என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருமண வரவேற்பு விழா: எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
  X

  விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.  

  திருமண வரவேற்பு விழா: எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார்.
  • எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

  தருமபுரி,

  தருமபுரி நகர அ.தி.மு.க. செயலாளரும், தருமபுரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான பூக்கடை ரவி-நகராட்சி கவுன்சிலர் ராஜாத்தி ரவி ஆகியோரது மகள் டாக்டர் ஆர். கீதாவுக்கும், கோவை எஸ்.மனோகரன் - சாந்தி ஆகியோரது மகன் எம். சிவ பிரீத்தமுக்கும் திருமணம் கொல்லப்பட்டி பெருமாள் கோவிலில் நடைபெற்றது. இந்த திருமணத்தின் வரவேற்பு விழா தருமபுரி-பென்னாகரம் சாலையில் உள்ள ஜோதி மகாலில் நேற்று நடைபெற்றது.

  இந்த விழாவுக்கு தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார்.

  விழாவுக்கு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ., தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி தாளாளர் மல்லிகா அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ்.ஆர். வெற்றிவேல் வரவேற்றார்.

  விழாவில் கட்சியின் அமைப்பு செயலாளர் கே. சிங்காரம், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், எம்.எல்.ஏ கோவிந்தசாமி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பூ வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

  இதற்கான ஏற்பாடுகளை தருமபுரி நகர அ.தி.மு.க. செயலாளர் பூக்கடை ரவி, நகராட்சி கவுன்சிலர் ராஜாத்திரவி, அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் அசோகன், டாக்டர் யாஸ்கின் டிசோசா, டாக்டர் சரண்குமார் மற்றும் குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

  திருமண வரவேற்பு விழாவுக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×