search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுரவிப்பு"

    • இருக்கையில் அமரவைக்கப்பட்டு சால்வை அணிவித்து மாணவி கவுரவிக்கப்பட்டார்.
    • மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    மன்னார்குடி:

    குழந்தைகள் தினத்தை யொட்டி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை அரசு பள்ளியின் ஒருநாள் தலைமை ஆசிரியராக 11 ஆம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ பதவி வகித்தார்.

    நாடுமுழுவதும் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அப்பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவி யுவஸ்ரீக்கு இன்று ஒருநாள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    மாணவி யுவஸ்ரீ தலைமை ஆசிரியர் இருக்கையில் அமரவை க்கப்பட்டு சால்வைகள் அணிவித்து மாணவி கௌரவிக்கப்பட்டார்.

    பின்னர் மாணவி யுவஸ்ரீ வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களிடம் கலந்துரையாடினார். குழந்தைகள் தினத்தை யொட்டி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    பின்னர் அப்பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேருக்கு பிரியாணி மதிய உணவாக வழங்கி கொண்டாடப்பட்டது. முன்னதாக காலையில் நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் மித்தேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலாஜி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கயல்விழிபொய்யாமொழி, இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    • மேல்நிலைக்கல்வியை உள்ளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார்.
    • அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்த கீர்த்தனாவை பலரும் பாராட்டினர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன்.

    இவரது மனைவி சித்ராதேவி. இவர்களது மகள் கீர்த்தனா.

    இவர் நடுநிலைக்கல்வியை தளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார். பின்னர் மேல்நிலை கல்வியை உள்ளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார்.

    இதையடுத்து மருத்துவராகி சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீட் தேர்வு எழுதினார்.

    அந்த தேர்விலும் வெற்றி பெற்ற கீர்த்தனாவுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிக்க இடம் கிடைத்தது.

    அரசு பள்ளியில் படித்து அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த கீர்த்தனாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் தளிக்கோட்டை அரசு பள்ளி சார்பில் சாதனை படைத்த மாணவி கீர்த்தனாவை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி தளிக்கோட்டையில் பாராட்டு விழா நடந்தது.

    இந்த விழாவுக்கு வட்டார கல்வி அலுவலர் முத்தமிழன் தலைமை தாங்கினார்.

    தளிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பி.சரவணன் முன்னிலை வகித்தார். தளிக்கோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். சூரியபிரபா வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவி கீர்த்தனாவுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    இதில் மாணவியின் பெற்றோர் இளவரசன், சித்ராதேவி மற்றும் வட்டார கல்வி அலுவலர் சம்பத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கே. சுந்தரமூர்த்தி, எஸ். மாசிலாமணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.விஜயகுமார், எஸ்.பி.ஏ. மெட்ரிக் பள்ளி தாளாளர் பி.ரமேஷ், கிராம பிரமுகர் ஞானம், ஆசிரியர் சவுந்தர்ராஜன் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சசிக்குமார் நன்றி கூறினார்.

    • திட்ட அலுவலரும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான ராமச்சந்திரன் வரவேற்றார்.
    • நிகழ்ச்சியில் நிர்வாகிகள், ஆசிரியர்கள் என அனைவரும் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய கோட்டை- வெட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. முக்கிய நிர்வாகிகள், ஆசிரியர்கள் என அனைவரும் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.

    விழாவிற்கு திட்ட அலுவலரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான ராமச்சந்திரன் வரவேற்றார். மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் உலகநாதன், வட்டார கல்வி அலுவலர் மனோகரன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மகாலிங்கம், செயலாளர் ராஜகோபால், துணைத் தலைவர் ஹாஜாமுகைதீன், ஜே.சி.ஐ. முன்னாள் தலைவர் மணிகண்டன், பெரியகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பொன்மணி, ஓய்வு பெற்ற பதிவறை எழுத்தர் நாகராஜன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள், ஆசிரியர்கள் என அனைவரும் பொன்னாடை போர்த்தி கவரவிக்கப்பட்டனர். இநத முகாம் வருகிற 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. முடிவில் மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியர் இளவரசன் நன்றி கூறினார்.

