search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண வரவேற்பு விழா"

    • சிங்கம்புணரி எஸ்.புதூர் ஒன்றியத்தில் மாவட்ட சேர்மன் இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது.
    • சீர் கொண்டு வந்த அனைவரையும் பொன்மணி பாஸ்கரன் குடும்பத்தினர் நன்றி கூறி வரவேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் பொன்னடபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்மணி பாஸ்கரன். இவர் அ.தி.மு.க.வில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தன்னை இணைத்துக் கொண்டார்.

    கட்சி பணியோடு சென்னை போன்ற பெருநகரங்களில் பல்வேறு தொழில்களில் முனைப்பு காட்டும் தொழிலதிபராக வலம் வருகிறார். இவர் ஈட்டும் வருமானத்தை கட்சி பணிக்கு அப்பாற்பட்டு கோவில் கட்டுதல், கல்விக்கூடங்கள் கட்டிக்கொடுத்தல், ஏழை-எளிய மக்களுக்கு திருமண உதவி செய்தல் போன்ற பல்வேறு அறப்பணிகளில் முழுமையாக அர்ப்பணிக்கும் மனிதராகவும் இருந்து வருகிறார்.

    கொரோனா நேரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த பகுதி மக்களின் ஒவ்வொ ருவரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து அவர்களின் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்தார்.

    இவரின் இத்தகைய செயல் இந்த பகுதி மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் கட்சி மேலிடத்தியிலும் நன்மதிப்பை பெற்றது. கடந்த 10 ஆண்டுகளுக்குள் பொன்மணி பாஸ்கரன் மெல்ல மெல்ல அசுர வளர்ச்சி அடைந்து அ.தி.மு.க. கிளை செயலாளர், மாவட்ட கவுன்சிலர் போன்ற பதவிகளை வகித்து தற்போது சிவகங்கை மாவட்ட ஊராட்சி குழு தலைவராகவும், மாவட்ட பேரவை துணைச் செயலா ளராகவும்பதவி வகித்து வருகிறார்.

    இவருக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த 12-ந் தேதி சென்னையில் உள்ள திருமண மகாலில் மகள் ஹரிப்பிரியா-ஜெயக்குமார் ஆகியோரது திருமணம் நடந்தது. அதனுடைய வரவேற்பு விழாவை, தான் பிறந்த ஊரில் வைக்கும் வகையில் இந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் அழைப்பிதழ் வழங்கினார்.

    அதற்காக பிரமா ண்டமாக ஏற்பாடுகள் சிவகங்கை மாவட்டம் குன்னத்தூரில் அருகே உள்ள ஓ.வி.எம். கார்டனில் நடந்தது.

    வரவேற்பு விழாவில் முன்னாள் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொழிலதிபர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

    திருமண வரவேற்பு விழாவை சிறப்பிக்கும் வகையில் எஸ்.புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமக்கள் சார்பில் சீர் செய்யும் விழா நடத்தினர். சுமார் 504 ஆட்டுக்கிடாக்கள், ஆளுயுர குத்துவிளக்கு, தாமிர பானை, சேலை, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை குன்னத்தூர் கண்மாய் கரை சாலை நெடுகிலும் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் திருமண வரவேற்பு பந்தலுக்கு கொண்டு வந்தனர்.

    சீர் கொண்டு வந்த அனைவரையும் பொன்மணி பாஸ்கரன் குடும்பத்தினர் நன்றி கூறி வரவேற்றனர்.

    விழாக்கோலம் போல் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் சீர் எடுத்து வந்தது காண்போர் மத்தியில் ஆனந்தத்தையும், பரவசத்தையும் ஏற்படுத்தியது.

    • எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி நகர அ.தி.மு.க. செயலாளரும், தருமபுரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான பூக்கடை ரவி-நகராட்சி கவுன்சிலர் ராஜாத்தி ரவி ஆகியோரது மகள் டாக்டர் ஆர். கீதாவுக்கும், கோவை எஸ்.மனோகரன் - சாந்தி ஆகியோரது மகன் எம். சிவ பிரீத்தமுக்கும் திருமணம் கொல்லப்பட்டி பெருமாள் கோவிலில் நடைபெற்றது. இந்த திருமணத்தின் வரவேற்பு விழா தருமபுரி-பென்னாகரம் சாலையில் உள்ள ஜோதி மகாலில் நேற்று நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார்.

    விழாவுக்கு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ., தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி தாளாளர் மல்லிகா அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ்.ஆர். வெற்றிவேல் வரவேற்றார்.

    விழாவில் கட்சியின் அமைப்பு செயலாளர் கே. சிங்காரம், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், எம்.எல்.ஏ கோவிந்தசாமி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பூ வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    இதற்கான ஏற்பாடுகளை தருமபுரி நகர அ.தி.மு.க. செயலாளர் பூக்கடை ரவி, நகராட்சி கவுன்சிலர் ராஜாத்திரவி, அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் அசோகன், டாக்டர் யாஸ்கின் டிசோசா, டாக்டர் சரண்குமார் மற்றும் குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    திருமண வரவேற்பு விழாவுக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் டி.குணசேகரன்- ஜி.உமா பொன்னரசி ஆகியோரது மகன் என்ஜினீயர் ஜி.செல்வகுமாருக்கும், தூத்துக்குடி, சாத்தான்குளம் . அரசூர்பூச்சிக்காடு கே.எட்வர்ட் யோகராஜ்- இ.வனஜா ஆகியோரது மகள் இ.வி.அனிஷாவுக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
    • திருமண விழா நாளை மறுநாள் (5-ந்தேதி, திங்கட்கிழமை) காலை 7.15 மணிக்கு வயலூர் முருகன் கோவிலில் நடைபெறுகிறது.

    திருச்சி,

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் டி.குணசேகரன்- ஜி.உமா பொன்னரசி ஆகியோரது மகன் என்ஜினீயர் ஜி.செல்வகுமாருக்கும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் அரசூர்பூச்சிக்காடு கே.எட்வர்ட் யோகராஜ்- இ.வனஜா ஆகியோரது மகள் இ.வி.அனிஷாவுக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இந்த திருமண விழா நாளை மறுநாள் (5-ந்தேதி, திங்கட்கிழமை) காலை 7.15 மணிக்கு வயலூர் முருகன் கோவிலில் நடைபெறுகிறது. முன்னதாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருமண வரவேற்பு விழா திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ெரயில்வே சொசைட்டி ஏ.சி. ஹைடெக் மஹாலில் நடக்கிறது.

    இந்த திருமண வரவேற்பு விழாவுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான ஆர்.சரத்குமார், முதன்மை துணைப் பொதுச்செயலாளரும் மாநில மகளிர் அணி செயலாளருமான ராதிகா சரத்குமார் ஆகியோர் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்கள்.

    விழாவில் மாநில துணைப் பொதுச் செயலாளரும் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளருமான என்.சுந்தர், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் ஜி.ஈஸ்வரன், டி.மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வசிக்கிறார்கள்.

    முன்னதாக திருச்சி மண்டல செயலாளர் சி. எம்.சின்னசாமி வரவேற்று பேசுகிறார். நிறைவில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் எம்.எஸ்.துரை பாலகிருஷ்ணன் நன்றி கூறுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.குணசேகரன் மற்றும் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    ×