search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டி முர்ரே"

    • மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, இத்தாலியின் மேட்டியோ பிரெட்டெனியுடன் மோதினார்.

    இதில் ஆண்டி முர்ரே முதல் செட்டை 4-6 என இழந்தார். இதனால் சுதாரித்த முர்ரே அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த 2வது சுற்றில் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, ரஷிய வீரர் ஆண்ட்ரூ ரூப்லெவுடன் மோதினார். இதில் ரூப்லெவ் 7-6 (7-3), 6-1 என்ற செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் கரன் கச்சனாவ், பிரேசில் வீரர் தியாகோ செய்போத்துடன் மோதினார். இதில் தியாகோ 6-1, 7-5 என்ற செட்களில் கச்சனாவை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே தோல்வி அடைந்தார்.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, பிரெஞ்சு வீரர் யூகோ ஹம்பர்ட்டுடன் மோதினார்.

    இதில் ஹம்பர்ட் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் ஆண்டி முர்ரே தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் முன்னணி வீரர் ஆண்டி முர்ர்ரே தோல்வி அடைந்தார்.
    • ஜோகோவிச், ரூப்லேவ், சின்னர் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

    மெல்போர்ன்:

    டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    தொடக்க நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் தரவரிசையில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச், ஆண்டி ரூபலேவ், சின்னர் ஆகியோர் வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    இந்நிலையில், முன்னணி வீரரான இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, அர்ஜெண்டினா வீரர் தாமஸ் மார்ட்டினுடன் மோதினார். இதில் தாமஸ் 6-4, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று முர்ரேவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபனில் ஸ்பெயின் வீரரிடம் ஆண்டி முர்ரே தோல்வி அடைந்தார்.
    • முன்னணி வீரர்களான நடால், ஸ்வரேவ், கேஸ்பர் ரூட், மெத்வதேவும் வெளியேறி உள்ளனர்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரே, ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாவ்டிஸ்டா அகுட்டுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய பாவ்டிஸ்டா 6-1, 6-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    முன்னணி வீரர்களான ரபேல் நடால், ஸ்வரேவ், கேஸ்பர் ரூட், மெத்வதேவ் ஆகியோர் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • செர்பியாவின் ஜோகோவிச் முதல் சுற்றில் ஸ்பெயினின் கார்பெலசை எளிதில் வென்றார்.
    • இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, இத்தாலியின் மேட்டியோ பெரெட்னியை வீழ்த்தினார்.

    மெல்போர்ன்:

    நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான 111-வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் கார்பெலசுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-0 என எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், இங்கிலாந்தின் முன்னணி டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே, இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்னியுடன் மோதினார்.

    பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆண்டி முர்ரே 6-3, 6-3, 4-6, 6-7 , 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • ஆண்டி முர்ரேவை வீழ்த்திய இத்தாலி வீரர் பெரெட்டினி 4-ம் சுற்றுக்குள் நுழைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே, இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டிஸ் பெரெட்டினி ஆகியோர் மோதினர்.

    முதல் 2 செட்களில் தோல்வி அடைந்த ஆண்டி முர்ரே மூன்றாவது செட்டை தனதாக்கினார். நான்காவது செட்டை பெரெட்டினி வென்றார்.

    இறுதியில், 6-4, 6-4, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் ஆண்ட் முர்ரேவை வென்ற பெரெட்டினி நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2வது ஆண்டி முர்ரே வெற்றி பெற்றார்.
    • ஆண்டி முர்ரே அமெரிக்க வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 2வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே, அமெரிக்காவின் எமிலோ நாவாவைச் சந்தித்தார். முதல் செட்டை கோட்டை விட்ட ஆண்டி முர்ரே அடுத்த மூன்று செட்டையும் தனதாக்கினார்.

    இறுதியில், ஆண்டி முர்ரே 5-7 6-3 6-1 6-0 என்ற கணக்கில் வென்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டிஸ் பெரெட்டினி, பிரான்சைச் சேர்ந்த ஹியூகோ கிரெய்னியரைச் சந்தித்தார்.

    இதில், 2-6, 6-1, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்ற பெரெட்டினி மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

    • ஆண்டி முர்ரே முதல் சுற்றில் அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை வீழ்த்தினார்.
    • ரஷியாவின் மெத்வதேவ் அமெரிக்க வீரர் ஸ்டீபன் கோஸ்லோவை வீழ்த்தினார்.

    நியூயார்க்:

    ஆண்டுதோறும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் போட்டிகள் முடிந்துவிட்டன. ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று தொடங்கியது.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவுடன் மோதினார்.

    இதில், முர்ரே 7-5, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இதேபோல், ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் ஸ்டீபன் கோஸ்லோவுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-2, 6- 4, 6- 0 என்ற செட்கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    ×