    • அங்கன்வாடிக்கு மேஜை, பீரோ, நாற்காலிகள், தண்ணீர் டிரம், மற்றும் தேவையான சாமான்கள் சீர்வரிசையாக எடுத்து வரப்பட்டன.
    • இயற்கை உணவுகளான கேழ்வரகு கூழ், முளை கட்டிய பயிர், சுண்டல், கேழ்வரகு கொழுக்கட்டை அனைவருக்கும் கொடுக்கப்பட்டன.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுற்று சுவர், அங்கன்வாடி சீர்வரிசை திருவிழா மற்றும் மரம் நடுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டார வளர்ச்சி) விஜயகுமார், (கிராம ஊராட்சி) சிவக்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கண்ணகி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக அங்கன்வா டிக்கு மேஜை, பீரோ, நாற்காலிகள், தண்ணீர் டிரம், மற்றும் தேவையான சாமான்கள் சீர்வரிசையாக எடுத்து மேழ தாள நாதஸ்வரத்துடன் எடுத்து செல்லப்பட்டன. நிகழ்வில் நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் சவுந்தரராஜன், திட்ட மேலாளர் விஜயா, பாலம் தொண்டுநிறுவனம் செந்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராணி, ஓவர்சியர் மகேந்திரன், டெல்டா ரோட்டரி சங்கத் தலைவர் ரமேஷ், அங்கன்வாடி ஆசிரியை ராஜேஸ்வரி, மற்றும் துணைத் தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் முகம்மது யூசுப், மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதா, காவல் உதவி ஆய்வாளர் முருகவேல், கல்வியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கட்டிடம் கட்டி கொடுத்த ஒப்பந்தக்காரர் செந்தில், மற்றும் கட்டிடப்பணி செய்த மேஸ்த்திரி அய்யப்பன் மற்றும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் கட்டிமேடு ஊராட்சியின் சார்பாக ஊராட்சி மன்ற தலைவரால் கவுரவபடுத்தப்பட்டனர்.

    நிகழ்வில் இயற்கை உணவுகள் கேழ்வரகு கூழ், முளை கட்டிய பயிர் சுண்டல், கேழ்வரகு கொழுக்கட்டை அனைவருக்கும் கொடுக்க ப்பட்டன. இறுதியில் கல்வியாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • கடந்த 2021- 22-ம் கல்வி ஆண்டில் சிறந்து விளங்கிய 393 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • சென்னை கலைவாணர் அரங்கில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, வெள்ளி பதக்கம், ரூ.10 ஆயிரம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கல்வி மாவட்ட அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 6 ஆசிரியர்கள் திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் ஆகியோரால் கவுரவிக்கப்பட்டனர்.

    தமிழக அளவில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தில் அனைத்து நிலையிலும் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த 2021 - 2022ம் கல்வி ஆண்டில் சிறந்து விளங்கிய 393 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த 5-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, வெள்ளிப் பதக்கம், ரூ.10 ஆயிரம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து நடைபெற்ற உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டத்தில், மன்னார்குடி கல்வி மாவட்ட அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோட்டூர் ஒன்றியம், ஆலாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன், பாலையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் ராசகணேசன், நீடாமங்கலம் ஒன்றியம், புள்ளவராயன் குடிகாடு அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அருள், காளாச்சேரி அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆனந்த், கற்பகநாதபுரம் அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் அருளானந்தம் மற்றும் திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சக்கரபாணி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

    இதில் டாக்டர் ராதாகிரு ஷ்ணன் விருது பெற்ற கோட்டூர் ஒன்றியம் ஆலாத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் முதன்மைக் கல்விஅலுவலர் தியாகராஜன், மாவட்டக் கல்வி அலுவலர் மணிவ ண்ணன் ஆகியோர் முன்னிலையில் பள்ளி மேலாண்மைக் குழுவினரிடம் தான் பெற்ற விருது தொகையான ரூ.10 ஆயிரத்தை பள்ளி வளர்ச்சி நிதிக்காக ஒப்படைத்தார்.

    ஏற்பாட்டினை தலைமை ஆசிரியை வசந்தி, பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தங்கபாபு ஆகியோர் செய்திருந்தனர்.

    • இருவரும் 76 நிமிடம் 76 செகண்ட் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
    • மாணவர்கள் இருவருக்கும் சிலம்பு பயிற்சி ஆடைகள் வழங்கி கவுரவித்தனர்.

