search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில்சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்   குணசேகரன் இல்ல திருமண வரவேற்பு விழா -  சரத்குமார். ராதிகா சரத்குமார் பங்கேற்கிறார்கள்
    X

    திருச்சியில்சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் குணசேகரன் இல்ல திருமண வரவேற்பு விழா - சரத்குமார். ராதிகா சரத்குமார் பங்கேற்கிறார்கள்

    • சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் டி.குணசேகரன்- ஜி.உமா பொன்னரசி ஆகியோரது மகன் என்ஜினீயர் ஜி.செல்வகுமாருக்கும், தூத்துக்குடி, சாத்தான்குளம் . அரசூர்பூச்சிக்காடு கே.எட்வர்ட் யோகராஜ்- இ.வனஜா ஆகியோரது மகள் இ.வி.அனிஷாவுக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
    • திருமண விழா நாளை மறுநாள் (5-ந்தேதி, திங்கட்கிழமை) காலை 7.15 மணிக்கு வயலூர் முருகன் கோவிலில் நடைபெறுகிறது.

    திருச்சி,

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் டி.குணசேகரன்- ஜி.உமா பொன்னரசி ஆகியோரது மகன் என்ஜினீயர் ஜி.செல்வகுமாருக்கும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் அரசூர்பூச்சிக்காடு கே.எட்வர்ட் யோகராஜ்- இ.வனஜா ஆகியோரது மகள் இ.வி.அனிஷாவுக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இந்த திருமண விழா நாளை மறுநாள் (5-ந்தேதி, திங்கட்கிழமை) காலை 7.15 மணிக்கு வயலூர் முருகன் கோவிலில் நடைபெறுகிறது. முன்னதாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருமண வரவேற்பு விழா திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ெரயில்வே சொசைட்டி ஏ.சி. ஹைடெக் மஹாலில் நடக்கிறது.

    இந்த திருமண வரவேற்பு விழாவுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான ஆர்.சரத்குமார், முதன்மை துணைப் பொதுச்செயலாளரும் மாநில மகளிர் அணி செயலாளருமான ராதிகா சரத்குமார் ஆகியோர் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்கள்.

    விழாவில் மாநில துணைப் பொதுச் செயலாளரும் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளருமான என்.சுந்தர், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் ஜி.ஈஸ்வரன், டி.மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வசிக்கிறார்கள்.

    முன்னதாக திருச்சி மண்டல செயலாளர் சி. எம்.சின்னசாமி வரவேற்று பேசுகிறார். நிறைவில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் எம்.எஸ்.துரை பாலகிருஷ்ணன் நன்றி கூறுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.குணசேகரன் மற்றும் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×