search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் ஆஸ்திரேலியா கிரிக்கெட்"

    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 3-வது நடுவர் தெரியாமல் ‘ரெட்’ பட்டனை அழுத்தியிருக்கலாம் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டி20 போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 147 ரன்கள் சேர்த்தது. பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது.

    டி'ஆர்கி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 3-வது ஓவரை இமாத் வாசிம் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை ஆரோன் பிஞ்ச் சந்தித்தார். அப்போது பிஞ்ச் அடித்த பந்து நேராக பந்து வீச்சாளரை நோக்கி வந்தது. இமாத் வாசிம் பந்தை தனது கையால் தடுத்தார். பந்து கை விரலில் பட்டு எதிர்முனையில் உள்ள ஸ்டம்பை தாக்கியது. அப்போது டி'ஆர்கி ஷார்ட் பேட் க்ரீஸ்க்குள் இருந்தாலும் கிரவுண்டில் உரசியதாக தெரியவில்லை.



    இதனால் 3-வது நடுவர் முடிவிற்கு விடப்பட்டது. அப்போது பலமுறை ரீப்ளே செய்து பார்த்த போதிலும், ஒரு தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை. இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் தங்களுக்கு சாதகமான முடிவுதான் வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், 3-வது நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.

    போட்டியின் பிற்பகுதியில் மேக்ஸ்வெல் அரைசதம் அடிக்க 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ஆஸ்திரேலியா. இந்நிலையில் நடுவர் தெரியாமல் ரெட் பட்டனை அழுத்தியிருக்கலாம் என தங்களை ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
    துபாயில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அபு தாபியில் கடந்த 24-ந்தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் பாபர் ஆசம் (45), முகமகது ஹபீஷ் (40) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்தது.

    பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது, டிஆர்கி ஷார்ட் (2), ஆரோன் பிஞ்ச் (3), கிறிஸ் லின் (7) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.



    இதனால் ஆஸ்திரேலியா ரன் குவிக்க திணறியது. மேக்ஸ்வெல் மட்டும் தாக்குப்பிடித்து 37 பந்தில் 52 ரன்கள் சேர்த்தார். மிட்செல் மார்ஷ் 21 ரன்னும், கவுல்டர்-நைல் 27 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியாவால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனால் பாகிஸ்தான் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் டி20 தொடர 2-0 என கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி துபாயில் நாளை நடக்கிறது.
    சதம் அடித்து 300 பந்துகளை சந்தித்து பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டை டிரா செய்ய உதவிய கவாஜாவை டிம் பெய்ன் பெரிய அளவில் புகழாரம் சூட்டியுள்ளார். #PAKvAUS
    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி துபாயில் நடந்தது. இதில் பாகிஸ்தான் நிர்ணயித்த 462 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா போராடி டிரா செய்தது. அந்த அணி 8 விக்கெட்டுக்கு 362 ரன் எடுத்தது.



    தொடக்க வீரர் கவாஜா (141 ரன்) சதம் அடித்து தோல்வியில் இருந்து காப்பாற்றினார். அவரை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அணி வீரர்களை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். கவாஜாவின் ஆட்டம் சிறந்த டெஸ்ட் இன்னிங்சில் ஒன்றாகும். அடுத்த டெஸ்டில் இன்னும் சிறப்பாக விளையாடுவோம் என்றார். கவாஜா கூறும்போது, “ஆசிய கண்டத்தில் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடுவது என்பது சற்று வித்தியாசமானது. அதற்கு நிறைய மன தைரியம் வேண்டும்” என்றார்.
    கவாஜா மற்றும் டிம் பெய்ன் ஆகியோரின் அபார ஆட்டத்தில் பரபரப்பாக சென்ற துபாய் டெஸ்டை ஆஸ்திரேலியா டிரா செய்தது. #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 202 ரன்னில் சுருண்டது.

