என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நியூசிலாந்து அணி வங்காளதேசத்துடன் நாளை மோதல்
    X

    நியூசிலாந்து அணி வங்காளதேசத்துடன் நாளை மோதல்

    • வங்காளதேசத்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.
    • நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பாகிஸ்தானை 60 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    ராவல்பிண்டி:

    ஐ.சிசி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 6-வது லீக் ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நாளை (24-ந்தேதி) நடக்கிறது. இதில் ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பாகிஸ்தானை 60 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதே உத்வேகத்துடன் வங்காளதேசத்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.

    வில்யங், டாம் லாதம் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து முத்திரை பதித்தனர். பந்து வீச்சில் கேப்டன் மிச்சேல் சான்ட்னெர், வில் ஓ ரூர்கே, மேட் ஹென்றி ஆகியோர் சாதித்தனர். இது தவிர கான்வே, வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ் போன்ற சிறந்த வீரர்களும் நியூசிலாந்து அணியில் உள்ளனர்.

    நஜ்முல் உசேன் ஷான்டோ தலைமையிலான வங்காளதேசம் முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு இருக்கிறது. தோற்றால் போட்டியில் இருந்து இருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்படும்.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    Next Story
    ×