search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சீபுரம் கலெக்டர்"

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேலை வழங்க கோரி வாலிபர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சீபுரம்:

    வாலாஜாபாத் அருகே உள்ள வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம். கிராம உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் செல்வம் (36). இவர் தந்தை பார்த்த வேலையை தனக்கு வழங்கும்படி தாலுகா அலுவலகத்தில் மனு செய்து இருந்தார்.

    பலமுறை முயற்சி செய்தும் செல்வத்துக்கு வேலை கிடைக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் பயன் இல்லை. இதனால் மன வருத்தம் அடைந்தார்.

    இன்று காலை காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்களிடம் கலெக்டர் பொன்னையா மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அங்கு வந்த செல்வம் தன் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை கண்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் கலெக்டர் பொன்னையா அங்கு வந்து செல்வத்தை சந்தித்து பேசினார். வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இதையடுத்து, செல்வம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். #tamilnews
    கிராமங்களில் கல்வி வளர ‘தினத்தந்தி’ முக்கிய பங்காற்றி வருகிறது என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்தார். #DailyThanthi #KancheepuramCollector
    சென்னை:


    கல்வி பணியில் சீரிய முயற்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் ‘தினத்தந்தி’, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசும் வழங்கி சிறப்பித்து வந்தது.

    அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் தினத்தந்தியின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. மேலும், மேற்படிப்பில் என்ன பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கலாம்? என்பதை மாணவர்கள், பெற்றோர்கள் தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக ‘வெற்றி நிச்சயம்’ என்ற நிகழ்ச்சியும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.



    இப்படியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவரும் ‘தினத்தந்தி’, கடந்த 2014-15-ம் கல்வி ஆண்டு முதல் ‘தினந்தந்தி கல்வி நிதி திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது. அதன்படி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ-மாணவிகளின் மேல்படிப்புக்கு ‘தினத்தந்தி’ நிதி உதவி அளித்து வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் 2 மாவட்டங்கள் என மொத்தம் 34 மாவட்டங்களில் தலா 10 மாணவர்கள் வீதம் 340 மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 2017-18-ம் கல்வியாண்டில் தினத்தந்தி கல்வி நிதி திட்டத்தின் கீழ் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற தகுதிபெற்றுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற 30 மாணவ- மாணவிகளின் பெயர் விவரம் வருமாறு:-

    சென்னை மாவட்டம்

    1) மு.மணிமொழி, தூயமேரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர்.

    2) த.திருசவுமியா, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர்.

    3) வே.பிரியதர்ஷினி, சிறுவர் தோட்டம் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர்.

    4) சி.ஹேமலதா, சி.எஸ்.ஐ. தூய அகஸ்டின் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, தியாகராயநகர்.

    5) ம.பத்மபிரியா, முருகதனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வண்ணாரப்பேட்டை.

    6) கு.பவித்ரா, ஸ்ரீஅஹோபிலமத் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி, மேற்கு மாம்பலம்.

    7) அ.திவ்யதர்ஷினி, ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, தியாகராயநகர்.

    8) க.சுகன்யா, கொ.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளி, வண்ணாரப்பேட்டை.

    9) சு.துர்கா, சிங்காரம்பிள்ளை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம்.

    10) உ.கார்த்திகா பிரீத்தி, தனலட்சுமி மேல்நிலைப்பள்ளி, ராயபுரம்.

    திருவள்ளூர் மாவட்டம்

    1) கே.ஆர்.தனுஷ்யா, அரசு மேல்நிலைப்பள்ளி, புச்சிரெட்டிப்பள்ளி.

    2) ச.அரசு, எம்.ஆர். மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, மேட்டுக்குப்பம்.

    3) ரா.ஸ்ரீநிதி, அரசு மேல் நிலைப்பள்ளி, கவரப்பேட்டை.

    4) ச.ஜெயலட்சுமி, ஆசிரியர் மங்கலங்கிழார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அம்மையார்க்குப்பம்.

    5) கி.புவியா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி.

    6) ச.காயத்ரி, தளபதி கே.விநாயகம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி.

    7) பா.கார்த்திக், தி.மு.கி.வா. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மையார்க்குப்பம்.

    8) மு.ஈஸ்வரி, அரசு மேல் நிலைப்பள்ளி, புச்சிரெட்டிப்பள்ளி.

    9) மு.டில்லிபாபு, தி.மு. கி.வா. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மையார்க் குப்பம்.

    10) செ.நிர்மல், அரசு மேல்நிலைப்பள்ளி, சுண்ணாம்புக்குளம்.

    காஞ்சீபுரம் மாவட்டம்

    1) மு.வித்யா, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, முகலிவாக்கம்.

    2) ம.மிதுன்கண்ணா, தேசியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம்.

    3) மு.காயத்ரி, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்பேட்டை.

    4) செ.லினிஷா, செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீபெரும்புதூர்.

