search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூசிலாந்து அணி"

    • உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஓய்விலிருந்து திரும்பிய கேன் வில்லியம்சன் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெலிங்டன்:

    இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

    இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பீல்டிங் செய்கையில் காயமடைந்து ஓய்விலிருந்து திரும்பிய கேன் வில்லியம்சன் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் டிம் சவுதி , டிரென்ட் பவுல்ட் போன்ற திறமையான பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி பின்வருமாறு;-

    நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, வில் யங்.

    • டி20 உலகக்கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
    • இதில் 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

    8-வது டி 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலகக்கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

    இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கான கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இளம் வீரரான மைக்கேல் பிரேஸ்வெல் இடம் பிடித்துள்ளார். 

    நியூசிலாந்து அணி:

    கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிம் சவுத்தி, இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, மார்ட்டின் கப்டில், லாச்லன் பெர்குசன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், டிரென்ட் போல்ட், பின் ஆலன்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை மைக் ஹஸ்சன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். #NewZealand #BlackCaps #MikeHesson
    நியூசிலாந்து:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மைக் ஹஸ்சன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புவதால் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    மைக் ஹஸ்சனுக்கு அடுத்த ஆண்டு வரை ஒப்பந்தம் உள்ளது. ஆனால் அதற்குள் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது இந்த முடிவை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்று கொண்டுள்ளது. ஜூலை 31-ந்தேதியில் இருந்து மைக் ஹஸ்சனின் ராஜினாமா அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அடுத்த ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில் மைக் ஹஸ்சன் பதவி விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #NewZealand #BlackCaps #MikeHesson
    ×