என் மலர்
நீங்கள் தேடியது "3 arrested person"
- ஆனைகட்டி ரோட்டில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக தடாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் கஞ்சா விற்பனை செய்த மதுரையை சேர்ந்த அஜித்குமார் (வயது 21) என்பவரை கைது செய்தனர்.
கோவை:
கோவை பெரியதடாகம் பிரிவு ஆனைகட்டி ரோட்டில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக தடாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனை செய்த மதுரையை சேர்ந்த அஜித்குமார் (வயது 21) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று பேரூர் பகுதியில் கஞ்சா விற்ற தனுஷ்கோடி (61) மற்றும் ெஜயசந்திரன் (70) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