    5) ப.தயாநந்தினி, செயின்ட் ஜோசப் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, வாலாஜாபாத்.

    6) சு.லோகேஷ்வரி, எஸ்.எஸ்.கே.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம்.

    7) க.தமிழ்வளவன், அந்திரசன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம்.

    8) ஸ்ரீ.ஜலஸ்ரீ, செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.

    9) க.ஜெயஸ்ரீ, புனித டொமினிக் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பரங்கிமலை.

    10) ஆ.சந்தியா, அரசினர் மேல்நிலைப்பள்ளி, மேடவாக்கம்.

    தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா சென்னை குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள எஸ்.சி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 30 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசை வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    தினத்தந்தி கல்வி நிதி திட்டத்தில் 2-வது முறையாக நான் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்குகிறேன். இதை நான் ஒரு பெரும் பாக்கியமாக கருதுகிறேன். கல்வி தான் முக்கியம். கல்வி கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றத்துக்கும் நாம் செல்லலாம்.

    அந்த வகையில் பவளவிழா கண்ட தினத்தந்தி நிறுவனம், 56 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இதுபோல் கல்வி நிதி உதவி வழங்கி சமூக தொண்டு செய்து வருகிறது. கல்வி பணியை இதுபோல் நேரடியாக செய்வது மட்டுமல்லாமல், மறைமுகமாகவும் பல்வேறு உதவிகளை தினத்தந்தி செய்துவருகிறது.

    கிராமங்களில் முன்பெல்லாம் பத்திரிகை என்றாலே அது தினத்தந்தி தான். அதன்பிறகு தான் மற்ற பத்திரிகைகள் சென்றடைந்தன. முதலில் கிராமங்களை சென்றடைந்து, அங்கு கல்வி வளர முக்கிய பங்காற்றியது ‘தினத்தந்தி’ தான். நான் பிறந்த கிராமத்தில் அனைத்து டீக்கடைகளிலும் தினத்தந்தி பேப்பர் தான் இருந்தது.

    நான் கல்லூரி படிக்கும் காலங்களில் தேசிய முதியோர் கல்வி தொடர்பாக கிராமப் புறங்களுக்கு சென்று அறிவொளி இயக்கத்தோடு இணைந்து முதியோர்களுக்கு வாசித்து, எழுதி பழக கற்றுக்கொடுப்போம். அப்போது முதற்கட்டமாக ‘தினத்தந்தி’ பத்திரிகையை கொடுத்து வாசிக்க கற்றுக்கொடுப்போம். அது ஏனென்றால் மற்ற பத்திரிகைகளை காட்டிலும் தினத்தந்தியில் எழுத்துகள் பெரிதாகவும், எளிதில் புரியும்படியும் இருக்கும். அந்த அளவு கிராமப்புற மக்களுக்கு தங்களுடைய பங்களிப்பை தினத்தந்தி செய்துவருகிறது.

    மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விதமான திட்டங்களை தினத்தந்தி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மாணவ- மாணவிகளும் தங்களுடைய கல்வித்தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில், தினத்தந்தி சென்னை மேலாளர் ஆர்.சதீஷ்குமார் வரவேற்புரையாற்றினார். இதில் காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜே.ஆஞ்சலோ இருதயசாமி, பள்ளி செயலாளர் வி.சந்தானம், தாளாளர் கிருஷ்சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளி முதல்வர் பேபி சரோஜா நன்றி கூறினார். #DailyThanthi #KancheepuramCollector

    டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் சுகாதாரமின்றி செயல்பட்டு வந்த 2 அரிசி ஆலைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து காஞ்சீபுரம் கலெக்டர் உத்தரவிட்டார். #Dengu
    காஞ்சீபுரம்:

    தமிழகம் முழுவதும் டெங்கு-பன்றிக் காய்ச்சல் நோய் பரவி உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் பொன்னையா உத்தரவுப்படி நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கலெக்டர் பொன்னையா மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். அப்போது சுகாதார கேடாக இருக்கும் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் நகராட்சிக்குட்பட்ட பல்லவர்மேடு, தாயண்குளம், பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் கலெக்டர் பொன்னையா திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் சுகாதாரமின்றி 2 அரிசி ஆலைகள் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கலெக்டர் பொன்னையா அந்த 2 அரிசி ஆலைகளுக்கு தலா 12 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    இந்த ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். #Dengu
    செங்கல்பட்டில் நடந்த டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் போலீஸ் நிலையம், பழைய தாலுக்கா அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    செங்கல்பட்டு:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்ட கலெக்டர் பொன்னையா மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் பொன்னையா செங்கல்பட்டு பகுதியில் அதிரடி ஆய்வு செய்தார்.

    முதலில் செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட அரசு பொது மருத்துவமனையை பார்வையிட்டு வளாகத்தை சுற்றிப்பார்த்தார்.

