சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை - பனியன் தொழிலாளி கைது

7 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஞானேஸ்வரன்.
ஞானேஸ்வரன்.
Published on

திருப்பூர் :

திருப்பூர், பலவஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் ஞானேஸ்வரன் (26). இவர் வீரபாண்டி பகுதியில் டையிங் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் பணியின் இடைவேளையில் வெளியே வந்த போது அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரி நடத்திய விசாரணையில் சிறுமியிடம் ஞானேஸ்வரன் அத்துமீறியது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானேஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com