search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர் மரணம்"

    மீஞ்சூர் அருகே மதுபோதையில் கோவில் குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரில் உள்ள பச்சையம்மன் கோவில் அருகே குளம் உள்ளது. இந்த குளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் பிணமாக கிடந்தது மீஞ்சூரை அடுத்த ராமரெட்டி பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பது தெரிந்தது.

    மது போதைக்கு அடிமையான அவர் அடிக்கடி மனைவி சுஜாதாவிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுஜாதா கடந்த மாதம் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

    இந்த நிலையில் மதுபோதையில் வந்த சுரேஷ் கோவில் குளத்தில் மூழ்கி இறந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேவகோட்டையில் ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள தென்னீர்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி (வயது 47), ஆட்டோ டிரைவர்.

    தேவகோட்டை ராம் நகர் பகுதியில் உள்ள நிறுத்தத்தில் இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று காலை காசி வழக்கம் போல் ஆட்டோ ஓட்டச் சென்றார்.

    இந்த நிலையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே உள்ள மரத்தில் ஆட்டோ மோதி நின்றதை அந்த வழியே சென்றவர்கள் நேற்று இரவு பார்த்தனர். அருகில் சென்று பார்த்தபோது காசி ரத்தக்காயங்களுடன் கிடந்தார்.

    அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், காசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அவர் தற்செயல் விபத்தில் சிக்கி இறந்தாரா? அல்லது யாராவது வாக னத்தை மோதி விபத்தை ஏற்படுத்தினார்களா? என்பது மர்மமாக உள்ளது.

    விபத்து குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடசேரியில் 8 பேர் கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்ட ஆட்டோ டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் தெலுங்கு செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 33). ஆட்டோ டிரைவர். இவரை நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த 8 பேர் கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியது. அவர்கள் சுப்பிரமணியனை அரிவாளாலும் வெட்டினர். இதில் சுப்பிரமணியன் பலத்த காயம் அடைந்து கீழே சரிந்து விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியனின் சகோதரரை அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கியுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனால் ஏற்பட்ட விரோதத்தில் சுப்பிரமணியனை, ரமேசும், அவரது உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்து தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியனை தாக்கியதாக ரமேஷ்(19), வேல்முருகன் (58), அவரது 14 வயது மகன், சதீஷ் (19), ராஜா (19), முகமது தமீம் அன்சாரி (19) உள்பட மொத்தம் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இவர்களில் ரமேஷ், வேல்முருகன், அவரது 14 வயது மகன் மற்றும் முகமது தமீம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற 4 பேரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் இன்று அதிகாலை 6.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து வடசேரி போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை கைது செய்யவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நொச்சிக்குப்பத்தில் 4-வது மாடியில் இருந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை நொச்சிக் குப்பம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 2-வது பிளாக்கில் வசித்து வந்தவர் பாரதி (42). ஆட்டோ டிரைவர்.

    இவர் நேற்று இரவு 12 மணி அளவில் தான் வசித்து வரும் வீட்டு மொட்டை மாடிக்கு சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார்.

    கைப்பிடிசுவரில் அமர்ந்திருந்த பாரதி திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி, பாரதியை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    கோவை அருகே ஆட்டோ டிரைவர் சுருண்டு விழுந்து மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை பேரூர் வெள்ளலூர் நால்வர் வீதியை சேர்ந்தவர் குமரவேல் (45). ஆட்டோ டிரைவர். இன்று காலை பீளமேடு போலீஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோவை நிறுத்தி விட்டு சவாரிக்காக காத்திருந்தார்.

    அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் மாரடைப்பால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×