    280 முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 57.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 எடுத்திருந்த நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒட்டு மொத்தமாக பாகிஸ்தான் 461 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 462 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    462 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பிஞ்ச் 49 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அப்பாஸ் பந்திலவ் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது ஆஸ்திரேலியா 87 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த மிட்செல் மார்ஷ், ஷேன் மார்ஷ் ஆகியோரை அப்பாஸ் அடுத்தடுத்து டக்அவுட்டில் வெளியேற்றினார்.

    இதனால் ஆஸ்திரேலியா 87 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு உஸ்மான் கவாஜா உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேற்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 50 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


    டிராவிஸ் ஹெட்

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் கைவசம் 7 விக்கெட் இருந்தது. 326 ரன்கள் தேவைப்பட்டது. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் எளிதாக 7 விக்கெட்டை கைப்பற்றி விடுவார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கவாஜா, டிராவிஸ் ஹெட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முக்கியமாக ஓவர்களை கடத்துவதில் கவனம் செலுத்தினார்கள். மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் டிராவிஸ் ஹெட் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுஸ்சேக்னே 13 ரன்னில் வெளியேறினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

    6-வது விக்கெட்டுக்கு உஸ்மான் கவாஜா உடன் கேப்டன் டிம் பெய்ன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நங்கூரம் பாய்ச்சி நின்ற மாதிரி நிலைத்து நின்று விளையாடினார்கள். கவாஜா சிறப்பாக விளையாடி 224 பந்தில் 10 பவுண்டரியுடன் சதம் அடித்தார்.

    இருவரும் நிலைத்து நிற்க ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி 15 ஓவர் இருக்கும்வரை இந்த ஜோடி நிலைத்து நின்றது. 126-வது ஓவரை யாசிர் ஷா வீசினார். இந்த ஓவரில் உஸ்மான் கவாஜா 141 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ ஆனார். கவாஜா 302 பந்துகள் சந்தித்தார்.

    கவாஜா ஆட்டமிழந்ததும் பாகிஸ்தான் பக்கம் ஆட்டம் சற்று சரிந்தது. இதை மேலும் வலுவூட்டும் வகையில் மிட்செல் ஸ்டார்க் (1), பீட்டர் சிடில் (0) ஆகியோரை அடுத்த ஓவரில் யாசிர் ஷா வெளியேற்றினார். இதனால் 12 ஓவரில் பாகிஸ்தானுக்கு இரண்டு விக்கெட்டுக்கள் தேவைப்பட்டது.


    யாசிர் ஷா

    அப்போது கேப்டன் டிம் பெய்ன் உடன் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பந்தை தடுத்தாடுவதில் மிகவும் கவனமாக செயல்பட்டனர். ஒவ்வொரு ஓவராக குறைந்து இறுதியில் கடைசி ஓவரை எட்டியது. கடைசி ஓவரில் பாகிஸ்தானுக்கு இரண்டு விக்கெட்டுக்கள் தேவைப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் சீட் நுனியில் அமர்ந்தனர். யாசிர் ஷா கடைசி ஓவரை வீசினார்.

    முதல் ஐந்து பந்துகளை டிம் பெய்ன் சிறப்பாக எதிர்கொண்டார். கடைசி ஒரு பந்தில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்த முடியாது என்பதால் அத்துடன் போட்டி முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிரா ஆனது.

    டிம் பெய்ன் 194 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தும், நாதன் லயன் 34 பந்தில் 5 ரன்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் டிராவிற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
    பீல்டிங் செய்யும்போது கைவிரலில் முறிவு ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் இருந்து இமாம்-உல்-ஹக் விலகியுள்ளார். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நடைபெற்றது. இன்றைய கடைசி நாளில் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது பீல்டிங் செய்த இடது கை பேட்ஸ்மேன் ஆன இமாம்-உல்-ஹக்கின் இடது கை சுண்டு வரலில் முறிவு ஏற்பட்டது.

    இதனால் அக்டோபர் 16-ந்தேதி தொடங்கும் அபுதாபி டெஸ்டில் இமாம்-உல்-ஹக் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 76 ரன்களும், 2-வது இன்னிங்சில் 48 ரன்களும் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இமாம்-உல்-ஹக்கிற்குப் பதிலாக ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் பகர் சமான் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.
    துபாயில் நடைபெற்று வரும் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 462 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 202 ரன்னில் சுருண்டது.

