search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்வாண படம்"

    பேஸ்புக்கில் வெளியான இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை பார்த்து ஏமாந்து அவர்களை தேடிச் சென்ற வாலிபர்களிடம் பணம் பறித்த 2 பெண்கள் உள்பட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    சமூக வலைதளங்கள் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைத்தாலும், அதை தவறான செயலுக்கு பயன்படுத்தி பணம் பறிக்கும் செயல்களும் அடிக்கடி நடந்து வருகிறது.

    பேஸ்புக், வாட்ஸ்-அப் மூலம் ஆன்லைனில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு இளம்பெண்களின் படங்களை அவர்களுக்கு அனுப்பி அதன் மூலம் விபசாரம் செய்யும் கும்பல்கள் கேரளாவில் பல இடங்களில் சிக்கி உள்ளன. இது தொடர்பாக வரும் புகார்களை சைபர்கிரைம் போலீசார் விசாரித்து அந்த கும்பல்களை தொடர்து கைது செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பேஸ்புக்கில் வெளியான இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை பார்த்து ஏமாந்து அவர்களை தேடிச் சென்ற வாலிபர்களிடம் பணம் பறித்த 2 பெண்கள் உள்பட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருச்சூர் அருகே தலச்சேரி பகுதியை சேர்ந்த இளம் என்ஜினீயர் ஒருவர் சமூக வலைதளங்களில் நேரம் செலவிடுவதில் அதிக ஆர்வம் உள்ளவர். பேஸ்புக்கில் அவர் பார்வையிட்டு கொண்டிருந்த போது 2 இளம் பெண்கள் தங்களின் கவர்ச்சி படங்களை வெளியிட்டு இருந்தனர். மேலும் அதை பார்ப்பவர்கள் ஆசையை தூண்டும் வகையில் சில வாசகங்களை வெளியிட்டு தங்களது செல்போன் நம்பர்களையும் அதில் பதிவிட்டு இருந்தனர். இதை பார்த்ததும் சபலமடைந்த அந்த என்ஜினீயர் செல்போன் நம்பரில் தொடர்புகொண்டு பேசினார்.

    அப்போது அவரிடம் ஒரு இளம்பெண் பேசினார். அவர் கொடுங்கல்லூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முகவரியை கூறி அங்கு வந்தால் தன்னை சந்திக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினார். இதனால் அவரும் அந்த பெண் கூறிய முகவரிக்கு சென்றார். அங்குள்ள ஒரு வீட்டில் 2 இளம்பெண்கள் இருந்தனர். அவர்கள் அந்த என்ஜினீயரிடம் நெருக்கமாக அமர்ந்து அவரை மயக்க தொடங்கினார்கள்.

    அப்போது திடீரென்று கதவு தட்டப்பட்டதால் அந்த பெண்கள் கதவை திறந்தனர். அங்கு 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். தங்களை போலீஸ் என்று கூறிக்கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்தனர். மேலும் அந்த வாலிபரை நிர்வாணமாக்கி 2 அழகிகளுடன் நெருக்கமாக நிற்க வைத்து செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

    அப்போது அந்த பெண்கள் ஒன்றும் அறியாதவர்கள் போல கண்ணீர் விட்டு கதறினார்கள். தங்களை விட்டு விடும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டனர். உடனே 4 வாலிபர்களும் அந்த என்ஜினீயரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தையும், ஏ.டி.எம். கார்டையும் பறித்துக் கொண்டனர். மேலும் தங்களுக்கு ரூ.3 லட்சம் கொடுக்காவிட்டால் இந்த ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிவிட்டு சென்று விட்டனர்.

    இதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட என்ஜினீயர் கொடுங்கல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடி நடவடிக்கையில் இறங்கி அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர். அப்போது அங்கு நசீமா (வயது 26), சமீனா (26) என்ற 2 இளம்பெண்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த 2 பெண்களும் பேஸ்புக்கில் படங்களை போட்டு வாலிபர்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்கள் என்பது தெரியவந்தது.

    உடனே அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த மோகன்(34), பாபு (35), சிங்கித் (29), அக்பர்ஷா (24) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதே போல பல வாலிபர்களை ஏமாற்றி அவர்கள் பணம் பறித்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×