search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணப் பரிவர்த்தனை"

    • ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பால் பணம் செலுத்துவதை யு.பி.ஐ. மிகவும் எளிமையாக்கி உள்ளது.
    • டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் யு.பி.ஐ. மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் அனைத்துப் பண பரிவர்த்தனைகளிலும் 40 சதவீதத்துக்கும் அதிகமான பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.

    அந்த வகையில் யு.பி.ஐ. முறையை 30 கோடிக்கும் அதிகமான தனி நபர்களும், 5 கோடிக்கும் அதிகமான வணிகர்களும் பயன்படுத்துகின்றனர். தெருவோர வியாபாரிகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் யு.பி.ஐ. பரிவர்த்தனை தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

    2022-ம் ஆண்டின் தரவுகளின்படி அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து பிரேசில், சீனா, தாய்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன.

    2016-ல் ஒரு மில்லியனாக இருந்த யு.பி.ஐ. பரிவர்த்தனை இப்போது 10 பில்லியன் பரிவர்த்தனைகளை தாண்டி உள்ளது. இந்தியர்கள் பணம் செலுத்தும் முறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தை இது எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

    2017-ல் ரொக்கப் பரிவர்த்தனைகள் 90 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைந்து. இதற்கு 2016-ல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டதே முக்கிய காரணம்.

    அதே சமயம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 இறுதியில் யு.பி.ஐ. வாயிலான பணப் பரிவர்த்தனை 900 சதவீதம் அதிகரித்தது.

    ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பால் பணம் செலுத்துவதை யு.பி.ஐ. மிகவும் எளிமையாக்கி உள்ளது. யு.பி.ஐ.யின் வளர்ச்சியால், பல்வேறு வகையான கட்டணம் செலுத்தும் முறை இலகுவானதுடன், டெபிட் கார்டுகளின் பயன்பாடும் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது.

    டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் யு.பி.ஐ. மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்.பி.சி.ஐ.), இண்டர் நேஷனல் பேமென்ட்ஸ் நிறுவனத்தை (என்.ஐ.பி.எல்.) உருவாக்கி ரிசர்வ் வங்கியுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களுடன் இணைந்து யு.பி.ஐ. பரிவர்த்தனையை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    சமீபத்தில் பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய நாடுகள் யு.பி.ஐ. பணப்பரிமாற்ற சேவையில் இணைந்து உள்ளன. விரைவில் ஐரோப்பிய நாடுகளும் இந்த சேவையில் இணைய உள்ளன.

    ×