    அப்போது அங்கு குப்பைகள், மருத்துவ கழிவுகள் குவிந்து கிடந்தது. இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு தாலுக்கா போலீஸ் நிலையம், போலீஸ் குடியிருப்பு, தாலுக்கா அலுவலகம், பொதுப் பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களை கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார்.

    இதில் குப்பைகள் தேங்கி சுகாதாரமின்றி காணப்பட்ட செவிலியர் குடியிருப்புக்கு ரூ.5 ஆயிரம், போலீஸ் குடியிருப்புக்கு ரூ.10 ஆயிரம், தாலுக்கா போலீஸ் நிலையம், பழைய தாலுக்கா அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு தலா ரூ.10 ஆயிரம், வட்டார போக்குவரத்துறை அலுவலகத்திற்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.80 ஆயிரம் விதித்தார்.

    இந்த அபராத தொகையை சொந்த பணத்தில் ஒவ்வொரு அரசு துறையும் கட்ட வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

    தண்ணீர் தேங்காமலும், குப்பைகள் சேராமலும், பிளாஸ்டிக், ரப்பர்,தேங்காய் ஓடுகள் போன்றவற்றை தேக்கி வைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    மேலும் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குற்ற வழக்கில் சிக்கிய பழைய வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். இந்த ஆய்வின் கோட்டாட்சியர் முத்து வடிவேலு, தாசில்தார் பாக்கியலட்சுமி, கமி‌ஷனர் மாரிச்செல்வி, சுகாதாரத்துறை அதிகாரி, சித்ரா சேனா மற்றும் நகராட்சி ஊழியர்கள் வருவாய்துறை ஊழியர்கள் உடன் சென்றனர்.
    சுகாதார பணிகளை மேற்கொள்ளாத தனியார் சேவை மையத்திற்கு அரசு விதிகளின் கீழ் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கொசு ஒழிப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறார். சுகாதாரத்தை பராமரிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    சுகாதாரத்தை பேண தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    நேற்று காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி அறிகுறிகள் உள்ளதா என்று ஆய்வுகள் மேற்கொண்டார்.

    அப்போது சுகாதார பணிகளை மேற்கொள்ளாத தனியார் சேவை மையத்திற்கு அரசு விதிகளின் கீழ் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். டெங்கு உற்பத்தி அறிகுறிகளை அழிக்கவும் உத்தரவிட்டார். மாவட்ட கலெக்டருடன் சுகாதார அதிகாரிகள் சென்றனர்.

    கோழித்தீவன உற்பத்தி ஆலையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையில் இருந்ததையடுத்து காஞ்சீபுரம் கலெக்டர் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தார். #Dengu
    காஞ்சீபுரம்:

    டெங்கு-பன்றி காய்ச்சலால் ஏற்படும் உயிர் பலியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு-பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சுகாதார அதிகாரிகள் தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் அதிரடி ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலு செட்டிசத்திரம், திருப்புட்குழி, ஆரியபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

    ஆரிய பெரும்பாக்கத்தில் உள்ள கோழித்தீவன உற்பத்தி ஆலையில் ஆய்வு செய்த போது அங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையில் இருந்தது. இதையடுத்து அந்த ஆலைக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் ஆலையை உடனடியாக சுகாதாரமாக வைக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் அருள் மொழி, வட்டார வளர்ச்சி அலவலர் திருஞானசம் மந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    கலெக்டர் பொன்னையா மாவட்டம் முழுவதும் ஒரகடம் தொழிற்சாலை பகுதிகள், காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பொது மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரகடம் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு ஏற்கனவே ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது இருந்தார். #Dengu
    தீபாவளி சீட்டு நடத்தி அனுமதியில்லாமல் பட்டாசு விநியோகம் செய்யும் நபர்களிடமிருந்து பொதுமக்கள் பட்டாசு வாங்க வேண்டாம் என்று காஞ்சீபுரம் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #Diwali
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசின் அனுமதியின்றி பட்டாசு கடை வைத்திருந்தாலோ, பட்டாசு தயாரித்தாலோ, வீட்டிலேயே வைத்து விற்பனை செய்தாலோ, நிதி சீட்டு நடத்தி அதன் மூலம் பொது மக்களுக்கு பட்டாசு விநியோகம் செய்தாலோ சட்டப்படி குற்றமாகும்.

    இவ்வாறு ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால் வெடி பொருட்கள் சட்டம் 1884 மற்றும் வெடி பொருட்கள் விதிகள் 2008-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பட்டாசு கடை நடத்த உரிமம் பெற்றுள்ள வியாபாரிகள் கடையில் உரிமத்தின் நகலை பொதுமக்கள் அறியும் வகையில் காட்சிபடுத்திட வேண்டும். விதிகளுக்குட்பட்டு தீ தடுப்பு சாதனங்களுடன் கடை அமைக்கப்பட வேண்டும்.

    பொதுமக்கள், அனுமதியில்லாமல் பட்டாசு விநியோகம் செய்யும் நபர்களிடமிருந்து பட்டாசு வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Diwali

    ×