    மன்னார்குடி:

    சென்னையில் இந்தியன் புக் ஆப் வேல் ரெக்கார்ட் அமைப்பினர் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடத்திய சிலம்பு சுற்றும் சாதனை நிகழ்ச்சியில் மன்னார்குடி அருகே கோட்டூர் 8-ம் வகுப்பு மாணவன் சஸ்வின், கம்பங்குடி மாணவன் ஆர்ச் சுரேன்செல்வா ஆகிய இருவரும் 76 நிமிடம் 76 செகண்ட் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.

    இதையடுத்து கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமையில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் இருவருக்கும் சிலம்பு பயிற்சி ஆடைகள் வழங்கி கவுரவித்தனர். இந்நிகழ்ச்சியில் தற்காப்பு பயிற்சி பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் முத்துக்குமரன், லயன் சங்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், பாலா, சார்ஜ், மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்த ஆசிரியர் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தடகள போட்டியில் தங்கம் வென்ற மாணவி சீதளாதேவிக்கு பாராட்டு ெதரிவித்து பதக்கம் அணிவித்து கேடயம் வழங்கி கவுரவித்தார்.
    • தேவையான உதவிகளை செய்ய அரசும், ெதாண்டு நிறுவனங்களும், வசதி படைத்தவர்களும் முன்வர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பிரின்ஸ் லயன்ஸ் சங்கத்தினர், தஞ்சை ஈஸ்வரிநகர் பாரதியார் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராம் வித்யாஸ்ரமம் நர்சரி, பிரைமரி பள்ளியில் நடந்த 75-வது சுதந்திரதின விழாவில் பங்கேற்று நேபாள நாட்டில் நடந்த இண்டர்நேஷனல் தடகள 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் தங்கம் வென்ற தஞ்சை மானோஜிப்பட்டியை சேர்ந்த மாணவி சீதளாதேவிக்கு, பதக்கம் அணிவித்து கேடயம் வழங்கி கவுரவித்தார்.

    சங்க தலைவர் ேசாமசுந்தரம் பல்வேறு போட்டிகளில் வென்ற ஸ்ரீராம் வித்யாஸ்ரமம் நர்சரி, பிரைமரி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.இதன் தொடர்ச்சியாக நேபாள நாட்டில் நடந்த தடகள போட்டியில் தங்கம் வென்ற மாணவி சீதளாதேவிக்கு, பாராட்டு ெதரிவித்து, பதக்கம் அணிவித்தும், கேடயம் வழங்கியும் கவுரவித்தார். அத்துடன் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இம்மாணவியை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அடுத்தடுத்து போட்டிகளில் முன்னேறி செல்வதற்கும், மேலும் பல பதக்கங்களை வெல்லவும், வாழ்த்தியதுடன் இவருக்கு தேவையான உதவிகளை செய்ய அரசும், ெதாண்டு நிறுவனங்களும், வசதி படைத்தவர்களும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    விழாவில் மாவட்ட நிர்வாக அலுவலர் லயன் டாக்டர் ஸ்டாலின், ஸ்ரீராம் வித்யாஸ்ரமம் பள்ளி தாளாளர் ராமதாஸ், தலைமை ஆசிரியை சாந்தி ராமதாஸ், சங்க மண்டல தலைவர் சிவக்குமார், வட்டார தலைவர் செல்வராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டியன், முன்னாள் தலைவர்கள் டாக்டர் பழனிவேல், சந்தானக்குமார், செல்லப்பன், சிவகாமி செல்லப்பன், ேமாகனப்பிரியா ஸ்டாலின் மற்றும் லயன் சுகுமார், புவனேஸ்வரி ஆகியோர் வாழ்த்துைர வழங்கினர்.

    முன்னதாக சங்க செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். பொருளாளர் என்.சோமசுந்தரம் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை சக்திவேல் தொகுத்து வழங்கினார்.

