search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா விற்றவர் கைது"

    • கிரிவாயன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் வாய்க்கால் ரோடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த கோபி அருகே மொடச்சூர் பகுதி அண்ணா நகரை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் கிரிவாயன் (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் கஞ்சா செடிகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
    • போலீசார் ராமர் என்ற ராம்முருகனை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு கோபி கொங்கரபாளையம் பகுதியை சேர்ந்த ராமர் என்ற ராம்முருகன் (வயது 38) என்பவர் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் கஞ்சா செடிகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் ராமர் என்ற ராம்முருகனை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 12 கஞ்சா செடிகள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
    • கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சித்தராஜை கைது செய்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த எரகனள்ளி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது கல்மண்டிபுரம் குட்டை அருகே ஒரு வாலிபர் பையுடன் நின்று கொண்டு இருந்தார். போலீசாரை கண்டதும் அவர் அங்கிருந்து செல்ல முயன்றார்.

    பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

    பின்னர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் கல்மண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த சித்தராஜ் (28) என்பதும்,

    விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. சுமார் 750 கிராம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சித்தராஜை கைது செய்தனர்.

    • ஈரோடு மது விலக்கு போலீசார் ரோந்து சென்றனர்.
    • சங்கர் என்ற நாராயணசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வளையக்கார வீதியில் ஈரோடு மது விலக்கு போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அப்பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்ற நாராயணசாமி (49) என்பவரை போலீசார் கைது செய்து,

    அவர் விற்பனைக்கு வைத்திருந்த 400 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    • லாட்டரி விற்றவர்களை போலீசார் அதிரடி சோதனை நடத்தி கைது செய்தனர்.
    • கைதானவர்களிடம் இருந்து பணம், போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள், லாட்டரி விற்றவர்களை போலீசார் அதிரடி சோதனை நடத்தி கைது செய்தனர்.

    அந்த வகையில் பர்கூர் மல்லபாடி பகுதியில் காதர்பாஷா (52), கிருஷ்ணகிரி அவ்வை நகர் பகுதியை சேர்ந்த அஜய் (21), ஓசூர் காடிபாளையம் பகுதியை சேர்ந்த மகபூப் (59), ஓசூர் டவுன் பகுதியில் சென்னமூர்த்தி (40) ஆகியோர் கைதாகினர்.

    இதேபோல சூளகிரி நல்லகானகொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (26), அஞ்செட்டி நாட்றாபாளையம் பகுதியை சேர்ந்த ரகுநாதன் (45), சிவண்ணன் (43), சபீர் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதேபோல பழைய குற்றவாளிகளான நாகரசம்பட்டி ஈஸ்வரி (37), வீரமலையை சேர்ந்த மனோ (40), தட்டக்கள் பகுதியை சேர்ந்த காவேரி (எ) அண்ணாமலை (57), காட்டுகொல்லையை சேர்ந்த சின்னையன் (60)ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஒரு சிறுவன் ஆகிய 2 பேர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை சுற்று வட்டார பகுதியில் கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்னை சத்யா தெருவில் மணிகண்டன் (வயது 22), அவருடன் ஒரு சிறுவன் ஆகிய 2 பேர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மணிகண்டனை சிறையில் அடைத்தனர். சிறுவனை அங்குள்ள சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    • கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்
    • 1400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

    திருச்சி:

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் பசுமை பூங்கா அருகே கஞ்சா விற்பனை செய்வதாக எடமலை பட்டி புதூர் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த புங்கனூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற மாயகிருஷ்ணன், மாதா கோவில் தெருவை சேர்ந்த வெள்ளை என்கிற தமிழரசன் (வயது26) ஆகியோர் கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து 1400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • மட்டப்பாறை பஸ்நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக விளாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேலும் அவரை கைது செய்தனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஜெயராஜ்(45).

    இவர் மட்டப்பாறை பஸ்நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக விளாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையில் போலீசார் விரைந்து சென்று ஜெயராஜை கையும், களவுமாக பிடித்து அவரிடம் இருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவுப்படி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    • கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    கடத்தூர் அருகே சூரன்கொட்டாய்பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 60).

    இவர் அந்தப் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சின்னசாமியை விசாரணை செய்தபோது அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சின்னசாமியை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வபுரம் அருகே உள்ள அசோக் நகரில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • 1 கிலோ கஞ்சா, ரூ.530 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கோவை :

    கோவை செல்வபுரம் அருகே உள்ள அசோக் நகரில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த பழனி அருகே உள்ள புலிகோட்டையூரை சேர்ந்த நல்லுசாமி (வயது 46) கூலித் தொழிலாளி என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, ரூ.530 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    போத்தனூர் போலீசார் மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மோகன் நகர் பாலத்துக்கு அடியில் கஞ்சாவை பதுக்கி விற்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த பிரவீன் (21) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கவுண்டம்பாளையம் அரசு பள்ளி அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற முல்லை நகரை சேர்ந்த கார்த்தி (22) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, அவரை ஜெயிலில் அடைத்தனர். 

    • கஞ்சா மற்றும் போதைப்பொருட்களுக்கு சில கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் அடிமையாகி வருகின்றனர்.
    • 7 பேரிடம் இருந்து மொத்தம் 550 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை:

    கோவையில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களுக்கு சில கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் அடிமையாகி வருகின்றனர். இதன் விற்பனையை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று போதை மாத்திரை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கோவை கடைவீதி, ரேஸ்கோர்ஸ், போத்தனூர் ஆகிய பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது உக்கடம் ஜி.எம். நகர் பாபா கார்னர் அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்த ஜி.எம். நகர் 2-வது வீதியை சேர்ந்த பவுருதீன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் 70 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோன்று, பாப்பநாயக்கன்பாளையம் பரமேஸ்வரன் லே-அவுட் அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட செல்வபுரம் இந்திரா நகரை சேர்ந்த சிவசூர்யா (26), சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர் ரோட்டை சேர்ந்த கிஷோர் குமார் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் 280 போதைமாத்திரைகள், ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போத்தனூர் ஜம் ஜம் நகரில் உள்ள மைதானத்தில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட போத்தனூர் மைல்கல் பகுதியை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (28), குனியமுத்தூர் காந்தி நகரை சேர்ந்த அப்துல் லத்தீப் (27), உக்கடத்தை சேர்ந்த ரஷீத் (33), போத்தனூர் பாரதி நகரை சேர்ந்த சாரூக்கான் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 200 போதை மாத்திரைகள், 3 ஊசிகள், மருந்துகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிளில் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 7 பேரிடம் இருந்து மொத்தம் 550 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஆனைகட்டி ரோட்டில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக தடாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் கஞ்சா விற்பனை செய்த மதுரையை சேர்ந்த அஜித்குமார் (வயது 21) என்பவரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை பெரியதடாகம் பிரிவு ஆனைகட்டி ரோட்டில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக தடாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனை செய்த மதுரையை சேர்ந்த அஜித்குமார் (வயது 21) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று பேரூர் பகுதியில் கஞ்சா விற்ற தனுஷ்கோடி (61) மற்றும் ெஜயசந்திரன் (70) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×