சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

இருவரும் 76 நிமிடம் 76 செகண்ட் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.மாணவர்கள் இருவருக்கும் சிலம்பு பயிற்சி ஆடைகள் வழங்கி கவுரவித்தனர்.
சாதனை படைத்த மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
சாதனை படைத்த மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
Published on

மன்னார்குடி:

சென்னையில் இந்தியன் புக் ஆப் வேல் ரெக்கார்ட் அமைப்பினர் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடத்திய சிலம்பு சுற்றும் சாதனை நிகழ்ச்சியில் மன்னார்குடி அருகே கோட்டூர் 8-ம் வகுப்பு மாணவன் சஸ்வின், கம்பங்குடி மாணவன் ஆர்ச் சுரேன்செல்வா ஆகிய இருவரும் 76 நிமிடம் 76 செகண்ட் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.

இதையடுத்து கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமையில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் இருவருக்கும் சிலம்பு பயிற்சி ஆடைகள் வழங்கி கவுரவித்தனர். இந்நிகழ்ச்சியில் தற்காப்பு பயிற்சி பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் முத்துக்குமரன், லயன் சங்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், பாலா, சார்ஜ், மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்த ஆசிரியர் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com