என் மலர்
நீங்கள் தேடியது "தவெக"
- எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.
- நாங்கள் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை புறக்கணிக்கிறோம்.
சேலத்தில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தது பற்றியும், சேலம் மருத்துவமனை வளாகத்தில் நிருபர்களுடன் த.வெ.க.வினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் குறித்தும் த.வெ.க. கட்சியின இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "இதனால் நாங்கள் வருத்தமடைந்தோம். இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக குடும்பத்தினரிடம் இருந்து கேள்விப்பட்டோம். நாங்கள் அனைத்து முதலுதவிகளையும் வழங்கி, எங்கள் ஆம்புலன்ஸையும் அனுப்பினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் காலமானார். இந்த இழப்புக்கு நாங்கள் வருத்தப்படுகிறோம். எங்கள் பணியாளர்கள் குடும்பத்துடன் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஆதரவாக களத்தில் உள்ளனர்.
4,998 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்தோம், அதை விடக் குறைவாகவே அனுமதித்தோம். 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருந்தனர். பல மினி-கிளினிக்குகள் அமைக்கப்பட்டன. அனைத்து ஆம்புலன்ஸ்களும் அவசர நிலைக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. எங்களுக்கு மதியம் 12 மணி முதல் 3 மணி வரை அனுமதி இருந்தது. எங்கள் தலைவரின் உரைக்குப் பிறகு, மதியம் 1:10 மணிக்கு நிகழ்ச்சியை முடித்தோம். பொது பாதுகாப்பு குறித்து நாங்கள் நிச்சயமாக மிகவும் அக்கறை கொண்டுள்ளோம்.
சேலத்தில் நிருபர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே சிறிய மோதல் ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதில் இருந்து, சேலத்தில் சிறிய தவறான புரிதல் ஏற்பட்டதாக நான் நினைக்கிறேன். அந்த சம்பவத்தால் நாங்கள் வருத்தமடைந்துள்ளோம், எதிர்காலத்தில் அப்படி நடக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.
நயினார் நாகேந்திரன் த.வெ.க.-வின் பலத்தை அறிவார், ஏனென்றால் கடந்த ஒரு வருடமாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்து வரும் தனது சகாக்களிடம் அவர் கேட்க வேண்டியிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பா.ஜ.க. தலைவர்களும் எங்கள் பலத்தை அறிந்திருப்பதால், ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் தங்கள் கூட்டணியில் சேர எங்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். மேலும் எங்கள் தலைவர் தமிழ்நாட்டில் எங்களுக்கு ஒரே போட்டி த.வெ.க.-வுக்கும், தி.மு.க.-வுக்கும் இடையில்தான் என்று தெளிவாகக் கூறியுள்ளார். வேறு எந்தக் கட்சியும் களத்தில் இல்லை, மக்கள் ஏற்கனவே அவர்களை நிராகரித்துவிட்டனர். இந்தத் தேர்தல் நிச்சயமாக த.வெ.க. மற்றும் தி.மு.க. இடையேயான தேர்தல். இந்த விஷயத்தில் நாங்கள் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை புறக்கணிக்கிறோம்," என்றார்.
- நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?
- FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா?
அதிமுக ஐ.டி. விங் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?
அப்பா-வால சினிமா உள்ள வந்தீங்க...
வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த், புரட்சிக் கலைஞர் விஜய காந்தி ஆகியோரைப் பார்த்து COPY PASTE uu....
அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் Legacy-யை திருடி, COPY PASTE uu...
இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?
"தி.மு.க. எதில் எல்லாம் Out Of Control" என்பதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அவரது உத்தரவின்படி நாமும் பதிவிட்டதைப் பார்த்து Copy அடித்து யாரோ எழுதிக் கொடுத்ததை, "Action" என்று சொன்னதும் அடி மாறாமல் ஒப்பித்துள்ளார் பனையூர் பண்ணையார் நடிகர் விஜய்...!!
சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா?
கோவில் வாசலில் உடைக்கப்படும் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கி எடுப்பதுபோல, மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி என்ற பெயரில் ஒரு வாட்சப் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், "அடுத்த கட்சிகளை கலைத்து விட்டு வாருங்கள்" என்று சவால் விடுவது சிரிப்பாக உள்ளது.
உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர்தானே நீங்கள்?
எங்கள் பெரியாரின் பெயரில், எங்கள் அண்ணாவின் பெயரில், எங்கள் புரட்சித் தலைவரின் பெயரில் சவாரி செய்வதை நீங்கள் நிறுத்துங்களேன் பார்ப்போம்!
எங்கள் முழக்கம் இன்றும் "அண்ணா நாமம் வாழ்க!" தான்!
நாங்கள் என்றென்றும் புரட்சித் தலைவரின் "இரத்தத்தின் இரத்தமான" உடன்பிறப்புகள்தான்!
