search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "guests"

    • மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம் வரவேற்புரை ஆற்றுகிறார்.
    • முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான காமராஜ் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றுகிறார்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. பொன்விழா நிறைவு விழா மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ரோட்டில் இன்று மாலை 5 மணி அளவில் தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்திற்கு அம்மா பேரவை இணை செயலாளர் ஆர். காந்தி தலைமை தாங்குகிறார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம் வரவேற்புரை ஆற்றுகிறார்.

    நிக்கல்சன் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் நன்றி உரை ஆற்றுகிறார்.

    இதில் முன்னாள் அமைச்சரும் அமைப்பு செயலாளருமான இரா. காமராஜ் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

    இதேபோல் தலைமை பேச்சாளர்கள் நள்ளாற்று நடராஜன், மணிமுரசு, ருத்ரா தேவி, தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேகர், முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் மலைஅய்யன், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மனோகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் நாராயணி ஜவகர் சக்திவேல், மாவட்ட பாசறை செயலாளர் அலெக்ஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கதிரவன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சங்கர், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அப்துல் அஜீஸ் ஆகியோரும் சிறப்புரையாற்றுகின்றனர்.

    இந்த கூட்டத்துக்கு மாவட்ட அவை தலைவர் திருஞானசம்பந்தம், முன்னாள் மேயர் சாவித்ரி கோபால், மாவட்ட துணை செயலாளர்கள் தவமணி மலையப்பன், பொன். முத்துவேல், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், மதுக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை செந்தில், திருவோணம் தெற்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், பேராவூரணி வடக்கு ஒன்றிய செயலாளர் துரை மாணிக்கம், தஞ்சை கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகத்தி கலியமூர்த்தி, பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் கல்யாண சுந்தரம், பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் மலை‌. முருகேசன், பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம், மதுக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் அருணாச்சலம், பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், முன்னாள் நகர செயலாளர் பஞ்சா பிகேசன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் நாகராஜன், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவர் புண்ணியமூர்த்தி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிங் ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிதுரை, கவிதா கலியமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் செல்வம், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கனகராஜ், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் உமாபதி, குடந்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மண்டல செயலாளர் திருநீலகண்டன், அதிராம்ப ட்டினம் பேரூர் செயலாளர் பிச்சை, வல்லம் பேரூர் செயலாளர் சசிகுமார், மதுக்கூர் பேரூர் செயலாளர் ஆனந்த், பேராவூரணி பேரூர் செயலாளர் நீலகண்டன், தஞ்சை மாநகராட்சி கவுன்சிலர்கள் கோபால், யு.என்.கேசவன், காந்திமதி நவநீதகிருஷ்ணன், கலைவாணி சிவகுமார், தெட்சிணாமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் முருகேசன், கீழவாசல் பகுதி சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

    • மருத்துவர்கள் பங்களிப்பு, கொரோனா காலத்தில் அவர்களது அயராது பணியை பற்றி பாராட்டி பேசினார்.
    • தங்களின் வாழ்க்கையில் படிப்பு மற்றும் வேலை என்றே ஓடி கொண்டு இருந்ேதாம், இதுவரை இதுபோல் யாரும் தங்களை பெருமைபடுத்தியது இல்லை

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. மக்களின் உயிரினை காத்து சமூகங்களுக்கு ஆற்றி வரும் மருத்துவர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாகவும் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தின் முதுநிலை அஞ்சலக தலைவர் எஸ்அருள்தாஸ் தலைமையில் இந்நிகழ்ச்சி யானது நடத்த ப்பட்டது.

    இதில் மருத்துவர்கள் வி.தனபாலன், ரவீந்திரன், சாந்தி பவுல்ராஜ், ஏ.அஜந்தன், வி.மாரிமுத்து, இனியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களான கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினர்களுக்கு தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தின் முதுநிலை அஞ்சலக தலைவர் எஸ்.அருள்தாஸ் பொன்னாடை அணிவித்து மருத்துவ மேதை டாக்டர் பிதான் சந்திரராய் நினைவாக விருதுகள் வழங்கி, மருத்துவர்கள் பங்களிப்பு, கொரோனா காலத்தில் அவர்களது அயராது பணியை பற்றி பாராட்டி பேசினார்.

    நிகழ்ச்சியில் சிறப்புரை யாற்றிய மருத்துவர்கள் அனைவரும் கொரோனா காலத்தில் தங்களின் அனுபவ த்தையும், பங்களிப்பையும் பகிர்ந்து கொண்டதோடு தங்களின் வாழ்க்கையில் படிப்பு மற்றும் வேலை என்றே ஓடி கொண்டு இருந்ததாகவும் இதுவரை இதுபோல் யாரும் தங்களை பெருமைபடுத்தியது இல்லை எனவும், அவ்வாறு பெருமைப்படுத்திய தஞ்சை தலைமை அஞ்சலகத்திற்கு தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்.மேலும் இனிவரும் கொரோனா காலங்களில் எவ்வாறு நாம் இருக்க வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து எவ்வாறு காத்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினர்.

    நிகழ்ச்சியின் முன்னதாக மனமகிழ் மன்ற செயலாளர் வெங்கடேசன் வரவேற்புரை வழங்கினார்.தஞ்சை தலைமை அஞ்சலகத்தின் அலுவலர்கள் எஸ்.சித்ரா, வி.தேவிசௌதா ஆகியோர் மருத்துவர்களின் சிறப்புகள் குறித்து பேசினர். இதில் சிறுசேமிப்பு முகவர்கள் நீலகண்டன்,குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்முடிவில் தஞ்சாவூர் தலைமை அஞ்ச லகத்தின் துணை அஞ்சலக தலைவர் எம்.குழந்தைராஜ் நன்றி கூறினார்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற திருமண விருந்தில் உணவு பரிமாறுவதற்கு உணவுத்தட்டுகள் இல்லாததால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பலியானார்.
    லக்னோ:

    நம் நாட்டில் திருமணம் என்பது வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. இந்த நிகழ்வினை அனைத்து உறவினர்களையும் அழைத்து மிக கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.

    பொதுவாக திருமண நிகழ்வுகளில் உறவினர்களிடையே சில சலசலப்புகள் ஏற்படுவதும் இயல்பான ஒன்றே. ஆனால், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் திருமண விருந்தில் உணவுத்தட்டுகள் இல்லாததால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரை பறிகொடுத்துள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம், விக்ராம்பூர் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற திருமண விருந்தில் கலந்து கொள்வதற்காக பலர் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு உணவு பரிமாறுவதற்கு உணவுத்தட்டுகள் இல்லாமல் போனதால் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறு சண்டையாக மாறியதில், விஷால் எனும் இளைஞர் பலியானார். மேலும் 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவுத்தட்டுக்காக ஏற்பட்ட சண்டையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×