search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவித்ர உற்சவம்"

    • 2-ம் திருவிழாவான நாளை காலை 8-30 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது.
    • பக்த சேவா அமைப்பைச் சேர்ந்த ஜெயராம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகா னந்தபுரம் விவேகானந்தகேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுஉள்ளது. இங்கு பவித்ர உற்சவம் திருவிழா இன்று தொடங்கியது இந்த திருவிழா 25-ந்தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இன்று காலையில் ஆச்சாரிய வர்ணம் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. மாலை 6.30 மணிக்கு அங்குரா அர்ப்பனம் நிகழ்ச்சி நடக்கிறது. 2-ம் திருவிழாவான நாளை (23-ந்தேதி) காலை 8-30 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது.

    4-ம் திருவிழாவான 25-ந்தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையும், மாலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜையும் நடக்கிறது. அதன் பிறகு பவித்ர உற்சவம் நடக்கிறது. அப்போது ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் பவனி வரும் விமான பிரகார உற்சவம் நடக்கிறது.

    பவித்திர உற்சவ திருவிழாவை யொட்டி கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் மின் விளக்கு அலங்கா ரத்தில் ஜொலிக்கிறது. பவித்ர உற்சவத்துக்கான ஏற்பாடுகளை சென்னை யில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி தலைமையில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் துணை செயல்அலுவலர் விஜயகுமார், கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் ஹேம தர்ரெட்டி, பக்த சேவா அமைப்பைச் சேர்ந்த ஜெயராம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • 22-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது
    • வாகனத்தில் எழுந்தருளி 4 மாடவீதிகளில் பவனி வரும் விமான பிரகார உற்சவம் நடக்கிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவே கானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தா னத்தின் சார்பில் வெங்கடா ஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. கோவில் கட்டப்பட்ட பிறகு 2-வது முறையாக பவித்ர உற்சவம் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்கு கிறது. இந்த விழா 25-ந்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

    பவித்ர உற்சவத்தின் போது ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி 4 மாடவீதிகளில் பவனி வரும் விமான பிரகார உற்சவம் நடக்கிறது. இதனை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆகம ஆலோசகர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள 7அர்ச்சகர் கள் நடத்துகிறார்கள். பவித்ர உற்சவத்துக்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர்ரெட்டி தலை மையில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பி னர்கள் மற்றும் துணை செயல் அலுவலர் விஜய குமார், கன்னியாகுமரி வெங்க டாஜலபதி கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி, பக்த சேவா அமைப்பைச் சேர்ந்த ஜெயராம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • பவித்திர உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • முக்கிய திருவிழாவான கருட சேவை நடந்தது.

    திருவெண்காடு:

    திருவெண்காடு அருகே நாங்கூர் கீழச்சாலையில் மாதவப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் பவித்திர உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான கருட சேவை நடந்தது.

    இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் கோவில் ஆதீன கர்த்தர் சீனிவாசா பட்டாச்சாரியார், அடியார்கள் திருகூட்டத் தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 3-ந்தேதி தொடங்குகிறது
    • கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டு திறக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுஉள்ளது.

    இந்த கோவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டு திறக்கப்பட்டது. இந்த கோவில் கட்டி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த கோவில் கட்டப்பட்ட பிறகுமுதல் முறையாக இந்த கோவிலில் பவித்ர உற்சவம் என்ற திருவிழா வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இந்த திருவிழா 6-ந்தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. 3-ந்தேதி காலை 9 மணிக்கு ஆச்சாரிய ருத்வின்யம் நிகழ்ச்சியும் மாலை 6.30 மணிக்கு அங்குர அர்ப்பனமும்நடக்கிறது.

    2-ம் திருவிழாவான 4-ந்தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது. பின்னர் காலை 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதலும் அபிஷேகமும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்குயாகசாலை பூஜைநடக்கிறது.3-ம்திருவிழாவான 5-ந்தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையும் 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதலும் அபிஷேகமும் நடக்கிறது.

    பகல் 12.00 மணிக்கு பவித்ர சமர்ப்பனமும் மாலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜையும் நடக்கிறது. 4-ம் திருவிழா வான 6-ந்தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையும் 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதலும் அபிஷேகமும் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப்பட்ட வாக னத்தில் எழுந்தருளி நான்குமாடவீதிகளில் பவனி வரும் விமான பிரகார உற்சவம் நடக்கிறது. பின்னர் 6.30 மணிக்கு யாகசாலை பூஜையும் இரவு 8.30 மணிக்கு பூர்ணா குதி மற்றும் சிறப்பு மணி ஒலியுடன் விசேஷ பூஜையும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து பகுமானம் அர்ச்சனையும் வெங்கடாஜலபதி சுவாமி யின் தலையில் அணி விக்கப்படும் கிரீடம் மூலம் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்ச்சியும் 9 மணிக்கு ஏகாந்த சேவை யும் நடக்கிறது. இந்த பவித்ர உற்சவத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வைகானசா ஆகம ஆலோ சகர் ஸ்ரீ விஷ்ணு பட்டாச் சார்யலு தலைமையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள 7 அர்ச்ச கர்கள் நடத்துகிறார்கள்.

    இந்த பவித்ர உற்சவத்துக் கான ஏற்பாடுகளை சென் னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி தலைமையில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கன்னியாகுமரி வெங்கடா ஜலபதி கோவில் ஆய்வாளர் சாய்கிருஷ்ணா ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் புனித நீராடினார்.
    • நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடத்தப்படும்.. இந்த ஆண்டுக்கான பவித்ரஉற்சவம் கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக்கொடிமரத்தின் அருகில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பவித்ரஉற்சவத்தின் 7-ம் நாளான கடந்த 12-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் திருவந்திகாப்பு கண்டருளி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்த பேரருடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 10 மணியளவில் நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் புனித நீராடினார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு பகல் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மதியம் 3.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை பொதுஜனசேவை நடைபெற்றது. பவித்ரஉற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நாளை நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.
    • 15-ம்தேதி ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பிடப்படும்.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதங்களில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் மிக சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் கடந்த 6-ந் தேதி தொடங்கியது. வருகிற 14-ந் தேதி வரை நடைபெறும் இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.

    உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசல் எதிரே உள்ள கருடமண்டபத்திற்கு இரவு 7.30 மணியளவில் வந்தடைந்தார். அங்கிருந்தவாறு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    விழாவின் நிறைவு நாளான நாளை(புதன்கிழமை) காலை 10 மணியளவில் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பிடப்படும். பவித்ர உற்சவ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×