நாங்கள் இன்றும், என்றும் முன்நிறுத்துவது எங்கள் இதயதெய்வம் "அம்மாவின் ஆட்சி"யைத்தான்!
"அம்மாவின் ஆட்சி அமைய அணிலாய்" இருந்ததாக சொல்லிய உங்களை, மிகப்பெரிய துயரத்தின்போது, 41 பேர் மரித்தபோது பேசக்கூடாது என்ற "அம்மா கற்றுத் தந்த" அரசியல் பண்போடுதான் எடப்பாடி பழனிசாமி நாகரிகத்தோடு நடந்துகொண்டார்.
அப்புறம் பனையூர் பண்ணையாரே... இந்த FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே?
கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க போங்க Uncle!
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.
- இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற வெளி மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற நபர் உயிரிழந்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் திடீரென மயங்கி விழுந்தார். அப்போது திடீரென்று அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. முதலுதவி அளித்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் அதிமுக கட்சியைச் சேரந்த கோவை சத்யன், "தவெக கூட்டத்திற்கு போனா இனிமேல் கையோடு சவப் பெட்டியையும் கொண்டு போக வேண்டும் என்பது உறுதி" என விமர்சித்துள்ளார்.
கரூரில் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கூட்ட நெரிசல் எற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன.
இந்த நிலையில் தற்போது மற்றொரு கூட்டத்தில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
- ஆட்சிக்கு வந்தால் அவங்க அது தரல, இது தரல என புலம்ப மாட்டேன்.
- இது சட்டமன்ற தேர்தல், நமது டார்கெட் தி.மு.க. தான்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்ற த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:
* மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார்? மகிழ்ச்சியாக இருந்தால் ஏன் இத்தனை போராட்டங்கள் நடக்கிறது.
* இடம், குடிநீர், வேலை, விலைவாசி என அனைத்தும் பிரச்சனையாக இருக்கும்போது மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருப்பார்கள்?
* ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டு 70%, கடந்தாண்டு 90%, இப்போது 80% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் கூறுகின்றனர்.
* பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்த புலவர் பெருமானே, இல்லை புளுகர் பெருமானே... முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுவது அனைத்துமே அண்டப்புளுகு ஆகாசப்புளுகு.
* ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக நடைமுறைக்கு ஒத்துவராத திட்டங்களை அறிவிக்க மாட்டேன்.
* ஆட்சிக்கு வந்தால் அவங்க அது தரல, இது தரல என புலம்ப மாட்டேன். உங்களுக்காக எந்த எக்ஸ்ட்ரீம் வரைக்கும் சென்று போராடுவேன்.
* களமே சொல்கிறது இரண்டே இரண்டு பேர் இடையில் தான் போட்டி. ஒன்னு தூய சக்தி த.வெ.க. மற்றொன்று தீய சக்தி தி.மு.க.
* விஜய் அவரை எதிர்க்கவில்லை, இவரை எதிர்க்கவில்லை என்கிறார்கள். இது சட்டமன்ற தேர்தல், நமது டார்கெட் தி.மு.க. தான்.
* மக்களை விரும்பும் விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார் வேண்டுமா? இது தான் தேர்தல்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமக்கு அவர்களைபோல் கொள்ளையடிக்க அனுபவம் இல்லை.
- த.வெ.க. ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் மக்களின் கனவு.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்ற த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:
* 2 ஆண்டுகளில் முதன்மை சக்தியாக வளர்ந்து 30 சதவீத மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
* 75 வருடம், 50 வருடம் என அரசியல் கட்சி நடத்தி வருபவர்களை மீறி களத்தில் தனியாக நின்று த.வெ.க. மக்கள் சக்தியாக மாறி உள்ளது.
* சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்புகளில் ஸ்டாலின் அரசு அவுட் ஆஃப் கன்ட்ரோல்.
* நமக்கு அவர்களைபோல் கொள்ளையடிக்க அனுபவம் இல்லை, அது எல்லாம் எங்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது.
* மக்களை நேசிக்கும் நல்ல குணம் இருந்தாலே போதும், ஒரு சிறந்த நல்லாட்சியை வழங்க முடியும்.
* கட்சி ஆரம்பித்த அண்ணா, எம்.ஜி.ஆர்., கட்சியை வளர்த்த ஜெயலலிதாவை மறந்தவர்கள் தான் நம்மை அனுபவம் இல்லாதவர்கள் என கூறுகின்றனர்.
* என்னால் ஒரு நல்லாட்சியை கொடுக்க முடியும் செய்து காட்டுகிறேன்.
* ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டு கடந்து விட்டது. இப்போது தான் ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டி கனவை கேட்கிறார்கள்.
* மக்களின் கனவு உங்களுக்கு தெரியுமா ஸ்டாலின் சார்? ஏதாவது நல்லது செய்வீர்கள் என நினைத்துதான் உங்களுக்கு வாக்களித்தனர்.
