search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thai Cave Rescue"

    தாய்லாந்தில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மூன்று பேர் மற்றும் பயிற்சியாளருக்கு அந்நாட்டு அரசு குடியுரிமையை வழங்கியுள்ளது.
    பாங்காக் :

    தாய்லாந்தில் குகையில் சிக்கி தவித்த சிறுவர்கள் 12 பேர், அவர்களின் பயிற்சியாளர் என மொத்தம் 13 பேர், கடந்த ஜூலை 10-ஆம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    18 நாள்கள் நடைபெற்ற மிகப்பெரும் போராட்டத்துக்குப் பிறகு, உயிருடன் அவர்கள் மீட்கப்பட்டனர். இந்த மீட்புப்பணிகள், உலக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சிறுவர்கள் குகையில் சிக்கியதும், அவர்களுக்காக நடைபெற்ற மீட்புப்பணிகளும் இந்த ஆண்டில் நடைபெற்ற மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களில் மூன்று பேர் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்த அகதிகள் என்பதால் அவர்களுக்கு தாய்லாந்து குடியுரிமை இல்லாமல் இருந்தது.

    இந்நிலையில், சிறுவர்கள் மூன்று பேர் மற்றும் பயிற்சியாளருக்கு தாய்லாந்து அரசு குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது.

    இதனை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையம், ’சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்கியதன் மூலம் தாய்லாந்து அரசு அவர்களுக்கு முறையான அடையாளத்தை வழங்கியுள்ளது. தற்போது சமூகத்தின் முழு உறுப்பினராக இருந்தவாறு அவர்கள் நினைத்ததை சாதிக்க முடியும்’ என தெரிவித்துள்ளது.
    அரையிறுதியில் பெற்ற வெற்றியை இங்கிலாந்து வீரர் பால் போக்பா குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அர்ப்பணித்துள்ளார். #WorldCup2018 #thaicaverescue
    தாய்லாந்து நாட்டில் கால்பந்து விளையாடும் 11 முதல் 16 வயதுடைய 12 சிறுவர்கள், தங்களது பயிற்சியாளருடன் குகையில் சிக்கிக் கொண்டனர். 18 நாட்கள் குகையில் தவித்த அவர்களை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். சிறுவர்களை மீட்ட மீட்புக் குழுவினருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த செய்தி உலகக்கோப்பையில் விளையாடும் பிரான்ஸ் நட்சத்திர வீரரான பால் போக்பாவையும் எட்டியது.

    நேற்று பெல்ஜியத்திற்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அர்பணிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    போக்பா தனது டுவிட்டர் பக்கத்தில் மீட்கப்பட்ட சிறுவர்களின் படத்தை வெளியிட்டு ‘‘இன்றைய நாளில் ஹீரோக்கள் ஆன சிறுவர்களுக்கு இந்த வெற்றி செல்கிறது. வெல்டன் பாய்ஸ், நீங்கள் எப்போதும் வலிமையானவர்கள்’’ ட்வீட் செய்துள்ளார்.
    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு ஜெர்சி வழங்க அட்ரஸ் தருமாறு உதவி கேட்டுள்ளார் இங்கிலாந்து வீரர் வால்கர். #WorldCup2018
    தாய்லாந்து நாட்டில் கால்பந்து விளையாடும் 11 முதல் 16 வயதுடைய 12 சிறுவர்கள், தங்களது பயிற்சியாளருடன் குகையில் சிக்கிக் கொண்டனர். 18 நாட்கள் குகையில் தவித்த அவர்களை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.

    சிறுவர்களை மீட்ட மீட்புக் குழுவினருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த செய்தி உலகக்கோப்பையில் விளையாடும் இங்கிலாந்து கால்பந்து அணியில் இடம்பிடித்துள்ள கைல் வால்கரையும் எட்டியுள்ளது.

    அவர் தனது டுவிட்டரில், அனைத்து சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. நான் அவர்களுக்கு எனது ஜெர்சியை அனுப்ப விரும்புகிறேன். அங்கே, யாராவது எனக்கு அவர்களுடைய முகவரியை அனுப்பு உதவி செய்ய முடியுமா? என்று பதிவிட்டுள்ளார்.



    தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரை மீட்கும் பணியில், 4 சிறுவர்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளார். #ThaiCaveRescue
    பாங்காக்:

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. 

    திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை மீட்பதற்கு  கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர். 



    முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது.  மீட்ப்புப்பணியில் சிறப்பான முன்னேற்றமாக 13 பேரில் 4 மாணவர்கள் நேற்று மீட்கப்பட்டனர். 

    இந்நிலையில், இன்று மேலும் 4 பேர் மீட்கப்பட்டுளனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் முதலுதவி அளிக்கப்பட்ட பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீதமுள்ள 5 பேரும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் மீட்புக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். 
    தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கியுள்ள கால்பந்தாட்ட பயிற்சியாளர் மற்றும் சிறுவர்களை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்களை நாளை அனுப்ப உள்ளதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். #ThaiCaveRescue
    பாங்காக்:

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை மீட்பதற்கு  கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.

    முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நேற்று  மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. தேசமயம் அந்தப் பகுதியில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே,  குகைக்குள் சிக்கியுள்ள 13 பேரையும் கூடிய விரைவில் மீட்க வேண்டிய நெருக்கடி அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், குகைக்குள் சிக்கியுள்ள பயிற்சியளர் மற்றும் 12 சிறுவர்களை மீட்பதற்காக, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா கார் நிறுவன தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க் அவரது நிறுவனத்தின் போக்குவரத்து திட்டங்களை உருவாக்கும் தலைசிறந்த சுரங்கப்பாதை கட்டுமான பொறியாளர்களை நாளை தாய்லாந்துக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், குகையின் மேற்புறத்தில் இருந்து ஒரு மீட்டர் அளவிற்கு துளையிட்டு நைலானில் செய்யப்பட்ட பைப்புக்களை செலுத்துவதன் மூலம் குகைக்குள் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க முடியும் என அவர் தெரிவித்தார். 
    தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் நீர்மூழ்கி வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சக வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #ThaiCaveRescue #NavyDiverDies
    பாங்காக்:

    தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் 9 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த 2 நீர்மூழ்கி வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    ஆனால், குகைக்குள் தேங்கிய தண்ணீரைக் கடந்து அவர்களை அழைத்து வர முடியாத நிலை உள்ளது. எனவே, முதலில் நீர்மூழ்கி வீரர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடற்படையில் நன்கு பயிற்சி பெற்ற நீர்மூழ்கி வீரர்கள் குகைக்குள் சென்று அவர்களை அழைத்து வரும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.

    தற்போது மழைக்காலம் என்பதால் குகைக்குள் நீர்மட்டம்  மேலும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, சிறுவர்களுக்கு நீரில் மூழ்கி நீந்துவதற்கு கற்றுக்கொடுத்து அதன்பின்னர் மீட்டு அழைத்து வர வேண்டும். இதைவிட்டால், நீர் மட்டம் குறையும் வரை காத்திருக்க வேண்டும். 

    இந்த நிலையில், சிறுவர்கள் இருந்த குகைக்குள் சென்று திரும்பிய தாய்லாந்து முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் மரணம் அடைந்துவிட்டார். 

    தாய்லாந்து கடற்படையின் நீர்மூழ்கி வீரராக பணியாற்றிய சமன் குணன், சிறுவர்களை மீட்கும் பணிக்கு உதவி செய்வதற்காக தானாக முன்வந்து கடற்படையுடன் இணைந்துள்ளார். குகைக்குள் சென்று சிறுவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை ஒப்படைத்த குணன், அங்கிருந்து இன்று அதிகாலை நீருக்குள் மூழ்கி நீந்தியபடி குகையின் மற்றொரு பகுதியில் உள்ள முகாமிற்கு திரும்பினார். ஆனால், வழியிலேயே அவரது ஆக்சிஜன் சிலிண்டரில் ஆக்சிஜன் குறையத் தொடங்கியது. இதனால் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி இறந்துள்ளார் குணன். 

    நீர்மூழ்கி வீரரின் மரணம் மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆபத்து நிறைந்த இந்த மீட்புப் பணியில் முதல் உயிரிழப்பு இதுவாகும். 

    சிறுவர்களை மீட்பதற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர் குணனின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு சத்தாஹிப் கடற்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.  #ThaiCaveRescue #NavyDiverDies
    ×