலும் தொழில்துறைகளும், வர்த்தகமும் வளர முடியாது. என்று தெரிவித்தார். ராணுவ வீரர்களின் நலனுக்காக பெரும் நிறுவனங்கள் வழங்கி வரும் நன்கொடையை மேலும் அதிகரிக்க வேண்டும்.

    ஒவ்வொரு ஆண்டும் இளம் வயதில் சுமார் 60,000 ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகின்றனர். அவர்களுக்கு தனியார் துறையினர் வேலை வழங்க வேணடும். ஆயுதப் படைகளின் கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
    • கம்போடியா பிரதமரையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

    ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9வது வருடாந்திர கூட்டத்தை கம்போடியாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு கம்போடியா துணைப் பிரதமரும், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சருமான சாம்டெக் பிச்சே சேனா டிபான் அழைப்பின் பேரில், பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக நாளை மறுநாள் கம்போடியா செல்கிறார்.

    23ந் தேதி ஆசியான் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். மேலும் கம்போடியா பிரதமரையும் ராஜ்நாத்சிங் சந்திக்கிறார். ஆசியான் நாடுகளின் கூட்டம் மற்றும் இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் தவிர, பாதுகாப்பு அமைச்சர்களுடன் இருதரப்பு விவாதங்களையும் அவர் நடத்துகிறார்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பு பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து ராஜ்நாத் சிங் விவாதிக்க உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஜி-20 அமைப்பின் லோகோவில் தாமரை மலர் இருப்பது இந்திய கலாச்சாரத்தின் அடையாளம்.
    • தேச நலன்களைப் பாதுகாப்பதே மோடி அரசின் முக்கிய நோக்கம்.

    அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது: இந்தியா இப்போது பலவீனமாக இல்லை. நாம் அமைதியை நம்புகிறோம், ஆனால் யாரேனும் நமக்குத் தீங்கு விளைவிக்க முயன்றால், நாம் தக்க பதிலடி கொடுப்போம். நமது வீரர்கள் இதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

    2016-ல் சர்ஜிகல் தாக்குதல், 2019 பாலகோட் வான் வழித் தாக்குதல் மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நமது வீரர்கள் காட்டிய வீரம் ஆகியவை நமது வலிமை மற்றும் தயார் நிலைக்கு சான்றாகும். தேச நலன்களைப் பாதுகாப்பதே மோடி தலைமையிலான அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.எதிர்கால சவால்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க ராணுவம் அதிநவீன ஆயுதங்களுடனும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உபகரணங்களுடனும் தயாராக இருக்கிறது.

    அடுத்த ஆண்டு இந்தியா தலைமையில் நடைபெறும் ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாட்டிற்காக அண்மையில் பிரதமரால் வெளியிடப்பட்ட லோகோவில் தாமரை மலர் இருப்பது இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் ஆகும். இந்தியாவின் தேசிய மலர் தாமரை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்புக்கு இடையேயான இடைவெளி குறைந்து வருகிறது.
    • சில நாடுகளின் உத்தரவுகளை இந்தியா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.

    தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய ராணுவ கல்லூரியின் 60வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங், பயிற்சி முடித்த இந்திய முப்படை அதிகாரிகள், ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பட்டங்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    மோடி தலைமையிலான மத்திய அரசு, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக மக்களின் விருப்பங்கள் பாதுகாக்கப்படும்போதுதான், நாடு முழு வல்லமை பெற்றதாக மாறும் என்பதைக் கருத்தில் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாதுப்புக்கு இடையிலான இடைவெளி குறுகி வரும் நிலையில், கால மாற்றத்திற்கு ஏற்ப நாடு எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களும் புதிய வடிவம் பெற்றிருக்கிறது. உள்நாட்டு தீவிரவாதம், தற்போது வெளிநாட்டில் பயிற்சி பெறுவது, நிதி திரட்டுவது, ஆயுதங்களை விநியோகிப்பது போன்றவற்றை மேற் கொள்கின்றன. 


    சைபர் குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் மாபெரும் அச்சுறுத்தலாகத் திகழ்கின்றன. இவற்றால் எரிசக்தி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு உள்ளிட்டத் துறைகள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ரஷியா- உக்ரைன் இடையேயான போர் குறித்த தகவல்களை, சமூக வலைதளங்களும், இதர ஆன்லைன் தகவல் பரிமாற்ற தளங்களும், தங்கள் கண்ணோட்டத்தில் வெளியிட்டு வருவது புதிய தகவல் போராக மாறி விட்டது.

    சைபர் குற்றங்கள், சமூக வலைதளங்களின் தகவல் போர் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்க சர்வதேச சமுதாயம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக நாடுகளை ஆதிக்கம் செலுத்தும் சில நாடுகளின் உத்தரவுகளை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அனைத்து நாடுகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, சமமாக நடத்துவதுதான் இந்தியாவின் நீதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தியா-எகிப்து இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை.
    • தமது பயணத்தின்போது எகிப்து அதிபரையும், சந்தித்து பேசுகிறார்.

    பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நாளை மறுநாள் 19ந் தேதி எகிப்து நாட்டிற்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் முகமது சாக்கியுடன் இருதரப்பு உறவுகள் பேச்சுவார்த்தை நடத்துவார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இரு நாட்டு ராணுவங்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான புதிய முன்முயற்சிகளை கண்டறிதல், இரு நாடுகளின் பாதுகாப்பு தொழில் துறைகளுக்கிடையே ஒத்துழைப்பில் கவனம் செலுத்துதல் ஆகியவை பற்றி இரு மந்திரிகளும் விவாதிக்கி உள்ளனர்.