* ஸ்டாலின் சார் உங்களின் ஆட்சி அகற்றப்பட வேண்டும். த.வெ.க. ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் மக்களின் கனவு.
* தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் என்கிறார் ஸ்டாலின். ஸ்டாலின் சார் தான் அவுட் ஆஃப் கன்ட்ரோல்.
* மொத்தத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியே அவுட் ஆப் கன்ட்ரோல் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனுபவம் இல்லாதவர்களால் ஆட்சி செய்ய முடியுமா? என அழுகிறார்கள்.
- அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதித்து கொம்பு முளைத்தவர்களை தவிர வேறு யார் இங்கு இருக்கிறார்கள்?
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜயை கண்டதும் தொண்டர்கள உற்சாகமாக முழக்கம் எழுப்பினர்.
கூட்டத்தில் விஜய் பேசியதாவது:-
மற்ற கட்சியினர் தரும் பணத்தை வாங்கிக்கொண்ட அவர்களின் செவிகளில் விசிலை ஊதி அனுப்புங்கள். பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கும் கலாச்சாரம் மாற வேண்டும், பணத்தை கொடுத்தால் ஏமாறுவீர்களா?
வண்டி வண்டியாக கொண்டுவந்து பணத்தை கொட்டுவார்கள், பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் எல்லாம் உங்கள் பணம் தான்.
எங்கள் ஓட்டு எங்கள் உரிமை எங்களை யாரும் விலைக்கு வாங்க உரிமையில்லை, எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான்.
எந்த கட்சியையும் அழிக்க, ஒழிக்க நான் அரசியலுக்கு வரவில்லை. வெறுப்பு அரசியல் செய்ய நான் வரவில்லை. மக்களுக்கு என் நன்றி கடனை செலுத்தவே அரசியலுக்கு வந்தேன்.
அனுபவம் இல்லாதவர்களால் ஆட்சி செய்ய முடியுமா? என அழுகிறார்கள். மக்களே உங்களையே கேட்கிறேன் அனுபவம் என்று கூறுகிறார்களா, அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதித்தை தாண்டி என்ன செய்தார்கள்?
அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதித்து கொம்பு முளைத்தவர்களை தவிர வேறு யார் இங்கு இருக்கிறார்கள்?
அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில் அடுத்தவர்கள் முகவரியில் அரசியல் வாதிகளாக இருக்கும் அனைவருக்கும் ஒரு சவால்.
என்னைப்போல் சொந்தமாக ஒரு கட்சியை ஆரம்பித்து ஒரு சதவீதம் ஓட்டு வாங்க உங்களுக்கு தில், திராணி இருக்கிறதா?
75 வருடம், 50 வருடம் என அரசியல் கட்சி நடத்தி வருபவர்களை மீறி களத்தில் தனியாக நின்று தவெக மக்கள் சக்தியாக மாறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உங்களிடம் ஓட்டு கேட்காமல், நீதி கேட்டும் வந்துள்ளேன்.
- விஜய் செய்த தவறு தான் என்ன?
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்ற த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:
* உங்களிடம் ஓட்டு கேட்காமல், நீதி கேட்டும் வந்துள்ளேன்.
* விஜய் செய்த தவறு தான் என்ன? என்னை நேசித்த மக்களுக்காக வந்த விஜய் செய்த தவறு தான் என்ன?
* மக்களை சந்திக்க மற்றவர்களுக்கு அனுமதி தரும்போது விஜய்க்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்?
* மற்ற கட்சியினர் தரும் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களின் காதுகளில் விசிலை ஊதி அனுப்புங்கள்.
* வண்டி வண்டியாக கொண்டுவந்து பணத்தை கொட்டுவார்கள், பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் எல்லாம் உங்கள் பணம் தான்.
* பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களின் செவிகளில் விசிலை ஊதி அனுப்புங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நம்மை ஏளனமாக மற்றவர்கள் நினைக்கும் நேரத்தில் தோன்றுவது தான் கரேஜ்.
- நம்மை தாழ்த்தும்போது தான் உத்வேகம் வரும்.
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக த.வெ.க. தலைவர் விஜய் இன்று காலை சேலம் வந்தார்.
சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் காலை ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு விஜய் வந்தார். அங்கிருந்து கார் மூலமாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கும் திடலுக்கு வந்த விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து காரில் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு வந்த அவருக்கு வழி நெடுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மக்கள் சந்திப்பு கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜயை கண்டதும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:
* நம்மை ஏளனமாக மற்றவர்கள் நினைக்கும் நேரத்தில் தோன்றுவது தான் கரேஜ்.
* தைரியம் தான் அனைத்திற்கும் அடிப்படை.
* நம்மை தாழ்த்தும்போது தான் உத்வேகம் வரும்.
