search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்- நாதன் லயன் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்
    X

    பாகிஸ்தான் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்- நாதன் லயன் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்

    பாகிஸ்தான் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் தொடங்குகிறது. அதற்கு முன் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் ‘ஏ’ அணிக்கெதிராக நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது.

    இந்த பயிற்சி ஆட்டம் நேற்று துபாயில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் சமி அஸ்லாம் 51 ரன்கள் அடித்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

    ஆனால் 3-வது நபராக களம் இறங்கிய அபித் அலி சிறப்பாக விளையாடினார். இவர் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் எடுத்துள்ளார். இவரது ஆட்டத்தில் பாகிஸ்தான் ‘ஏ’ முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்துள்ளது.



    பாகிஸ்தான் இழந்த 6 விக்கெட்டில் நாதன் லயன் ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 17 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் கைப்பற்ற வில்லை. ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய நாதன் லயன் ‘‘கடந்த நான்கு ஆண்களில் இருந்து தான் மாறுபட்ட பந்து வீச்சாளர்’’ என்று தெரிவித்தார். நாதன் லயன் 36 ஓவர்கள் வீசி 87 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    Next Story
    ×