என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்றவர் கைது
- சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் கஞ்சா செடிகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
- போலீசார் ராமர் என்ற ராம்முருகனை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு கோபி கொங்கரபாளையம் பகுதியை சேர்ந்த ராமர் என்ற ராம்முருகன் (வயது 38) என்பவர் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் கஞ்சா செடிகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் போலீசார் ராமர் என்ற ராம்முருகனை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 12 கஞ்சா செடிகள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






