search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனியன் தொழிலாளி"

    • நேற்று முன்தினம் இரவு காளி குமாரசாமி கோவில் பின்புறம் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார்.
    • வீரபாண்டி போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்

    திருப்பூர்:

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் கிறிஸ்டின் ராஜ் (வயது 27). இவர் திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காளி குமாரசாமி கோவில் பின்புறம் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது 3 வாலிபர்கள் திடீரென்று அவரை வழிமறித்து பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அதில் ஒருவர் கத்தியை எடுத்து கிறிஸ்டின் ராஜன் கழுத்தில் காயப்படுத்தி விட்டு செல்போனை பறித்துக் கொண்டு 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து வீரபாண்டி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதாவிடம் கிறிஸ்டின் ராஜ் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக திருப்பூர் பலவஞ்சிபாளையம் அடுக்குமாடி குடியிருப்போர் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் (வயது 19), சூர்யா (19) மற்றும் கவுதம் (22) என்ற 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிறிஸ்டின் ராஜை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதோடு கத்தியால் காயப்படுத்தி அங்கிருந்து தப்பி சென்றதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வீரபாண்டி போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    • 7 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
    • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர், பலவஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் ஞானேஸ்வரன் (26). இவர் வீரபாண்டி பகுதியில் டையிங் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் பணியின் இடைவேளையில் வெளியே வந்த போது அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரி நடத்திய விசாரணையில் சிறுமியிடம் ஞானேஸ்வரன் அத்துமீறியது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானேஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பக்கத்து வீட்டில் இருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.
    • பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த கணியூர்பூண்டி பகுதியை சேர்ந்தவர் மாறன் (வயது 58). இவர் அங்குள்ள தனியார் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் பக்கத்து வீட்டில் இருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணை மேற்கொண்ட போலீசார் பனியன் தொழிலாளி மாறனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்

    • நகைக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • நவீன் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    பல்லடம்:

    பல்லடம் கடைவீதியில் நகைக் கடை நடத்தி வந்தவர் வெங்கடாசலம் (வயது49) .இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து மனைவி ஆனந்தி அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தார். அப்போது மனைவியிடம் கடன் தொல்லையால், தங்க நகைகளை உருக்க பயன்படும் சயனைடு குடித்து விட்டதாக கூறி உள்ளார். பல்லடம் மருத்துவமனையில் முதலுதவி பெற்று சூலூர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வெங்கடாசலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடன் தொல்லையால் நகைக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பல்லடம் அருகே உள்ள சேகம்பாளையம் சாய் குரு கார்டன் நகரை சேர்ந்த கண்ணன் மகன் நவீன் (வயது20) .இவர் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரது தந்தை கண்ணன் அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியோடு அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×