    • தாய்ப்பால் வார நிகழ்ச்சியை முன்னிட்டு கர்ப்பிணிகளுக்கு துண்டு, பிஸ்கட், பேபி பவுடர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
    • கர்ப்பிணி பெண்கள் கீரைகள், பழங்களை சாப்பிட வேண்டும் என்றும் எடுத்து கூறினார்கள்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கர்ப்பிணிகளுக்கு துண்டு, பிஸ்கட், பேபி பவுடர் பொருட்கள் வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 1 முதல் 7 வரை தாய்ப்பால் வாரம் ஆகும். இதனை அடுத்து ஆங்காங்கே தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மதுக்கூர் ஒன்றியத்தி–ற்குட்பட்ட மதுக்கூர் வடக்கில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மதுக்கூர் அரிமா சங்கமும், மதுக்கூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவும் இணைந்து நடத்திய தாய்ப்பால் வார நிகழ்ச்சியை முன்னிட்டு கர்ப்பிணிகளுக்கு துண்டு, பிஸ்கட், பேபி பவுடர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு லயன் தலைவர் கோவிந்தராஜ் தலைமை ஏற்றார். மதுக்கூர் வடக்கு ஊராட்சி மன்ற தலைவர் என்.கே.ஆர். நாராயணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், சித்த மருத்துவர் கீதா, கிராம சுகாதார செவிலியர் பரமேஸ்வரி ஆகிய முன்னிலை வகித்தனர். சங்க பொருளாளர் சரவணன் வரவேற்றார்.

    இதில் பலர் தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து எடுத்து கூறினார்கள். கர்ப்பிணி பெண்கள் கீரைகள், பழங்களை சாப்பிட வேண்டும் என்றும் எடுத்து கூறினார்கள். இதை அடுத்து முக்கியஸ்தர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். இறுதியாக செயலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

    • மருத்துவர்கள் பங்களிப்பு, கொரோனா காலத்தில் அவர்களது அயராது பணியை பற்றி பாராட்டி பேசினார்.
    • தங்களின் வாழ்க்கையில் படிப்பு மற்றும் வேலை என்றே ஓடி கொண்டு இருந்ேதாம், இதுவரை இதுபோல் யாரும் தங்களை பெருமைபடுத்தியது இல்லை

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. மக்களின் உயிரினை காத்து சமூகங்களுக்கு ஆற்றி வரும் மருத்துவர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாகவும் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தின் முதுநிலை அஞ்சலக தலைவர் எஸ்அருள்தாஸ் தலைமையில் இந்நிகழ்ச்சி யானது நடத்த ப்பட்டது.

    இதில் மருத்துவர்கள் வி.தனபாலன், ரவீந்திரன், சாந்தி பவுல்ராஜ், ஏ.அஜந்தன், வி.மாரிமுத்து, இனியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களான கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினர்களுக்கு தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தின் முதுநிலை அஞ்சலக தலைவர் எஸ்.அருள்தாஸ் பொன்னாடை அணிவித்து மருத்துவ மேதை டாக்டர் பிதான் சந்திரராய் நினைவாக விருதுகள் வழங்கி, மருத்துவர்கள் பங்களிப்பு, கொரோனா காலத்தில் அவர்களது அயராது பணியை பற்றி பாராட்டி பேசினார்.

    நிகழ்ச்சியில் சிறப்புரை யாற்றிய மருத்துவர்கள் அனைவரும் கொரோனா காலத்தில் தங்களின் அனுபவ த்தையும், பங்களிப்பையும் பகிர்ந்து கொண்டதோடு தங்களின் வாழ்க்கையில் படிப்பு மற்றும் வேலை என்றே ஓடி கொண்டு இருந்ததாகவும் இதுவரை இதுபோல் யாரும் தங்களை பெருமைபடுத்தியது இல்லை எனவும், அவ்வாறு பெருமைப்படுத்திய தஞ்சை தலைமை அஞ்சலகத்திற்கு தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்.மேலும் இனிவரும் கொரோனா காலங்களில் எவ்வாறு நாம் இருக்க வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து எவ்வாறு காத்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினர்.

    நிகழ்ச்சியின் முன்னதாக மனமகிழ் மன்ற செயலாளர் வெங்கடேசன் வரவேற்புரை வழங்கினார்.தஞ்சை தலைமை அஞ்சலகத்தின் அலுவலர்கள் எஸ்.சித்ரா, வி.தேவிசௌதா ஆகியோர் மருத்துவர்களின் சிறப்புகள் குறித்து பேசினர். இதில் சிறுசேமிப்பு முகவர்கள் நீலகண்டன்,குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்முடிவில் தஞ்சாவூர் தலைமை அஞ்ச லகத்தின் துணை அஞ்சலக தலைவர் எம்.குழந்தைராஜ் நன்றி கூறினார்.

    ×