search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக சுகாதார மையம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 69 லட்சம் பேர் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
    • உருமாற்றம் அடைந்து கொண்டு வருவதால் இதுவரை தொற்று முடிவுக்கு வரவில்லை.

    கொரோனா... இந்த வார்த்தையை கேட்டாலே பயப்படாத யாவரும் இல்லை எனலாம்... 21-ம் நூற்றாண்டில் உலகத்தையே புரட்டிப்போட்ட மிகப்பெரிய கொடூர தொற்றாகும்.

    முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டு உலகத்தையே அஞ்ச வைத்தது. ஒட்டுமொத்த உலக மக்களையும் வீட்டிற்குள்ளேயே முடக்கியது. உலக பொருளாதாரம் தலைகீழாக சென்றது.

    இதுவரை உலக அளவில் 68,12,24,038 மக்களை கொரோனா தொற்றிக்கொண்டுள்ளது. 68,81,401 பேர் உயிரை குடித்துவிட்டது.

    தற்போது உலகம் சகஜ நிலைக்கு வந்துவிட்டாலும், கொரோனா முடிவுக்கு வரவில்லை. உருமாற்றம் அடைந்து அச்சுறுத்தியே வருகிறது.

    இந்த நிலையில் மீண்டும் உலகம் ஒரு பெருந்தொற்றுக்கு தயாராக வேண்டியது தேவை என உலக சுகாதார மைய தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த பெருந்தோற்றுக்கு தயாராக வேண்டியது தேவை. இது கொரோனா பெருந்தொற்றைவிட கொடியதாக இருக்கும்.

    கொரோனா உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவு என்பது உலகளாவிய கொரோனா சுகாதார அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தது என்பதில்லை.

    நோய் மற்றும் மரணத்தின் அளவை அதிக அளவில் ஏற்படுத்தும் மற்றொரு உருமாற்றம் அச்சுறுத்தல் உள்ளது. அடுத்த தொற்று நம் கதவை தட்டும்போது ஒன்றாக இணைந்து அதை எதிர்கொள்வதற்கு நாம் தயராக இருக்க வேண்டும்.

    76-வது உலக சுகாதார மாநாட்டில் டெட்ரோஸ் அதனோம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    • இந்தோனேசியாவில் திரவ மருந்துகளை உட்கொண்ட குழந்தைகள் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • இதன் எதிரொலியாக திரவ மருந்துகளுக்கு இந்தோனேசியா தடை விதித்துள்ளது.

    ஜகார்த்தா:

    ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலியானது தொடர்பாக சமீபத்தில் வெளியான தகவல்கள் உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரச்சினைக்குரிய இந்த மருந்துகளை இந்தியாவில் அரியானாவின் சோனிப்பட்டில் உள்ள மெய்டன் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

    இந்தோனேசியாவில் திரவ வடிவிலான மருந்துகளை சாப்பிட்ட சுமார் 100 குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், இந்தோனேசிய நாட்டில் அனைத்து விதமான திரவ மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி இந்தோனேசியா கூறுகையில், "திரவ வடிவிலான சில மருந்துகளில் கடுமையான சிறுநீரக காயத்தை ஏற்படுத்துகிற (நச்சு) பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டில் 99 இளம் குழந்தைகள் இறந்துள்ளன" என தெரிவித்தது.

    மேலும், இந்தோனேசிய சுகாதார மந்திரி புதி குணாதி சாதிகின் கூறுகையில், " 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சிறுநீரக காயம் ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு தரப்பட்ட மருந்துகளில (நச்சுத்தன்மை கொண்ட) டைதிலீன் கிளைகால் மற்றும் எத்திலீன் கிளைகால் அதிகளவு இருப்பது தெரியவந்துள்ளது" என தெரிவித்தார்.

    இந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டவையா அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையா என்பது குறித்து தகவல் இல்லை. 

    • குழந்தைகள் இறந்ததற்கு இந்திய நிறுவன தயாரிப்பான இருமல் மருந்துக்கு தொடர்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
    • 4 மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேற்கு ஆப்பிரிக்கா நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம் அந்த குழந்தைகள் உட்கொண்ட இருமல் மருந்து தான் இந்த உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக இதன் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறும் போது, "குழந்தைகள் இறப்புக்கு இந்தியாவில் தயாரான நச்சுத்தன்மை கொண்ட தரமற்ற 4 இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருக்கலாம் என அறியப்படுகிறது. இந்த குறிப்பிட்ட 4 மருந்துகளால் அவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்" என கருதப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார்.

    அரியானாவை சேர்ந்த மெய்டன் என்ற மருந்து நிறுவனம் சளி மற்றும் இருமலுக்காக புரோ மெத்சைன், முகா பெல்ஸ்மாலின் மகாப் மேக்தின் என்ற 4 மருந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது.

    இந்த மருந்தில் டயத்லைன் கிளை கோசில் மற்றும் எதிலன் கிளைகோசில் மூலப் பொருட்கள் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு இருப்பது குழந்தைகள் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது காம்பியாவை போல வேறு சில நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    குழந்தைகள் இறந்ததற்கு இந்திய நிறுவன தயாரிப்பான இருமல் மருந்துக்கு தொடர்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளதை தொடர்ந்து மத்திய அரசு இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் இதற்கான விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்த மருந்துகளை தயாரித்த மெய்டன் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    இந்த விவகாரத்தில் உண்மைகள் மற்றும் விவரங்களை கண்டறிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. முதல்கட்ட விசாரணையில் அந்த மருந்து நிறுவனம் குறிப்பிட்ட மருந்து தயாரிப்புகளுக்கு உரிமம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

    மேலும் இந்த நிறுவனம் இதுவரை காம்பியாவுக்கு மட்டுமே தயாரித்து ஏற்றுமதி செய்துள்ள விவரமும் தெரியவந்துள்ளது. விசாரணை முடிவில் தான் இதன் முழு விவரமும் தெரியவரும்.

    இந்தநிலையில் 4 மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ×