என் மலர்
செய்திகள்

நொச்சிக்குப்பத்தில் 4-வது மாடியில் இருந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலி
நொச்சிக்குப்பத்தில் 4-வது மாடியில் இருந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை நொச்சிக் குப்பம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 2-வது பிளாக்கில் வசித்து வந்தவர் பாரதி (42). ஆட்டோ டிரைவர்.
இவர் நேற்று இரவு 12 மணி அளவில் தான் வசித்து வரும் வீட்டு மொட்டை மாடிக்கு சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார்.
கைப்பிடிசுவரில் அமர்ந்திருந்த பாரதி திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி, பாரதியை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story