    இந்தியா எகிப்து இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் அப்போது கையெழுத்திடப்படும் என கூறப்பட்டுள்ளது. எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியையும் தமது பயணத்தின்போது ராஜ்நாத் சிங்கின் சந்தித்து பேசுகிறார்.

    • இந்திய பாதுகாப்பு மந்திரி ஒருவர் மங்கோலியா செல்வது இதுவே முதல் முறை.
    • இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்தப் பயணம் மேம்படுத்தும்.

    கிழக்கு ஆசிய நாடுகளுடன் கூட்டு நட்புறவு முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று முதல் வரும் 7ந் தேதி வரை மங்கோலியா நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் செல்கிறார். இந்திய பாதுகாப்பு மந்திரி ஒருவர் மங்கோலியாவிற்கு பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும்.

    இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கேந்திர கூட்டுமுயற்சியை மேலும் மேம்படுத்துவதற்கு இந்தப் பயணம் வழிவகை செய்யும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜ்நாத்சிங் தமது பயணத்தின் போது மங்கோலியா பாதுகாப்பு அமைச்சர் லெஃப்டினன்ட் ஜென்ரல் சைகான்பயருடன் இருதரப்பு பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வார். இந்த பேச்சு வார்த்தையின் போது இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் இந்தியா மற்றும் மங்கோலியா இடையேயான ராணுவ ஒத்துழைப்பை ஆய்வு செய்வார்கள்.

    இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு புதிய முன்முயற்சிகள் குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. தொடர்ந்து மங்கோலிய அதிபர் குரெல்சுக், அந்நாட்டு நாடாளுமன்ற அவை தலைவர் ஜண்டன்ஷாடர் ஆகியோரையும் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசுகிறார். 

    • பிராந்திய மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இந்தியாவிற்கு இது உதவும்.
    • புதிய வகை ஆயுதங்கள் தயாரிப்பு தொடர்பான ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

    பாதுகாப்புத்துறையில் உற்பத்திக்கான இந்திய வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    மேலும் இந்திய கடற்படை, பாதுகாப்புத்துறை பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரால் உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஆயுதங்கள் குறித்த கண்காட்சியையும் திறந்து வைத்த அவர், நவீன ஆயுதங்களை பார்வையிட்டார். 


    பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    இனி வரும் நவீன போர்க்காலங்களில் மேம்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்களே தேவை. பிராந்திய மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இந்தியாவிற்கு இது உதவும்.ட்டின் பாதுகாப்பிற்கும், எதிர்கால சவால்களை ராணுவ வீரர்கள் எதிர்கொள்வதற்கு வலிமையான மற்றும் தற்சார்பு அடிப்படையிலான புதிய வகை ஆயுதங்களை தயாரிப்பது அவசியம்.

    இதற்காக ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தித் திறன் மற்றும் உள்நாட்டுத் திறன் ஆகியவற்றின் மீதான நமது நிலைப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். ஆயுத உற்பத்தி வளர்ச்சி நாட்டின் பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் அவசியமாகிறது.

    உலகில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக விளங்குகிறது. உள்நாட்டிலேயே பாதுகாப்பு தளவாடங்களை வடிவமைத்து உற்பத்தி செய்ய வேண்டும். பாதுகாப்புத் துறையில் தனியார் துறையின் பங்களிப்பு மூலம் அத்துறை வலுப்பெறும். இதை உணர்ந்து மத்திய அரசு இத்துறையில் தனியார் துறை பங்கேற்பதற்கான பல்வேறு தடைகள் நீக்கியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ஒரே நோக்கம் தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதே.
    • நேரடிப் போர்களில் தோல்வியை சுவைத்த பாகிஸ்தான், மறைமுகப் போரின் பாதைக்கு மாறியது.

    ஜம்முவில் நடந்த கார்கில் வெற்றி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேச சேவையில் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ஆயுதப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஒரே நோக்கம் தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதே. அனைத்து வகையான எதிர்காலப் போர்களிலும் போராட ஆயுதப் படைகளுக்கு ஆயுதங்கள், உபகரணங்களைத் தயாரிக்கும் தற்சார்பு சூழலை உருவாக்க தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

    இந்தியா ஒரு வலிமையான மற்றும் நம்பிக்கையான தேசமாக மாறியுள்ளது. புதிய இந்தியா, தீய நோக்கம் கொண்ட எவருக்கும் தகுந்த பதிலடி கொடுக்க தயாராக உள்ளது. இந்தியாவை உலக வல்லரசாக மாற்றுவதே எங்கள் நோக்கம்.

    வலிமையான, வளமான, தன்னம்பிக்கை மற்றும் வெற்றிகரமான இந்தியாவை உருவாக்குவதே, உயர்ந்த தியாகத்தைச் செய்த நமது மாவீரர்களுக்கு செய்யும் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.

    1965 மற்றும் 1971 நேரடிப் போர்களில் தோல்வியை சுவைத்த பாகிஸ்தான், மறைமுகப் போரின் பாதைக்கு மாறியது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அது இந்தியா மீது மறைமுக யுத்தத்தை மேற்கொண்டது.

    ஆனால், இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை யாராலும் சீர்குலைக்க முடியாது என்பதை மீண்டும் மீண்டும், நமது துணிச்சலான வீரர்கள் நிரூபித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×