search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரபிரதேச அரசு"

    பசு பாதுகாப்பு பிரசார தூதராக நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.யுமான ஹேமமாலினியை உத்தரபிரதேச அரசு நியமனம் செய்துள்ளது. #HemaMalini #CowSevaAyog
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநில அரசு பசுக்களை பாதுகாப்பதற்காக ‘கவ் சேவா ஆயோக்’ என்ற பசு பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தனி அதிகாரம் கொண்ட அமைப்பாகும். பசுக்களை பாதுகாப்பது தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்கும்.

    இந்த அமைப்பு செயல்பட ரூ.647 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது இதன் பிரசார தூதராக நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.யுமான ஹேமமாலினியை மாநில அரசு நியமனம் செய்துள்ளது.

    பசுவை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரத்தில் ஹேமமாலினி ஈடுபடுவார். இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்ட ஹேமமாலினி பசுபாதுகாப்பு தொடர்பாகவும், விழிப்புணர்வு தொடர்பாகவும் தனது திட்டங்களை பசு பாதுகாப்பு அமைப்பின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். #HemaMalini
    உத்தரபிரதேசத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த அம்மாநில மந்திரிசபை கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது. #UPGovernment
    லக்னோ:

    பொருளாதாரரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலை தொடர்ந்து, மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டது. கடந்த 14-ந் தேதி முதல், இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வந்து விட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.

    இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த அம்மாநில மந்திரிசபை கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது. குஜராத், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே இதே முடிவை எடுத்துள்ளன.#UPGovernment
    உத்தர பிரதேசத்தில் ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்க இருப்பதாக தலைமைச் செயலாளர் அவானிஸ் தெரிவித்துள்ளார். #RamStatue #UP
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் கட்ட யோகி ஆதித்யாநாத் மற்றும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே ராமருக்கு உயரான சிலை அமைக்கப்படும் என்ற செய்தி உலாவந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அம்மாநில முதன்மை செயலாளர் (தகவல்) அவானிஷ் அவாஸ்தி இந்த செய்தியை உறுதி செய்துள்ளார்.

    ‘‘ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை நிறுவப்படும். இதில் அவரது உருவம் 151 மீட்டர் உயரத்திலும், அதற்கு மேல் குடை 20 மீட்டரிலும், பீடம் 50 மீட்டரிலும் இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

    அத்துடன் பீடம் பகுதியில் மியூசியம் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், ‘‘இந்த வேலையை தொடங்குவதற்காக ஐந்து நிறுவனங்களை தேர்வு செய்து முதல்வரிடம் தெரிவிக்கப்படும். அத்துடன் மணல் உறுதி சோதனை செய்யப்பட்டு வருகிறது’’ என்றார்.



    குஜராத் மாநிலத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி 182 மீட்டர் உயர சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை மோடி திறந்து வைத்தார். இந்த சிலையை விட உயரமான சட்டசபை கட்ட இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.   #RamStatue #UP
    ×