search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துஷார் தேஷ்பாண்டே"

    • ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
    • லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி விளையாடிய 8 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்தில உள்ளது.

    குறிப்பாக கடைசியாக லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஹைதராபாத் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே 'தல' அஜித்தை சந்தித்து பேசியுள்ளார்.

    இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில் புத்திசாலித்தனமும் எளிமையும் நிறைந்தவர் அஜித் என அவர் பதிவிட்டுள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மும்பை அணி முதல் இன்னிங்சில் 384 ரன்கள் எடுத்தது.
    • முதல் இன்னிங்சில் பரோடா அணி 348 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் பரோடா ஆகிய அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 384 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முஷிர் கான் 203 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த பரோடா 348 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சொலங்கி, ராவத் ஆகியோர் சதம் அடித்தனர். 36 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்ங்சியை ஆடிய மும்பை அணி 569 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    ஒரு கட்டத்தில் மும்பை அணி 337 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்திருந்தது. இந்நிலையில் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தனுஷ் கோட்யான்- துஷார் தேஷ்பாண்டே ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினர். இதன் மூலம் இந்த ஜோடி புதிய வரலாற்று சாதனையை படைத்து.

    78 ஆண்டு கால முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் 10-வது மற்றும் 11-வது பேட்டர் இருவரும் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். தனுஷ் 120 (நாட் அவுட்) ரன்களுடன் தேஷ்பாண்டே 123 (அவுட்) ரன்களும் குவித்தனர். இதன் மூலம் பரோடா அணிக்கு 606 ரன்கள் இலக்காக மும்பை அணி நிர்ணயித்தது. இன்று கடைசி நாள் என்பதால் மும்பை அணியே வெற்றி பெரும் நிலையில் உள்ளது. 

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ருதுராஜ் கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
    • இவரை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜூன் 8-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ருதுராஜ் கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

    இவரை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜூன் 8-ம் தேதி நீண்ட நாள் காதலியான ரச்சனா கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் இந்த இரண்டு ஐபிஎல் இளம் வீரர்களை தொடர்ந்து தற்போது சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலரான துஷார் தேஷ்பாண்டேவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தனது பள்ளி தோழி நாபா கட்டம்வார் என்பவரை கரம் பிடித்து இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளார். இவர்களது திருமணம் மும்பையில் ஜூன் 12-ம் தேதி நடைபெற்றுள்ளது.

    திருமண நிகழ்வின் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த தேஷ்பாண்டே, "எனது பள்ளி கால க்ரஷாக இருந்தவர் வருங்கால மனைவியாக புரொமோட் ஆகியுள்ளார்" என குறிப்பிட்டிருந்தார். இவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

    28 வயதாகும் துஷார் தேஷ்பாண்டே ஐபிஎல் 2022 சீசனில் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணியினரால் வாங்கப்பட்டார். அந்த சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

    இதைத்தொடர்ந்து நடந்து முடிந்த ஐபிஎல் 2023 சீசனில் சிஎஸ்கே அணியின் முக்கிய பவுலராக ஜொலித்த தேஷ்பாண்டே அனைத்து போட்டிகளிலும் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் சிஎஸ்கே அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக இருந்துள்ளார்.

    • சென்னை அணியில் இம்பேக்ட் பிரேயராக துஷார் தேஷ்பாண்டே களமிறங்கினார்.
    • குஜராத் அணியில் இம்பேக்ட் பிளேயராக தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார்.

    ஐபிஎல் 16-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை-குஜராத் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஒவ்வொரு முறையும் ஐபிஎல் தொடரில் ஏதாவது புதிய விதிமுறை அறிமுகத்திற்கு வரும். அந்த வகையில் இந்த முறை 'இம்பேக்ட் பிளேயர்' என்கிற முறையை அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த புதிய விதியின் படி, டாஸ் போடும் போது வழங்கப்படும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியலுடன், மாற்று வீரர்கள் 5 பேரின் பெயர்களையும் வழங்க வேண்டும். அந்த 5 பேரில் இருந்து ஒருவரை, ஆட்டத்தின் நடுவில் களமிறக்கலாம்.

    அது பந்து வீச்சாக இருந்தாலும் சரி, பேட்டிங் வரிசையாக இருந்தாலும் சரி, அது அந்த அணியின் விருப்பம். அதே நேரத்தில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால் மட்டுமே, கூடுதலாக ஒரு வெளிநாட்டு வீரரை களத்தில் இறக்க முடியும். ஒருவேளை 4 வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால், ஐந்தாவதாக மற்றொரு வெளிநாட்டு வீரரை 'இம்பேக்ட் ப்ளேயராக' களத்தில் இறக்க முடியாது.

    இந்த புதிய விதியை தன்னுடைய முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயன்படுத்தியது. குஜராத்திற்கு எதிராக களமிறங்கிய சென்னை அணியின் அம்பாதி ராயுடு பேட்டிங் செய்த நிலையில், சென்னை அணி பீல்டிங் செய்யும் போது, அவருக்கு பதிலாக 'இம்பேக்ட் பிரேயர்' முறையில் துஷார் தேஷ்பாண்டே மாற்றப்பட்டார்.

    3.2 ஓவர்களை வீசிய அவர், 51 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். 15.30 எக்கானமியை பெற்றார். இவ்வாறு களம் கண்டதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் முதல் 'இம்பேக்ட் ப்ளையர்' என்கிற பெருமையை பெற்றார் தேஷ்பாண்டே.

    இதேபோல குஜராத் அணியிலும் இம்பேக்ட் பிளேயராக தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார். குஜராத் அணி பீல்டிங் செய்யும் போது சிக்சரை தடுக்க சென்ற வில்லியம்சனுக்கு காலில் அடிப்பட்டதால் அவர் பாதிலேயே வெளியேறினார். இதனால் அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் பேட்டிங் செய்தார்.

    அவர் 17 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருவரும் சொல்லி கொள்ளும் அளவுக்கு எந்த இம்பேக்ட்டும் கொடுக்கவில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர்.

    ×