என் மலர்
நீங்கள் தேடியது "வங்காளதேச அணி"
- அந்த அணியில் ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா ரியாத், சவுமியா சர்கார், முஸ்தாபிசுர் ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
- ரிசர்வ் வீரர்களாக அபிப் ஹொசைன், ஹசன் மஹ்மூத் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வங்காளதேச கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி வங்காளதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா ரியாத், சவுமியா சர்கார், முஸ்தாபிசுர் ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
வங்காளதேச அணி விவரம்:-
நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), தஸ்கின் அகமது, லிட்டன் தாஸ், சவுமியா சர்கார், தன்சித் ஹசன் தமீம், ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா ரியாத், ஜேக்கர் அலி அனிக், தன்வீர் இஸ்லாம், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப்.
ரிசர்வ் வீரர்கள்; அபிப் ஹொசைன், ஹசன் மஹ்மூத்
- வங்காளதேசத்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.
- நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பாகிஸ்தானை 60 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
ராவல்பிண்டி:
ஐ.சிசி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 6-வது லீக் ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நாளை (24-ந்தேதி) நடக்கிறது. இதில் ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பாகிஸ்தானை 60 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதே உத்வேகத்துடன் வங்காளதேசத்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.
வில்யங், டாம் லாதம் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து முத்திரை பதித்தனர். பந்து வீச்சில் கேப்டன் மிச்சேல் சான்ட்னெர், வில் ஓ ரூர்கே, மேட் ஹென்றி ஆகியோர் சாதித்தனர். இது தவிர கான்வே, வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ் போன்ற சிறந்த வீரர்களும் நியூசிலாந்து அணியில் உள்ளனர்.
நஜ்முல் உசேன் ஷான்டோ தலைமையிலான வங்காளதேசம் முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு இருக்கிறது. தோற்றால் போட்டியில் இருந்து இருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்படும்.
பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.