    280 முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் சேர்த்திருந்தது. இமாம்-உல்-ஹக் 23 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இமாம்-உல்-ஹக் உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இமாம்-உல்-ஹக் 48 ரன்களும், ஹரிஸ் சோஹைல் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    அதன்பின் வந்த ஆசாத் ஷபிக் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் 57.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. அத்துடன் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பாபர் ஆசம் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹோலண்ட் 3 விக்கெட்டும், நாதன் லயன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    ஒட்டு மொத்தமாக பாகிஸ்தான் 461 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 462 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. 
    துபாயில் நடைபெற்று வரும் டெஸ்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த முகமது ஹபீஸ் (126), இமாம்-உல்-ஹக் (76) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் சேர்த்திருந்தது.

    ஹரிஸ் சோஹைல் 15 ரன்னுடனும், முகமது அப்பாஸ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முகமது அப்பாஸ் நேற்று எடுத்திருந்த 1 ரன்னிலேயே வெளியேறினார்.


    80 ரன்னில் ஆட்டமிழந்த ஆசாத் ஷபிக்

    அடுத்து ஆசாத் ஷபிக் களம் இறங்கினார். ஹரிஸ் சோஹைல், ஆசாத் ஷபிக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சோஹைல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 110 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆசாத் ஷபிக் 80 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.


    3 விக்கெட் வீழ்த்திய பீட்டர் சிடில்

    இருவரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தானின் ஸ்கோர் 450 ரன்னைத் தாண்டியது. அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 164.2 ஓவர்கள் விளையாடி 482 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் பீட்டில் சிடில் 3 விக்கெட்டும், நாதன் லயன் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    டி20 தொடரில் பாகிஸ்தானை துவம்சம் செய்ய தயாராக இருக்கிறோம் என்று ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பில்லி ஸ்டேன்லேக் தெரிவித்துள்ளார். #PAKvAUS
    பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.

    டி20 போட்டிகள் 24-ந்தேதி (அபு தாபி), 26-ந்தேதி (துபாய்), 28-ந்தேதி (துபாய்)களில் நடக்கிறது. இதில் பாகிஸ்தானை துவம்சம் செய்வோம். அதற்கு நான் உதவிகரமாக இருக்க விரும்புகிறேன் என்ற இளம் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டேன்லேக் தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல் 2018 சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடியவர் பில்லி ஸ்டேன்லேக். 23 வயதாகும் இவர் நான்கு போட்டியில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி முத்திரை பதித்தார். ஆனால் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

    ஆனால், தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வரும் இவர், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்காக காத்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    6 ஒருநாள் மற்றும் 12 டி20 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள பில்லி ஸ்டேன்லேக், பாகிஸ்தான் தொடர் குறித்து கூறுகையில் ‘‘நான் தற்போது ஏராளமான போட்டிகளில் விளைடியுள்ளேன். ஒருமுறை எந்த பிரச்சனையும் இல்லாமல் அதிக போட்டிகளில் விளையாடி விட்டால், அதன்பின் எளிதாகிவிடும்.

    அதிக போட்டியில் விளையாடினால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். என்னால் தொடர்ந்து விளையாட உடல் ஒத்துழைக்கும் என நம்புகிறேன்.



    ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. அதற்கு பதிலடி கொடுக்க இது சரியான நேரம். பாகிஸ்தான் அணி நம்பர் ஒன்னில் இருக்கிறார்கள். நாங்கள் அதை தட்டி பறிக்க முயல்வோம்.

