search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிக்கெட் விலை உயர்வு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அபுதாபிக்கான விமான கட்டணம் ரூ10,284ல் இருந்து ரூ28,647 ஆக உயர்ந்துள்ளது.
    • வரும் நாட்களில் டிக்கெட் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து ரூ1 லட்சத்தை தாண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு பணிபுரியக்கூடிய அவர்கள், விடுமுறை கிடைக்கும் போதும், பண்டிகை காலங்களிலும் தங்களது சொந்த ஊருக்கு வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களின் போது பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வந்து செல்வார்கள். இந்த ஆண்டும் கிறிஸ்துமல் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளின் போது பலர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை சீசன் தொடங்க உள்ளதை முன்னிட்டு தற்போதே கேரள விமானங்களில் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இது விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து வளைகுடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையங்களை கேரள மாநி லத்தினர் மட்டுமின்றி, தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் பயன்படுத்துகின்றனர்.

    இதனால் இந்த விமான நிலையங்கள் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் தான், தற்போது விமான கட்டணங்கள் கடுமையாக உயர்ந்திருக்கிறது. பயண ஏஜென்சிகள் பண்டிகை கால விமான டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்துள்ளன. இதனால் முன்பதிவு தளத்தில் கிடைக்கும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது.

    இதன் காரணமாக ஒட்டுமொத்த விமான கட்டணமும் உயர்ந் துள்ள தாக கூறப்படுகிறது. கோழிக்கோட்டில் இருந்து துபாய் செல்லும் விமான கட்டணம் தற்போது ரூ11 ஆயிரமாக உள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் இது ரூ.27ஆயிரத்திற்கும் மேல் அதிகரிக்கும் என தெரிகிறது.

    துபாயில் இருந்து கேரளா திரும்புவதற்கான டிக்கெட்டுகள் விடுமுறை நாட்களில் ரூ7 ஆயிரம் முதல் ரூ17 ஆயிரம் வரை இருக்கும். இது 90 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அபுதாபிக்கான விமான கட்டணம் ரூ10,284ல் இருந்து ரூ28,647 ஆக உயர்ந்துள்ளது.

    இதேபோன்று ஷர்ஜாவில் இருந்து கேரளாவிற்கு திரும்புவதற்கான டிக்கெட் கட்டணமும் மிகவும் உயர்ந்திருக்கிறது. வரும் நாட்களில் டிக்கெட் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து ரூ1 லட்சத்தை தாண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த கட்டண உயர்வால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இதுபோன்ற கட்டண உயர்வை தவிர்க்க பண்டிகை காலங்களில் விமான சேவைகள் மற்றும் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×