* எந்த விஷயத்தில் நம்மை கிண்டல், கேலியாக பேசுகிறார்களோ அதை வெற்றியாக மாற்றிக்காட்டுவோம்.
* என்னை சீண்டிப்பார்ப்பவர்களுக்கு ஒன்று கூறுகிறேன், என் தாய் நாடாக தமிழ்நாடு தான் எனது வீடு.
* விஜய் பனையூரை விட்டு வெளியே வா என அழைப்பவர்களுக்கு என் வீடு எங்கே இருக்கிறது என்றாவது தெரியுமா?
* என் வீடான தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களும் என் சொந்தம், தமிழ்நாட்டின் முதல் படை வீரன் நான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடக்கிறது.
- நிர்வாகிகளுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், ஓஆர்எஸ், தொப்பி அடங்கிய மஞ்சப்பை கொடுக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக த.வெ.க. தலைவர் விஜய் இன்று காலை சேலம் வந்தார்.
சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் காலை ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு விஜய் வந்தார். அங்கிருந்து கார் மூலமாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கும் திடலுக்கு வந்த விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தாளமுத்து நடராஜன் திடலுக்கு வருகை தந்த விஜய்க்கு பூத்தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சந்திப்பு கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகளுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், ஓஆர்எஸ், தொப்பி அடங்கிய மஞ்சப்பை கொடுக்கப்பட்டு வருகிறது.
- இந்த சம்பவம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பில் வைரலாகி பரவியது.
- முக்கிய அறிவிப்பு செய்வதற்கான மைக்செட் அறை மலைக்கோவிலில் மட்டுமே உள்ளது.
பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இதில் கூட்ட நேரங்களில் திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கவும், உடன் வந்தவர்களை பத்திரமாக அழைத்து செல்வது மற்றும் பக்தர்களுக்கான சேவைகள் மற்றும் முருகன் பக்தி பாடல்கள் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்படும். இதற்காக அடிவாரம், கோவில் படிப்பாதை, யானைப்பாதையில் ஒலிபெருக்கி கட்டப்பட்டுள்ளது.
கடந்த 1-ந்தேதி தைப்பூச திருவிழா நடந்ததையொட்டி கோவிலில் கூட்டம் அலைமோதியது. இதனால் படிப்பாதை, யானைப்பாதையில் ஒலிப்பெருக்கி கட்டி மைக் மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் பழனி முருகன் கோவில் யானைப்பாதையில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் தரிசனம் செய்ய வந்த வாலிபர், மைக்செட்டில் த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார பாடலை ஒலிக்க செய்தார். இந்த சம்பவம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பில் வைரலாகி பரவியது. இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்ஸ்டாகிராமில் ஒளிபரப்பான அந்த வீடியோவில், யானைப்பாதையில் நிற்கும் வாலிபர், மைக்செட் அமைத்த இடத்தில் ஆள் இல்லாத நேரத்தில் தனது செல்போனில் இருந்த விஜய் பிரசார பாடலை மைக் மூலம் ஒலிபரப்பு செய்தார். அதை மற்றொரு நபர் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பரப்பி உள்ளார். இந்த வீடியோ வைரல் ஆனதால் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபற்றி கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில்,"யானைப் பாதையில் போலீசார் சார்பில் அறிவிப்பு செய்ய மைக்செட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தான் விஜய் கட்சியின் பிரசார பாடலை ஒலிக்க செய்துள்ளார்.
முக்கிய அறிவிப்பு செய்வதற்கான மைக்செட் அறை மலைக்கோவிலில் மட்டுமே உள்ளது. இந்த சம்பவம் குறித்து அடிவாரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
- மக்களுக்கு அனைத்து வகைகளிலும் நல்லது மட்டுமே செய்வோம்.
- உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன?
வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்?
இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம்.
இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான்.
அதுமட்டுமா? தி.மு.க. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க.வைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார்.
எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.
நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி.
தி.மு.க. அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி," என தெரிவித்துள்ளார்.
- 5 ஆயிரம் நிர்வாகிகளுக்கு மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி சீட்டு.
- கூட்டம் நடைபெறும் இடத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் தயார்நிலையில் இருக்க ஏற்பாடு.
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் இன்று நடக்கிறது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க கலந்து கொள்வதற்காக த.வெ.க. தலைவர் விஜய் இன்று சேலம் வருகிறார்.
விஜய் சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் காலை 11 மணிக்கு ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலமாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கும் திடலுக்கு செல்கிறார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் இருந்து 5 ஆயிரம் நிர்வாகிகளுக்கு மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டம் நடைபெறும் திடலில் இருந்து முன்னதாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. நிர்வாகிகள் அமர்வதற்கு ஆங்காங்கே இருக்கைகள், குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டம் நடைபெறும் இடத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் தயார்நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.






