என் மலர்

  நீங்கள் தேடியது "Thailand cave"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாய்லாந்தில் உயிரை பணயம் வைத்து நடத்தப்பட்ட குகை மீட்பு சம்பவத்தை மையமாகக் கொண்டு ரூ.400 கோடி செலவில் திரைப்படம் தயாரிக்க ஹாலிவுட் நிறுவனம் தயாராகி வருகிறது.
  லாஸ் ஏஞ்சல்ஸ்:

  தாய்லாந்தின் தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். 9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரியவந்தது, இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் உதவியுடன் ஆபத்தான மீட்பு நடவடிக்கையின் மூலம் சிறுவர்கள் மீட்கப்பட்டனர். மிகவும் சவாலான இந்த மீட்பு பணியை வெற்றிகரமாக செய்து முடித்த தாய்லாந்து கடற்படையினருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.


  இந்நிலையில், உலகையே மெய்சிலிர்க்க வைத்த தாய்லாந்து  குகை மீட்பு சம்பவம் ஹாலிவுட்டில் திரைப்படமாக  எடுக்கப்பட உள்ளது. பியூர் பிளிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் எனும் ஹாலிவுட் நிறுவனம் இதை 400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக எடுக்க உள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மிச்செல் ஸ்காட், மீட்பு பணிகள் நடந்த போது அதனை பார்வையிட்டுள்ளார். அவர் தான் பார்த்த காட்சிகளின் அடிப்படையில் இந்தப் படத்தை பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்.


  இதுதொடர்பாக, அவர் கூறுகையில் ‘உலக அளவில் மிகப்பெரிய வீர தீரச் செயலாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அங்கு பார்த்தபோது மெய் சிலிர்த்து போனேன். இதுபோன்ற உத்வேகமிக்க செயலை நான் பார்த்ததில்லை. தன்னார்வத்துடன் நடந்த இந்த மீட்பு பணி உலக வரலாற்றில் ஒரு மைல்கல். எனவே தான் இதனை திரைப்படமாக்க முடிவு செய்தோம்’ என தெரிவித்துள்ளார். #ThaiCaveRescue #ThaiCaveHollywoodMovie 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி உள்ளது. #ThaiCaveResue
  பாங்காக்:

  தாய்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் மியான்மர் எல்லையில் மலை உச்சியில் 800 மீட்டர் ஆழத்தில் 10 கி.மீ. தூரம் உள்ள குகை உள்ளது. கடந்த மாதம் 23-ந்தேதி ‘காட்டுப் பன்றிகள்’ என்ற கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், பயிற்சியாளரும் சாகச பயணம் மேற்கொண்டனர். குகைக்குள் ஒரு கி.மீ. தூரம் சென்றபோது திடீர் என்று மழை பெய்து வெள்ளம் புகுந்தது. அவர்களால் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

  குகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தி வைத்திருந்த சைக்கிள்களைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 9 நாட்களுக்கு பிறகுதான் அவர்கள் உயிருடன் இருப்பது வெளியுலகத்துக்கு தெரிய வந்தது.

  இதையடுத்து 13 பேரையும் மீட்கும் நடவடிக்கையில் தாய்லாந்து அரசு ஈடுபட்டது. இங்கிலாந்து, இந்தியா உள்பட பல்வேறு நாட்டு குகை மீட்பு நிபுணர்கள் முத்துக்குளிப்பு வீரர்கள் அங்கு குவிந்து மீட்பு பணியில் உதவினர்.

  கடந்த 8-ந்தேதி 4 சிறுவர்களும், 9-ந்தேதி 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். கடைசியாக 10-ம் தேதி 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை தாய்லாந்து நாட்டு கடற்படையினர் உயிருடன் மீட்டனர். இது மிகப்பெரிய சாதனையாகும்.

  இதை தாய்லாந்து நாடே மிகப்பெரிய விழாவாக கொண்டாடி வருகிறது. அப்போது சிறுவர்களை மீட்டது பற்றிய சாகசங்களை அதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


  இங்கிலாந்தைச் சேர்ந்த 2 முத்துக்குளிப்பு வீரர்கள்தான் முதலில் 12 சிறுவர்களையும் கண்டு பிடித்தனர். அவர்கள் வெளியே வந்துதான் சிறுவர்களைப் பற்றிய விவரங்களை தெரிவித்தனர். அவர்கள் வெளியில் வந்து தகவல் சொன்ன 6 நாட்களுக்குப் பிறகுதான் முழு வீச்சில் மீட்பு பணியை தொடங்க முடிந்தது.

  முதமலில் அவர்களுக்கு உணவு, ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டது. குகைக்குள் தண்ணீர் நிரம்பி இருந்தது. சிறுவர்களுக்கு நீச்சல் தெரியாது என்பதால் மறுபுறம் ஓட்டை போட்டு மீட்கலாமா என முயற்சி நடந்தது. அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

  அதன்பிறகு தண்ணீரை வெளியேற்றி மீட்கும் முயற்சி கைகொடுத்தது. இதற்கு இந்தியாவின் புனேயைச் சேர்ந்த கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனம் உதவியது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் அங்கு சென்று ஆய்வு செய்து, பம்புகளை பயன்படுத்தி குகைக்குள் உள்ள தண்ணீரை வெளியேற்றுவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். அதன்படி,  குகைக்குள் நிரம்பி இருந்த தண்ணீர் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.

  அதன்பிறகு சிறுவர்களுக்கு முக கவசம் பொருத்தியும் கயிற்றை பிடிமானமாக வைத்தும் ஒவ்வொரு சிறுவனாக மீட்டனர். இதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்து வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு தாய்லாந்து வெளியுறவு மந்திரி டான் பிரமுத்வினய் கடிதம் எழுதியுள்ளார்.

  அதில், சிறுவர்களை மீட்கும் பணிக்கு கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவி வழங்க ஏற்பாடு செய்த இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 13 பேரும் உயிருடன் மீட்கப்பட்ட செய்தியை கேட்டு எங்கள் நாட்டு மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

  இந்திய நிறுவனத்தின் உதவியால் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு பிரதிபலிக்கிறது. அதற்காக உங்களுக்கும், இந்திய மக்களுக்கும் தாய்லாந்து மக்கள் சார்பிலும் மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். #ThaiCaveResue
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாய்லாந்து குகைக்குள் சிக்கியிருந்த சிறுவர்களில் இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 2 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
  பாங்காக்:

  தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டது. குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் மிகுந்த பசியுடன் சோர்வாக இருந்ததால் அவர்களுக்கு முதலில் உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டன. பின்னர் அவர்களை வெளியே கொண்டு வரும் வழிமுறைகளை மீட்புக்குழுவினர் ஆராய்ந்தனர்.

  திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்திருந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை உடனே வெளியே கொண்டு வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் நிதானமாக பணியை தொடங்கினர்.

  கடும் சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்பு பணியின்போது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின்னர் மழை எச்சரிக்கைக்கு மத்தியிலும் துரிதமாக மீட்பு பணியை மேற்கொண்ட குழுவினர், இரண்டு கட்டங்களாக 8 சிறுவர்களை மீட்டனர்.

  இந்நிலையில், இன்று மூன்றாவது கட்ட மீட்பு பணியின்போது 2 சிறுவர்களை பத்திரமாக மீட்டு குகைக்கு வெளியே அழைத்து வந்தனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேரும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். #ThaiCaveRescue
  ×