    மூன்று பெரிய டி20 போட்டி காத்திருக்கிறது. நாங்கள் உண்மையிலேயே வலுவான அணியை பெற்றிருக்கிறோம். அவர்களை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்த யாசிர் ஷா விரும்புகிறார். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை துபாயில் தொடங்குகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் 2-0 என வெற்றி பெற்றது. தொடரை வெல்வதற்கு யாசிர் ஷா, ஜூல்பிகர் பாபர் ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய காரணமாக இருந்தார். இருவரும் இணைந்து 26 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    இந்த முறை தான் மட்டும் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்த விரும்புவதாக யாசிர் ஷா விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து யாசிர் ஷா கூறுகையில் ‘‘நான் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்த திட்டமிட்டுள்ளேன். விக்கெட் வீழ்த்துவது எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். இதனால் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதால் இலக்கு நிர்ணயித்துள்ளது.



    உலகத்தரம் வாய்ந்த வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலியா அணியில் இல்லை. என்றாலும் நாங்கள் அந்த அணியை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். பிக் பாஷ் தொடரில் சில வீரர்களுடன் நான் விளையாடியுள்ளேன். இதனால் அவர்களின் பலன் மற்றம் பலவீனம் எனக்குத் தெரியும்’’ என்றார்.
    பாகிஸ்தான் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் தொடங்குகிறது. அதற்கு முன் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் ‘ஏ’ அணிக்கெதிராக நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது.

    இந்த பயிற்சி ஆட்டம் நேற்று துபாயில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் சமி அஸ்லாம் 51 ரன்கள் அடித்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

    ஆனால் 3-வது நபராக களம் இறங்கிய அபித் அலி சிறப்பாக விளையாடினார். இவர் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் எடுத்துள்ளார். இவரது ஆட்டத்தில் பாகிஸ்தான் ‘ஏ’ முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்துள்ளது.



    பாகிஸ்தான் இழந்த 6 விக்கெட்டில் நாதன் லயன் ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 17 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் கைப்பற்ற வில்லை. ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய நாதன் லயன் ‘‘கடந்த நான்கு ஆண்களில் இருந்து தான் மாறுபட்ட பந்து வீச்சாளர்’’ என்று தெரிவித்தார். நாதன் லயன் 36 ஓவர்கள் வீசி 87 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஹசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் துணைக் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். #PAKvAUS
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டனாக டேவிட் வார்னரும் இருந்தனர். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கேப் டவுன் டெஸ்டின்போது இருவரும் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினார்கள்.

    இந்த புகாரை விசாரித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இருவருக்கும் தலா ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. இதனால் கேப்டனாக டிம் பெய்ன் நியமிக்கப்பட்டார். ஆனால் துணைக் கேப்டன் பதவிக்கு யாரையும் நியமிக்கவில்லை.


    டிம் பெய்ன்

    ஆஸ்திரேலியா அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா அணியின் துணைக் கேப்டன் பதவிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் மற்றும் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் பாகிஸ்தான் ‘ஏ’ அணியில் சுழற்பந்து வீச்சாளர்களே இடம்பெறவில்லை. #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் டி20 தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் அக்டோபர் 7-ந்தேதி துபாயில் தொடங்குகிறது.

    இதற்கு முன் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் ‘ஏ’ அணிக்கெதிராக நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மைதானங்களில் விளையாட முக்கிய பங்கு வகிக்கும் என ஆஸ்திரேலியா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

    ஆனால், வரும் சனிக்கிழமை தொடங்கும் பயிற்சி ஆட்டத்திற்கான பாகிஸ்தான் ‘ஏ’ அணியில் எந்தவொரு சுழற்பந்து வீச்சாளரும் இடம்பெறவில்லை. இது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

    பாகிஸ்தான் ‘ஏ’ அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. சமி அஸ்லாம், 2. அபித் அலி, 3. இஃப்தோகர் அகமது, 4. ஆசாத் ஷபிக், 5. உஸ்மான் சலுயாஹுதின், 6. சாத் அலி, 7. அகா சல்மான், 8. முகமது ரிஸ்வான், 9. வஹாப் ரியாஸ், 10. ரஹத் அலி, 11. வகாஸ் மெக்சூட், 12. ஆமெர் யாமின், 13. உமைத் ஆசிப், 14. சவுத் ஷகீல்.
    ×