பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் நாளை மறுநாள் கம்போடியா பயணம்

இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.கம்போடியா பிரதமரையும் அவர் சந்தித்து பேசுகிறார்.
பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் (கோப்பு படம்)
பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் (கோப்பு படம்)
Published on

ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9வது வருடாந்திர கூட்டத்தை கம்போடியாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு கம்போடியா துணைப் பிரதமரும், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சருமான சாம்டெக் பிச்சே சேனா டிபான் அழைப்பின் பேரில், பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக நாளை மறுநாள் கம்போடியா செல்கிறார்.

23ந் தேதி ஆசியான் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். மேலும் கம்போடியா பிரதமரையும் ராஜ்நாத்சிங் சந்திக்கிறார். ஆசியான் நாடுகளின் கூட்டம் மற்றும் இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் தவிர, பாதுகாப்பு அமைச்சர்களுடன் இருதரப்பு விவாதங்களையும் அவர் நடத்துகிறார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பு பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து ராஜ்நாத் சிங் விவாதிக்க உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com