search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்லாந்து குகை"

    தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரை மீட்கும் பணியில், 4 சிறுவர்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளார். #ThaiCaveRescue
    பாங்காக்:

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. 

    திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை மீட்பதற்கு  கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர். 



    முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது.  மீட்ப்புப்பணியில் சிறப்பான முன்னேற்றமாக 13 பேரில் 4 மாணவர்கள் நேற்று மீட்கப்பட்டனர். 

    இந்நிலையில், இன்று மேலும் 4 பேர் மீட்கப்பட்டுளனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் முதலுதவி அளிக்கப்பட்ட பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீதமுள்ள 5 பேரும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் மீட்புக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். 
    தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள மாணவர்கள் விரைவில் மீட்கப்பட்டுவிட்டால் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் பைனலை பார்க்க வரலாம் என பிபா தலைவர் கியான்னி இன்பான்டினோ தெரிவித்துள்ளார். #ThaiCave #FIFA
    மாஸ்கோ:

    தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் கடந்த மாதம் 23-ம் தேதி சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் 9 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த 2 நீர்மூழ்கி வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    ஆனால், குகைக்குள் தேங்கிய தண்ணீரைக் கடந்து அவர்களை அழைத்து வர முடியாத நிலை உள்ளது. எனவே, முதலில் நீர்மூழ்கி வீரர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடற்படையில் நன்கு பயிற்சி பெற்ற நீர்மூழ்கி வீரர்கள் குகைக்குள் சென்று அவர்களை அழைத்து வரும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.

    தற்போது மழைக்காலம் என்பதால் குகைக்குள் நீர்மட்டம்  மேலும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, சிறுவர்களுக்கு நீரில் மூழ்கி நீந்துவதற்கு கற்றுக்கொடுத்து அதன்பின்னர் மீட்டு அழைத்து வர வேண்டும். இதைவிட்டால், நீர் மட்டம் குறையும் வரை காத்திருக்க வேண்டும். இதனால், அவர்களை முழுவதுமாக மீட்க சில மாதங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அமைப்பின் தலைவர் கியான்னி இன்பான்டினோ, தாய்லாந்து கால்பந்து சங்க தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 13 பேரும் உயிருடன் பத்திரமாக மீட்கப்படுவர் என தாம் நம்புவதாகவும், அவர்களுக்காக பிராத்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

    மேலும், 13 பேரும் விரைவில் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்கள் குடும்பத்தினருடன் இணைந்த பின்னர், அவர்கள் உடல்நிலை ஒத்துழைத்தால் அவர்கள் அனைவரும் ரஷியாவில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண வரலாம் எனவும் கடிதத்தில் கியான்னி இன்பான்டினோ தெரிவித்துள்ளார்.

    இதேபோல, உலகின் பல முன்னணி கால்பந்து கிளப்புகளின் தலைமை நிர்வாகிகளும் தாய்லாந்து மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் குரல்களை தெரிவித்துள்ளனர். 
    ×